உலகம்:
செபியின் பதவிக் காலம் குறைப்பு
இந்திய பங்குச் சந்தை ஒழுங்காற்று ஆணையத்தின் (SEBI) புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்ட அஜய் தியாகியின் பதவிக் காலத்தை மத்திய அரசு குறைத்துள்ளது.
செபி அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட அஜய் தியாகியின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அவரின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகள் குறைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அஜய் தியாகி செபியின் தலைவராக மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே நீடிப்பார் என்று அந்த தகவல்கள் தெரிவித்தன. எனினும், அஜய் தியாகின் பதவிக் குறைப்புக்கான காரணம் எதையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை.
இந்தியா:
எஸ்.கே. கவுல் உட்பட 5 நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இன்று பதவியேற்பு
உச்சநீதிமன்ற நீதிபதியாக எஸ்.கே.கவுல் உள்ளிட்ட 5 நீதிபதிகள் இன்று புதிதாக பதவியேற்றுக்கொண்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நவீன் சின்ஹா, கேரள உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மோகன் எம். சந்தானகவுண்டர், சட்டிஸ்கர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் குப்தா, மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அண்மையில் ஒப்பதல் அளித்தார்.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்ததையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதியாக எஸ்.கே.கவுல் உள்ளிட்ட 5 நீதிபதிகள் இன்று புதிதாக பதவியேற்றுக்கொண்டனர். அவர்கள் அனைருவக்கும், தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகம்
சட்டப்பேரவையின் அவை முன்னவராக செங்கோட்டையன் நியமனம்
தமிழக சட்டப்பேரவையின் அவை முன்னவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நாளை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையின் அவை முன்னவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளதாக, சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ வாட்டர் கழகத்தில் 322 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை மெட்ரோ வாட்டர் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 322 பொறியாளர், கணக்காளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Deputy Controller of Finance
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
பணி: Senior Accounts Officer
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
தகுதி: சிஏ தேர்ச்சியுடன் 5 மற்றும் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Engineer (Civil/ Mechanical)
காலியிடங்கள்: 113
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Assistant Engineer (Electrical)
காலியிடங்கள்: 45
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
தகுதி: பொறியியல் துறையில் எல்க்ட்ரிக்கல், எலக்ட்ராணிக்ஸ், எலக்ட்ராணிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Assistant
காலியிடங்கள்: 155
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அல்லது Office Automation, Data Entry Operator பிரிவில் சான்றிதழ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: அனைத்து பணிகளுக்கும் 01.07.2017 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, மதுரை. திருச்சி, கோவை மற்றும் சேலம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, மதுரை. திருச்சி, கோவை மற்றும் சேலம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.250. இதனை CMWSSB என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.chennaimetrowater.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
The General Manager, No.1, Pumping Station Road, Chinthadripet, Chennai- 600002
The General Manager, No.1, Pumping Station Road, Chinthadripet, Chennai- 600002
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.03.2017
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 13.03.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.chennaimetrowater.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.chennaimetrowater.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விளையாட்டு :
ஆசிய பாட்மிண்டன் போட்டி சிங்கப்பூரை வீழ்த்தியது இந்தியா
ஆசியா பாட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 4-1 என்ற கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தியது.
வியட்நாமில் உள்ள ஹோ சி மின் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, சிங்கப்பூரை எதிர்த்து விளையாடியது. முதலில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரணவ் ஜெர்ரி சோப்ரா, ஷிக்கி ரெட்டி ஜோடி 21-23, 17-21 என என்ற நேர் செட்டில் யோங் கய் டி ஹி, வெய் ஹன் டான் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
இதை தொடர்ந்து நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஷமீர் வர்மா 21-19, 21-16 என்ற நேர் செட்டில் கீன் யூ லோவை தோற்கடித்தார். ஆடவர் இரட்டையர் பிரிவில் மனுஅட்ரி, சுமித் ரெட்டி ஜோடி 21-12, 21-17 என்ற நேர் செட்டில் டேனி பாவா கிறிஸ் சான்டா, ஹென்ட்ரா வைஜெயா ஜோடியை வென்றது.
இதன் மூலம் இந்திய 2-1 என முன்னிலை வகித்தது. இதையடுத்து நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ரிதுபர்னா தாஸ் 23-21, 21-18 என்ற நேர் செட்டில் லியாங்கை வீழ்த்தினார்.
கடைசியாக நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வின் பொன்னப்பா, ஷிக்கி ரெட்டி ஜோடி 19-21, 21-17, 21-17 என்ற செட் கணக்கில் ரென் நியாங், ஜியா யிங் சி வாங் ஜோடியை தோற்கடித்தது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த கொரியாவை எதிர்கொள்கிறது.
வர்த்தகம் :
பங்குகளை திரும்ப வாங்க டிசிஎஸ் பரிசீலனை
நாட்டின் பெரிய ஐடி நிறுவன மான டிசிஎஸ், சந்தையில் வர்த்தக மாகும் பங்குகளில் கணிசமான பங்குகளை திரும்ப வாங்கும் திட் டத்தில் இருக்கிறது. நிறுவனத் தின் இயக்குநர் குழு, அடுத்த வாரத்தில் இது குறித்து விவா திக்க இருக்கிறது. இந்திய ஐடி நிறுவனங்களிடம் அதிக தொகை இருக்கிறது. பயன்படுத்தப்படா மல் இருக்கும் இந்த தொகை குறித்து பங்குதாரர்கள் தங்களது அச்சத்தை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாத இறுதி நிலவரப்படி டிசிஎஸ் வசம் ரூ.43,169 கோடி இருக்கிறது. அதனால் பங்குகளை திரும்ப வாங்கும் திட்டத்தை பரிசீலனை செய்வதாக டிசிஎஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு முக்கிய ஐடி நிறுவனமான காக்னிசென்ட் 340 கோடி டாலர் அளவுக்கு பங்குகளை திரும்ப வாங்குவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து டிசிஎஸ் நிறுவனமும் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஆனால் எவ்வளவு தொகைக்கு வாங்குகிறது என்னும் தகவலை வெளியிடவில்லை. 20-ம் தேதி நடக்கும் இயக்குநர் குழுவில் இந்த முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment