Sunday, 29 January 2017

Daily Current Affairs For Competitive Exam - 29th & 30th January

உலகம்:

சிரியாவுக்கு மீண்டும் படைகளை அனுப்ப ரஷ்யா திட்டம்
சிரியா அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறதுரஷ்யவிமானப்படையின் உதவியுடன் கிளர்ச்சிப் படைகளின் தலைமையிடமானஅலெப்போ நகரை அதிபர் ஆசாத் அண்மையில் கைப்பற்றினார்இதைத்தொடர்ந்து சிரியாவில் முகாமிட்டிருந்த ரஷ்ய போர் விமானங்கள்போர்க்கப்பல்கள் மீண்டும் தாய்நாட்டுக்கு திரும்பின.


ரஷ்யாஈரான்துருக்கி நாடுகளின் ஏற்பாட்டில் அதிபர் ஆசாத் தரப்புக்கும்கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில்அண்மையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றதுஇதில் எவ்விதஉடன்பாடும் எட்டப்படவில்லை.
இதைத் தொடர்ந்து சிரியாவுக்கு மீண்டும் போர் விமானங்கள்போர்க்கப்பல்களைஅனுப்ப ரஷ்யா முடிவு செய்திருப்பதாக ரஷ்ய நாளிதழ் செய்திவெளியிட்டுள்ளது.
இதனால் சிரியாவில் மீண்டும் உள்நாட்டுப் போர் தீவிரமடையும் என்றுஅஞ்சப்படுகிறது.
இந்தியா:
குடியரசு தின நிறைவு விழாபாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சியில் பிரணாப்மோடி பங்கேற்பு
தில்லியில் குடியரசு தின நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற முப்படைவீரர்களின் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜிபிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
குடியரசு தினத்தையொட்டி கடந்த 26-ஆம் தேதி தில்லி ராஜபாதையில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தேசிய கொடி ஏற்றி வைத்துமுப்படை வீரர்களின்அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர்மாநிலங்கள் சார்பிலும்மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்சார்பிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தனஅத்துடன் பள்ளிகல்லூரிமாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடந்ததுகுடியரசு தின விழாவில்சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் முகமது பின் சையது அல் நஹ்யான்,  உக்ரைன் நாட்டின் முதலாவது துணைப் பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஸ்டீபன்குபியும் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து குடியரசு தின விழா இன்று நிறைவடைந்ததை குறிக்கும்வகையில் முப்படை வீரர்கள் பாசறைக்கு திரும்பும் கோலாகல நிகழ்ச்சி தில்லிவிஜய் சதுக்கத்தில் நடைபெற்றதுஇந் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜிதுணை குடியரசுத் தலைவர் அமீது அன்சாரிபிரதமர் நரேந்திர மோடிஉள்ளிட்டோர் பங்கேற்றனர்.
"உஜாலாதிட்டம்பிகாரில் 1 கோடி மலிவு விலை எல்இடி பல்புகள்வினியோகம்
பிகாரில்மின்சாரத்தை சேமிக்கும் 1 கோடிக்கும் மேற்பட்ட எல்இடிமின்விளக்குகள் மலிவு விலையில் பொதுமக்களிடம்விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்சார சிக்கனத்தை வழங்கக்கூடிய "எல்இடிவிளக்குகளை பொதுமக்கள்பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம்எரிசக்தியை மிச்சப்படுத்த "மலிவுவிலை எல்இடி பல்புகள் மூலம் உன்னத வாழ்வு' (உஜாலாஎன்ற திட்டத்தைமத்திய அரசு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டத்தின்படிமத்திய அரசுக்குச் சொந்தமான "எனர்ஜி எஃபிஷியன்ஸிசர்வீஸஸ்' (இஇஎஸ்எல்நிறுவனம் "எல்இடிவிளக்குகளைத் தயாரித்து மாநிலஅரசு அமைப்புகள் மூலம் மலிவு விலையில் வினியோகித்து வருகிறது.
பிகார் மாநிலத்தில் இந்த மின்விளக்குகள் ரூ.70 ரூபாய்க்கு கடந்த ஆண்டு மார்ச்மாதம் முதல் ரூ.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகம்:
கூடங்குளத்தில் 6 உலைகள் மட்டுமே சாத்தியம்ஆர்.எஸ்சுந்தர் உறுதி
திருநெல்வேலி மாவட்டம்கூடங்குளத்தில் இந்திய-ரஷிய கூட்டு ஒப்பந்தப்படி 6 உலைகள் மட்டுமே அமைக்க அனுமதி உள்ளதுகூடுதல் உலைகள்அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று வளாக இயக்குநர் ஆர்.எஸ்சுந்தர்திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
