Monday, 20 February 2017

Daily Current Affairs For Competitive Exam - 19th & 20th February

உலகம்:

மே மாதம் இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி
இலங்கையில் நடைபெறவுள்ள "புத்த பூர்ணிமாவிழாவில்கலந்துகொள்வதற்காகபிரதமர் நரேந்திர மோடிவரும் மே மாதம்அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.


புத்த பூர்ணிமா விழாபெளத்த நாடுகளில் ஆண்டுதோறும் மே மாதத்தில் வரும்முழு பெளர்ணமியை ஒட்டிய ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்பட்டுவருகிறது.
இந்த விழாவைவிசாக நாளாக .நாசபை அங்கீகரித்துள்ளதுஇந்நிலையில்பெளத்த நாடுகளில் ஒன்றான இலங்கை அரசுமுதல்முறையாக இந்த விழாவை,வரும் மே மாதம் 12-ஆம் தேதி கொண்டாடவுள்ளதுஇந்த விழாவில்பங்கேற்குமாறு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களுக்கு இலங்கை அரசுஅழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில்இந்த விழாவில் பங்கேற்பதை பிரதமர் மோடி உறுதிசெய்திருப்பதாகஇலங்கை அமைச்சர் விஜயதாசா ராஜபட்ச கூறியுள்ளார் என்றுகொழும்பில் இருந்து வெளியாகும் நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெறும் புத்த பூர்ணிமா விழாவில்இந்தியாசீனாஜப்பான்தாய்லாந்துகம்போடியாவியத்நாம்மியான்மர்லாவோஸ்திபெத்பூடான்,மங்கோலியா மற்றும் பெளத்த மதத்தைப் பின்பற்றும் நாடுகளைச் சேர்ந்தஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'விரைவில் புதிய குடியேற்றத் தடை சட்டம்': அமெரிக்க அதிபர் டிரம்ப்அறிவிப்பு
வெளிநாடுகளிலிருந்து முஸ்லிம்கள் அமெரிக்காவில் குடியேறுவதைக்கட்டுப்படுத்துவது தொடர்பாகப் புதிய சட்டம் விரைவில் இயற்றப்படும் என்றுஅதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள 7 நாடுகளிலிருந்து அமெரிக்காவருவதற்குத் தாற்காலிகத் தடை விதித்து டிரம்ப் அண்மையில் உத்தரவிட்டார்இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதையடுத்துஅதிபரின்உத்தரவுக்கு மாகாண முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளதுஅந்த இடைக்காலத் தடை உத்தரவை விலக்க வேண்டும் என்றுஅமெரிக்க மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
இந்த நிலையில்குடியேற்றத் தடை தொடர்பாக புதிய சட்டத்தை விரைவில்இயற்றப் போவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியா:
மார்ச்.13 முதல் சேமிப்புக்கணக்கில் கட்டுப்பாடு இன்றி பணம் எடுக்கலாம்ரிசர்வ் வங்கி அறிவிப்பு
வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து இன்று முதல் வாரத்திற்கு 50 ஆயிரம் வரைபணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையாக உயர்மதிப்புடைய பழைய 500 மற்றும்ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்ததுஇதற்குபதிலாக புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டுவெளியிடப்பட்டன.
ஆனால்தேவைக்கு ஏற்ப புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வராததாலும்சில்லறைத் தட்டுப்பாடு காரணமாகவும்ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்கள்பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வந்தனர்தங்களுடைய வங்கி சேமிப்புக்கணக்கில் உள்ள பணம் எடுப்பதற்காக வங்கிகளிலும்.டி.எம்.களிலும் மக்கள்நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இந்நிலையில்இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 8-ஆம் தேதிவாடிக்கையாளர்கள்தங்களது வங்கி சேமிப்புக் கணக்கில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பை தளர்த்திஅறிவித்ததுஅதன்படிவங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள்வாரத்துக்கு 24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு தளர்த்தியது.
தபால் நிலையங்களில் இனி கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்புதியமுறை அடுத்த மாதம் அமல்
தபால் நிலையங்களில் கடவுச்சீட்டுக்கு (பாஸ்போர்ட்விண்ணப்பிக்கும் புதியமுறை அடுத்த மாதம் அமலுக்கு வரவிருக்கிறது.
நாடு முழுவதும் பொது மக்களுக்கு கடவுச்சீட்டை அளிக்கும் பணியைவெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டு வருகிறதுஅதன்படிநாடு முழுவதும்தற்போது 38 கடவுச்சீட்டு அலுவலகங்களும், 89 கடவுச்சீட்டு சேவை அளிக்கும்மையங்களும் (பிஎஸ்கேசெயல்பட்டு வருகின்றனகடந்த 2016-ஆம் ஆண்டில்இந்த அலுவலகங்கள்மையங்கள் மூலம் 1.15 கோடி பேருக்கு புதிதாககடவுச்சீட்டுகளும்கடவுச்சீட்டு தொடர்பான சேவைகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இதனிடையேநாடு முழுவதும் இருக்கும் கடவுச்சீட்டு மையங்களின்பணிச்சுமையை குறைக்கும் வகையிலும்எளிதில் கடவுச்சீட்டுக்கு மக்கள்விண்ணப்பிக்க வசதியாகவும் தபால் நிலையங்களில் கடவுச்சீட்டுக்குவிண்ணப்பிக்கும் புதிய முறையை வெளியுறவு அமைச்சகம் அடுத்த மாதம்அமல்படுத்தப்படவுள்ளது.
நாகாலாந்து முதல்வர் திடீர் ராஜிநாமா
நாகாலாந்து முதல்வரும்நாகா மக்கள் முன்னணி கட்சியின் மூத்ததலைவருமான டி.ஆர்.ஜெலியாங்திடீரென ஞாயிற்றுக்கிழமை தனது பதவியைராஜிநாமா செய்தார்இந்தத் தகவலை அந்த மாநில முதல்வர் அலுவலகம்உறுதிப்படுத்தியது.
பாஜக-நாகா மக்கள் முன்னணி கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டம்திங்கள்கிழமை நடைபெற உள்ளதுஇந்தக் கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்வுசெய்யப்படுவார்.
இந்தக் கூட்டத்துக்கு முன்பு நாகாலாந்து ஜனநாயகக் கூட்டணியின்ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது.
நாகா மக்கள் முன்னணி தலைமையிலான நாகாலாந்து ஜனநாயகக் கூட்டணிஆட்சி நடைபெற்று வருகிறதுஅந்த மாநிலத்தில் நடைபெற இருந்த நகர்ப்புறஉள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்குஎதிர்ப்பு தெரிவித்து சில தினங்களுக்கு முன்பு பழங்குடியினர் போராட்டம்நடத்தினர்.
அவர்களைக் கலைக்க முயன்றபோது காவல் துறையினர் நடத்தியதுப்பாக்கிச்சூட்டில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்இதையடுத்துஇந்தசம்பவத்துக்குப் பொறுப்பேற்று மாநில முதல்வர் ஜெலியாங் பதவி விலகவேண்டும் என்று கோரி பழங்குடியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
பி.எஃப்தொகையைப் பெற இணையத்தில் விண்ணப்பிக்கும் முறை மேமாதம் அறிமுகம்
வருங்கால வைப்பு நிதி அமைப்பில் செலுத்திய பணம்ஓய்வூதிய முதிர்வுத்தொகைகாப்பீட்டுத் தொகை ஆகியவற்றை இணையதளம் மூலமாகவிண்ணப்பித்துப் பெறும் வசதிவரும் மே மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
தற்போது காப்பீட்டுத் தொகைமுதிர்வுத்தொகை ஆகியவற்றை கோரிசுமார்ஒரு கோடி விண்ணப்பங்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு(.பி.எஃப்.) கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்த விண்ணப்பங்களை .பி.எஃப்அமைப்பின் ஊழியர்கள் சரிபார்த்துசந்தாதாரர்களுக்கு உரிய தொகையை வழங்குவதற்கு கால தாமதமாகிறதுஎனவேஅவர்களுக்கு தாமதமின்றி சேவைகளை வழங்குவதற்காகஇணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் முறை அறிமுகம்செய்யப்படவுள்ளது.இதுகுறித்து.பி.எஃப்ஆணையர் வி.பி.ஜாய்கூறியதாவது:
அனைத்து .பி.எஃப்அலுவலகங்களும் இன்னும் இரண்டு மாதங்களில் மையக்கணினி அமைப்பு (சர்வர்மூலம் இணைக்கப்படும்அதன் பிறகுஅனைத்துவகையான விண்ணப்பங்களுக்கும் இணையதளம் மூலமாகவே சேவைகள்அளிக்கப்படும்.
இதற்காகமுதல் கட்டமாக, 50 மண்டல அலுவலகங்கள் தற்போது மையக்கணினி அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளனமொத்தமுள்ள 123 மண்டலஅலுவலகங்களும் மையக் கணினி அமைப்புடன் இணைக்கும் பணிகள்நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.
தமிழகம்:
முதல்வராகப் பொறுப்பேற்றார் பழனிசாமிஅனைத்து அமைச்சர்களும்பணிகளைத் தொடங்கினர்
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியைத் தொடர்ந்துமற்ற துறைகளின்அமைச்சர்களும் தங்களது பணிகளை திங்கள்கிழமை (பிப்.20) தொடங்கினர்.
