Tuesday, 28 February 2017

Daily Current Affairs For Competitive Exam - 27th - 28th February

உலகம் :

ஈரான் கடற்படைப் போர்ப் பயிற்சியில் ஏவுகணைகள் பரிசோதனை
ஈரான் தனது கடற்படைப் போர்ப் பயிற்சியின்போது நவீன ஏவுகணைகளை ஏவிபரிசோதித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


இதுகுறித்து ’ஃபர்ஸ்செய்தி நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: ’விலாயத் 95' என்ற பெயரில் தெற்குக் கடல் பகுதியில் நிகழ்த்தப்பட்டகடற்படைப் போர்ப் பயிற்சியின்போது ’நாஸர்என்ற ’குரூஸ்வகை ஏவுகணைவெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்க்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சர்ஹுசேன் டெஹ்கான் கூறினார் என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
மேலும், ’தஸ்னீம்செய்தி நிறுவனம் கூறுகையில், ’லேசர்கதிர்களின்வழிகாட்டுதலுடன் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் மற்றொரு வகைஏவுகணையும் கடற்படைப் போர்ப் பயிற்சியின்போது பரிசோதிக்கப்பட்டதுஎன்றதுரஷியாவின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை அடிப்படையாகக் கொண்டுஅந்த ஏவுகணை உருவாக்கப்பட்டதாக 2012-ஆம் ஆண்டே செய்திகள்வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏவுகணைகளின் நவீன ரகங்கள் எவ்வளவு தூரம் பாய்ந்து சென்றுஇலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை என்ற விவரங்கள்வெளியிடப்படவில்லை.
சூரியனுக்கு நாஸாவின் விண்கலம்அவிழுமா மூன்று (மர்மமுடிச்சு?
சூரியனுக்கு அடுத்த ஆண்டு விண்கலம் அனுப்பஅமெரிக்க விண்வெளி ஆய்வுமையம் (நாஸாதிட்டமிட்டுள்ளது.
சூரியன் குறித்து அந்த விண்கலம் மேற்கொள்ளவிருக்கும் ஆய்வுகள் மூலம்,அந்த நெருப்பு கோளத்தைச் சுற்றியுள்ள 3 மர்மங்களுக்கு விடை கிடைக்குமாஎன்பதுதான் விஞ்ஞானிகளிடையே தற்போது மிகப் பெரிய கேள்விக் குறியாகஉள்ளது.எனினும்இதுவரை இல்லாத அளவு நெருக்கத்தில் சென்றுஇந்த விண்கலம்சூரியனைக் குறித்து மேற்கொள்ளவிருக்கும் ஆய்வுஅந்த மர்ம முடிச்சுகளுக்குவிடை தருவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்கிறார் நாஸா விஞ்ஞானி எரிக்கிறிஸ்டியன்.
அமெரிக்க பட்ஜெட்ராணுவத்துக்கு கூடுதலாக ரூ.3.67 லட்சம் கோடி ஒதுக்கதிட்டம்
அமெரிக்க பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு கூடுதலாக 5,400 கோடி டாலர்(சுமார் ரூ. 3.67 லட்சம் கோடிஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்வெளியாகியுள்ளது.
பாதுகாப்புத் துறைக்கு கூடுதலாக 5,400 கோடி டாலர் (சுமார் ரூ.3.67 லட்சம் கோடி)ஒதுக்கப்படும் என்று வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர்திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்அதிகாரபூர்வ அறிவிப்புஅதிபர் டிரம்ப்பின் நாடாளுமன்ற உரையில் வெளியாகும் என்றார் அவர்.
முன்னதாகஅமெரிக்க மாகாண ஆளுநர்கள் சங்க மாநாடு அதிபர் டிரம்ப்தலைமையில் வாஷிங்டனில் திங்கள்கிழமை நடைபெற்றதுஅதில் டிரம்ப்கூறியதாவது:
நான் அதிபராகப் பதவியேற்ற பின்னர் வெளியாகவுள்ள முதல் பட்ஜெட் நாட்டின்பாதுகாப்புமக்களின் பாதுகாப்பு தொடர்பான பட்ஜெட்டாக இருக்கும்அந்த இருஅம்சங்களுக்கே நிதி அறிக்கையில் கூடுதல் அழுத்தம் கொடுக்கப்படும்வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கூடுதல் தொகை பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
பல ஆண்டுகளாகப் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல் நலிவுற்றுள்ள நமதுபாதுகாப்புப் படைகளை மீண்டும் வலுவான சக்தியாக மாற்ற அதிக நிதிஒதுக்கப்படும்முறையான அறிவிப்பை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின்கூட்டு அமர்வில் வெளியிடுவேன்.
இந்தியா:
நாட்டின் முதல் ’ஹெலிகாப்டர்நிலையம் தில்லியில் திறப்பு
நாட்டின் முதல் ஒருங்கிணைந்த ’ஹெலிபோர்ட்' (ஹெலிகாப்டர் நிலையம்), தில்லியில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
பொதுத் துறை நிறுவனமான ’பவான் ஹன்ஸ்நிறுவனத்தால்தில்லியில்ரோஹிணி பகுதியில் கட்டமைக்கப்பட்டுள்ள அந்த ஹெலிகாப்டர் நிலையம்தினமும் 150 பயணிகளை கையாளும் வசதியை கொண்டதுமேலும், 16 ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைக்கும் வகையிலான 4 மூடியகட்டுமானங்களும், 9 ஹெலிகாப்டர்களை நிறுத்தி வைக்கக் கூடிய திறந்தவெளிநிறுத்துமிடங்களும் உள்ளன.
இந்த ஹெலிகாப்டர் நிலையத்தைமத்திய விமானப் போக்குவரத்து துறைஅமைச்சர் அசோக் கஜபதி ராஜு செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தார்பின்னர்அவர் பேசியதாவது:
தெற்கு ஆசியாவிலேயே முதன் முறையாகஹெலிகாப்டர்களுக்கானஒருங்கிணைந்த நிலையம் தில்லியில் அமைக்கப்பட்டுள்ளதுஇந்தியாவைபொருத்தவரைஹெலிகாப்டர் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம்உள்ளது.
