இந்தியா:
இஸ்ரேல் , அமெரிக்காவுக்கு சவால்விடும் கார்ட்டோசாட்
இஸ்ரோ சார்பில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட கார்ட்டோசாட்செயற்கைக்கோள்கள் இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளுக்கே தொழில்நுட்பத்தில்சவால்விடும் வகையில் செயல்பட்டு வருகிறது.
கார்ட்டோசாட் விவரங்கள்:
கார்ட்டோசாட்-1: 2005 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி ஏவப்பட்டகார்ட்டோசாட் வரிசையின் முதல் செயற்கைக்கோளாகும். இந்தச்செயற்கைக்கோள் ஒட்டுமொத்த பூமியையும் 126 நாள் சுழற்சியில் 1867 சுற்றுப்பாதைகளில் படம்பிடித்து முடிக்கிறது.
புவிப்பகுதியை இக்கருவிகள் கருப்பு வெள்ளையில் முப்பரிமாணப் படங்களாகஎடுத்து வந்தன.
இந்தச் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்ட கேமராக்கள் ஒரே நேரத்தில்இரண்டு படங்களை எடுக்கும் திறன் கொண்டவை. இந்தச் செயற்கைக்கோளின்ஆயுள் காலம் முடிந்துவிட்டது.
அரசு இணையதள பக்கத்தில் இருந்து மோடி படத்தை நீக்க உத்தரவு
பிரதமரின் வீட்டு வசதித் திட்ட இணையதளப் பக்கத்தில் இருந்து பிரதமர் மோடி,மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆகியோரின் படங்களை நீக்குமாறு மத்தியஅரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, மக்களவைச் செயலர் பி.கே.சின்ஹாவுக்கு தேர்தல் ஆணையம்புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு:
பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்துக்கான இணையதளப் பக்கத்தில் பாஜகவைவிளம்பரப்படுத்தும் நோக்கத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் வெங்கய்யநாயுடு ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளதாகப் புகார் கிடைத்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் இந்தநேரத்தில், அவ்வாறு தலைவர்களின் படங்கள் இடம்பெறுவது தேர்தல் விதிமீறலாகும்.
எனவே, அந்த இணையதளப் பக்கத்தில் இருந்து மோடி, வெங்கய்ய நாயுடுஆகியோரின் படங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும். இதேபோல், மற்றதுறைகளின் இணையதளப் பக்கங்களிலும், இதுபோன்ற படங்கள்இடம்பெறாததை உயரதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும் என்று அந்த உத்தரவில்தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிகள் அமலுக்கு கடந்த ஜனவரி 4-ஆம்தேதிக்கு முன்பே, இதை ஏன் செய்யவில்லை என்றும் தேர்தல் ஆணையம்கேள்வி எழுப்பியுள்ளது.
பான் எண்ணுக்கு விண்ணப்பிக்க பிரத்யேக செயலி!
செல்லிடப்பேசி வாயிலாக வருமான வரி செலுத்தவும், பான் எண் வேண்டிவிண்ணப்பிப்பதற்கும் பிரத்யேக செயலி ஒன்றை மத்திய அரசு விரைவில்அறிமுகப்படுத்த உள்ளது.
இதுகுறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம்புதன்கிழமை கூறியதாவது: ஆண்டுதோறும் 2.5 கோடி பேர் நிரந்தரக் கணக்கு எண்(பான்) அட்டை வேண்டி விண்ணப்பிக்கின்றனர். நாடு முழுவதும் தற்போது 25 கோடிக்கும் அதிகமானோருக்கு பான் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுக்கும்போதும், ரூ.2 லட்சத்துக்கும்அதிகமாக பணம் செலுத்தும்போதும் பான் எண்ணை கட்டாயம் தெரிவிக்கவேண்டும் என்று மத்திய அரசு தற்போது அறிவுறுத்தியுள்ளது. அதன்அடிப்படையில் பான் எண்ணுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறையைஎளிமைப்படுத்தும் நோக்கில் புதிய செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டு வருகிறது.
மத்திய நிதியமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்த பிறகு அந்தச் செயலி விரைவில்பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். இந்தச் செயலியின் வாயிலாகவிண்ணப்பிப்பவர்களுக்கு அடுத்த சில நிமிடங்களுக்குள் பான் எண்வழங்கப்படும். ஆதார் சுய விவரங்களான கைவிரல் ரேகை, கருவிழிப் படலப்பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு பான் எண்வழங்கப்படும்.
விளையாட்டு :
'சிறந்த விளையாட்டு வீரர்' விருது வென்றார் உசேன் போல்ட்: வீராங்கனைபிரிவில் சைமன் பில்ஸ் தேர்வு
உலகின் மின்னல் வேக மனிதராக வர்ணிக்கப்படும் தடகள வீரர் உசேன் போல்ட், 2017-ஆம் ஆண்டுக்கான "சிறந்த விளையாட்டு வீரர்' விருதும், ரியோ ஒலிம்பிக்போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனைசைமன் பில்ஸ் "சிறந்த விளையாட்டு வீராங்கனை' விருதும் வென்றுள்ளனர்.
இதில் உசேன் போல்ட், 4-ஆவது முறையாக இந்த விருதை வென்றுள்ளதுகுறிப்பிடத்தக்கது. இதன்மூலம், இந்த விருதை 4 முறை வென்ற டென்னிஸ் வீரர்ரோஜர் ஃபெடரர், வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், அலைச் சருக்கு (சர்ஃப்)வீரர் கெல்லி ஸ்லேட்டர் ஆகியோரின் வரிசையில் உசேன் போல்ட்இணைந்துள்ளார்.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு "லாரஸ்' என்ற அமைப்பு ஆண்டுதோறும் விருது வழங்கி கெளரவித்து வருகிறது. விளையாட்டு உலகின் "ஆஸ்கார்' விருதாக மதிக்கப்படும் இந்த விருது, கடந்த2000-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், 2017-ஆம் ஆண்டுக்கான லாரஸ் விருது வழங்கும் விழாஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மொனாக்கோவில் செவ்வாய்க்கிழமை இரவுநடைபெற்றது. இதில் விளையாட்டு உலகத்தைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள்கலந்து கொண்டனர்.
2017-ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர் விருது, ஜமைக்கஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்டுக்கு வழங்கப்பட்டது.
வர்த்தகம் :
டாடா மோட்டார்ஸ் நிகர லாபம் 96% சரிவு
டிசம்பர் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 96 சதவீதம்சரிந்து ரூ.111.57 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.2,952கோடியாக நிகர லாபம் இருந்தது.
நிறுவனத்தின் விற்பனை 2.2 சதவீதம் சரிந்து ரூ.67,864 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.69,398 கோடியாக இருந்தது. இதன் காரணமாக இந்த பங்கு 4.60 சதவீதம் அளவுக்கு சரிந்தது. வர்த்தகத்தின் இடையே 7.34 சதவீதம் அளவுக்குசரிந்தது.
இந்த சரிவு காரணமாக நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5,993 கோடி அளவுக்குசரிந்தது. பிஎஸ்இ-யில் 12.42 லட்சம் பங்குகளும், என்எஸ்இ ஒரு கோடிபங்குகளும் வர்த்தகமானது.
No comments:
Post a Comment