இதையடுத்துகடந்த 15 நாள்களாக தமிழகத்தில் ஏற்பட்டு வந்த அரசியல்ரீதியான குழப்பங்கள் முடிவுக்கு வந்துதலைமைச் செயலகத்தில் இயல்பு நிலைதிரும்பியது.
சட்டப் பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில்அமைச்சரவை கடந்த சனிக்கிழமையன்று (பிப்.18) பெரும்பான்மையைநிரூபித்ததுஇதன் பின்முதல்வர் உள்பட அனைத்து அமைச்சர்களும் தங்களதுபொறுப்புகளை திங்கள்கிழமை ஏற்றுக் கொண்டனர்.
கோப்புகளில் கையெழுத்துமுதல்வராகப் பொறுப்பேற்க தலைமைச் செயலகம்வந்த எடப்பாடி கே.பழனிசாமிக்கு தலைமைச் செயலாளர் கிரிஜாவைத்தியநாதன்உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மாஉள்ளிட்டோர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதன் பின்முதல்வரின் அறைக்குச் சென்ற அவர் தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்முன்னதாகமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்குஅவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்அப்போதுஅதிமுக அவைத் தலைவர்பண்ருட்டி ராமச்சந்திரன்கொள்கை பரப்புச் செயலாளரும்மக்களவை துணைத்தலைவருமான மு.தம்பிதுரை உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.இதைத் தொடர்ந்துஅதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த பல்வேறுதிட்டங்களில் 5 முக்கிய திட்டங்களுக்கான கோப்புகளில் எடப்பாடி கே.பழனிசாமிகையெழுத்திட்டார்.
விளையாட்டு :
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சாகித் அப்ரிடி ஓய்வு
பாகிஸ்தான் ஆல் ரவுண்டரான சாகித் அப்ரிடி(36) சர்வதேச கிரிக்கெட்போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து கடந்த 2010-இல் ஓய்வு பெற்றுவிட்டார்இதனைதொடர்ந்து ஒரு நாள் போட்டிகளிலிருந்து 2015-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்கடந்த ஆண்டு டி20 போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து விலகியிருந்தார்.
இந்நிலையில் தனது 21 வருட சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடித்துகொள்வதாக அவர் அறிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக 37 பந்துகளில் சதமடித்தஅப்ரிடியை ’பூம் பூம்’ என்ற புனைப்பெயரில் ரசிகர்கள் அழைப்பதுண்டு.
பாகிஸ்தான் அணிக்காக 98 டி20 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ள அப்ரிடி1,405 ரன்கள் மற்றும் 97 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் உள்ளூர் கிரிக்கெட்தொடர்களில் அடுத்த 2 ஆண்டுகள் விளையாடத் திட்டமிட்டுள்ளதாக அப்ரிடிதெரிவித்துள்ளார்.
வர்த்தகம் :
டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் இன்று பதவியேற்பு
டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் செவ்வாய்க்கிழமைபதவியேற்கிறார்.
முன்னதாக தலைவர் பொறுப்பிலிருந்து சைரஸ் மிஸ்திரி கடந்த ஆண்டுநீக்கப்பட்டார்இதையடுத்துடாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தில் தலைமைப்பொறுப்பில் இருந்த என்.சந்திரசேகரன் (54) புதிய தலைவராக கடந்த ஜனவரிமாதம் 12-ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார்இந்நிலையில்அவர் தலைவராகதற்போது பொறுப்பேற்கிறார்.
"சந்திராஎன்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் அவர், 150 ஆண்டுகள்பாரம்பரியம் மிக்க டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் பார்சிஇனத்தைச் சாராத முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய பணி சவால் நிறைந்து என்று கருத்து தெரிவித்த அவர்அந்த சவாலைமாறுபட்ட வழிமுறையில் திறமையாக எதிர்கொண்டு வெற்றி பெறுவேன் என்றுநம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் டாடா ஸ்டீல் நிறுவனம் கையகப்படுத்திய கோரஸ் நிறுவனத்தின்செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவுக்கு பலனளிக்கவில்லைஇதையடுத்துஅந்நிறுவனத்தின் சொத்துகளை விற்கும் நடவடிக்கையில் டாடா ஸ்டீல்ஏற்கெனவே ஈடுபட்டுள்ளது.

No comments:

Post a Comment