கூடங்குளத்தில் உள்ள அணு மின் திட்ட வளாகத்தில் செய்தியாளர்களுக்கானஒருநாள் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றதுஇதில்அணு மின் திட்டவளாகத்தில் உள்ள முதல்இரண்டாம் உலை செயல்பாடுகள்இப்போதையநிலை மற்றும் 3, 4ஆவது உலைகளுக்கான கட்டுமானப் பணிஎதிர்காலத்திட்டங்கள்பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அனைத்து நடவடிக்கைகள் குறித்தும்செய்தியாளர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.
முதல்இரண்டாம் உலைகளின் நிலைய இயக்குநர் ஹெச்.என்சாஹுதலைமைக் கண்காணிப்பாளர் எஸ்.விஜின்னாதலைமைக் கட்டுமானப்பொறியாளர் எஸ்ஜெயகிருஷ்ணன்பயிற்சி கண்காணிப்பாளர் ஆர்.எஸ்சாவந்த்விஞ்ஞானிகள் பிபண்டாரம்எஸ்திருநாவுக்கரசுஜேஆபிரகாம்ஜேக்கப்மனித வள மேம்பாட்டுப் பிரிவு முதுநிலை மேலாளர் ஜே.தேவப்பிரகாஷ் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
விளையாட்டு :
ஃபெடரருக்கு 18-ஆவது கிராண்ட்ஸ்லாம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர்சாம்பியன் பட்டம் வென்றார்இதன்மூலம் 18-ஆவது கிராண்ட்ஸ்லாம்பட்டத்தைக் கைப்பற்றினார் ஃபெடரர்.
20-ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த வீரரான ஃபெடரர்இன்றளவிலும் ஆடவர்ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் வரிசையில்முதலிடத்தில் உள்ளார்.
மெல்போர்னில் ஞாயிற்றுக்கிழமை 3 மணி, 37 நிமிடங்கள் நடைபெற்ற இறுதிச்சுற்றில் ரோஜர் ஃபெடரர் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின்ரஃபேல் நடாலை தோற்கடித்தார்.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த இறுதி ஆட்டத்தில் முதல் 4 செட்களை இருவரும் மாறி மாறி கைப்பற்றஆட்டம் 5-ஆவது செட்டுக்குநகர்ந்ததுவிறுவிறுப்பாக நடைபெற்ற அந்த செட்டின் முதல் கேமிலேயேநடாலிடம் சர்வீஸை இழந்தார் ஃபெடரர்இதனால் 5 கேம்களின் முடிவில் நடால்3-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்.
சையது மோடி பாட்மிண்டன் சிந்துசமீர் சாம்பியன்
சையது மோடி கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின்பி.வி.சிந்துசமீர் வர்மா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெளவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர்ஒற்றையர் இறுதிச் சுற்றில் சிந்து 21-13, 21-14 என்ற நேர் செட்களில்இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்காவை தோற்கடித்தார்.
ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் சமீர் வர்மா 21-19, 21-16 என்ற நேர் செட்களில்சகநாட்டவரான சாய் பிரணீத்தை தோற்கடித்தார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரணவ் சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடிசாம்பியன் பட்டம் வென்றதுஇந்த ஜோடி தங்களின் இறுதிச் சுற்றில் 22-20, 21-10 என்ற நேர் செட்களில் அஸ்வினி பொன்னப்பா-சுமீத் ரெட்டி ஜோடியைத்தோற்கடித்தது.
வர்த்தகம் :
பேமென்ட் வங்கி தொடங்க தபால் துறைக்கு ரிசர்வ் வங்கி அனுமதி
பேமென்ட் வங்கி தொடங்குவதற் கான இறுதி அனுமதியை தபால் துறைக்குரிசர்வ் வங்கி வழங்கி இருக்கிறதுஇதனை தபால் துறை உறுதிப்படுத்திஇருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் அனுமதி கிடைத்திருக்கிறதுதிட்டமிட்டபடி விரைவில்பேமென்ட் வங்கி செயல்படத் தொடங்கும் என தபால் துறையின் முக்கியஅதிகாரி ஒருவர் கூறினார்பார்தி ஏர்டெல் மற்றும் பேடிஎம் ஆகியநிறுவனங்களுக்கு பிறகு பேமென்ட் வங்கி தொடங்குவதற்காக முழுமை யானஅனுமதி இந்திய தபால் துறைக்கு கிடைத்துள்ளது.
இந்த வங்கியின் தற்காலிக தலைமைச் செயல் அதிகாரியாக ஏபி சிங் நியமனம்செய்யப்பட் டிருக்கிறார்பங்குவிலக்கல் துறை யின் இணைச் செயலாளராகஇருந்தவர்ஆதார் அமைப்பை உருவாக்கிய குழுவில் இவரும் ஒருவர்.
கடந்த 2015-ம் ஆண்டு 11 நிறு வனங்களுக்கு பேமென்ட் வங்கி தொடங்க ரிசர்வ்வங்கி கொள்கை அளவிலான அனுமதியை வழங் கியதுஇதில் மூன்றுநிறுவனங்கள் பேமென்ட் வங்கி தொடங்கும் திட்டத்தில் இருந்து விலகிவிட்டன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏர்டெல் நிறுவனம் பேமென்ட் வங்கியைசெயல்படுத்தியதுஇன்னும் சில மாதங்களில் பேடிஎம் பேமென்ட் வங்கியைதொடங்க திட்டமிட்டிருக்கிறதுஇதற்காக 400 கோடி ரூபாய் முதலீட்டை இந்தநிறுவனம் செய்திருக்கிறது.

No comments:

Post a Comment