உலக அளவில் ஒப்பிடும்போதுநமது நாட்டில் உள்நாட்டு விமானப்போக்குவரத்து வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது என்றார் அசோக் கஜபதிராஜு.இந்த நிகழ்ச்சியில்விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த்சின்ஹாதில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால்பவான் ஹன்ஸ்நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குநர் பி.பி.சர்மா உள்ளிட்டோர்பங்கேற்றனர்.
சிஆர்பிஎஃப் தலைமை இயக்குநர் துர்கா பிரசாத் ஓய்வு
இந்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்தலைமை இயக்குநர்பதவியிலிருந்து துர்கா பிரசாத் செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றார்.
1981-ஆம் ஆண்டின் தெலங்கானா பிரிவு .பி.எஸ்அதிகாரியான துர்கா பிரசாத்சிஆர்பிஎஃப் தலைமை இயக்குநராக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்பதவியேற்றார்ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில்மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தை ஒடுக்கியதில் துர்கா பிரசாத்துக்கு பெரும்பங்கு உள்ளதாக சிஆர்பிஎஃப் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையேதாம் ஓய்வு பெறுவதற்கு முன்னதாகஅண்மையில் காஷ்மீரில்நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்து தில்லி எய்ம்ஸ்மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சிஆர்பிஎஃப் 45-வது படைப்பிரிவுகமாண்டர் சேத்தன் சீத்தாவை துர்கா பிரசாத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தலைமை இயக்குநர் பதவி காலிஇந்நிலையில்துர்கா பிரசாத் ஓய்வு பெற்றதைஅடுத்துசிஆர்பிஎஃப் அமைப்பின் புதிய தலைமை இயக்குநராக மத்திய அரசுயாரையும் நியமிக்கவில்லைஎனினும்தலைமை இயக்குநர் பதவியைகூடுதலாக கவனிக்குமாறு கூடுதல் தலைமை இயக்குநர் சுதீப் லக்தாக்கியாவைமத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
ஏர் இந்திய விமான போக்குவரத்து சேவைகள் நிறுவனத்தில் பணி
ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில்நிரப்பப்பட உள்ள 186 Store Agent, Office Agent, Handyman, Utility Agent cum Driver பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுஇதற்கு 10 மற்றும்பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 186
பணியிடம்மும்பை
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Store Agent - 84
2. Office Agent - 32
சம்பளம்மாதம் ரூ.14,610
3. Handyman - 63
சம்பளம்மாதம் ரூ.11,040
4. Utility Agent cum Driver - 07  
சம்பளம்மாதம் ரூ.14,040
வயதுவரம்பு: 01.02.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்றபிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.03.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதிஏப்ரல்மாதங்களில் நடைபெறலாம்.
மேலும் தகுதிபணி அனுவம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள்அறிய http://www.airindia.in/writereaddata/Portal/career/455_1_AIATSL_Adtv_MMD.PDF என்றஇணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளராக கோபால் பக்லே நியமனம்
மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளராக கோபால் பக்லே நியமனம்செய்யப்பட்டுள்ளார்மேலும் அவர் வெளியுறவு விளம்பரங்களுக்கான இணைச்செயலர் பொறுப்பையும் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபால் பக்லேஇஸ்லாமாபாத் நாட்டுக்கான துணைத் தூதராக கடந்த 2011-ஆம்ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார்மேலும் பாகிஸ்தான்ஆப்கானிஸ்தான்ஈரான் ஆகிய நாடுகளின் விவகாரங்களை கையாளும்வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளராகவும் கடந்த 2015-ஆம்ஆண்டு முதல் பணியாற்றி வந்தார்.
மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளராக பணியாற்றி வந்த விகாஸ்ஸ்வரூப்கனடா நாட்டுக்கான இந்திய தூதராக அண்மையில் நியமனம்செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த பொறுப்புக்கு புதிதாக கோபால் பக்லேநியமனம் செய்யப்பட்டுள்ளார்இதையடுத்து புதிய செய்தித் தொடர்பாளராகநியமிக்கப்பட்டுள்ள கோபால் பக்லேவுக்குவிகாஸ் ஸ்வரூப் வாழ்த்துதெரிவித்துள்ளார்.
கோபால் பக்லே விரைவில் அதிகாரப் பூர்வமாக பொறுப்பேற்பார் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய விண்வெளித் துறை ஆய்வகத்தில் டெக்னிக்கல் உதவியாளர்அதிகாரி பணி
மத்திய அரசு நிறுவனமான தேசிய விண்வெளித் துறை ஆய்வகங்களில்நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் உதவியாளர்டெக்னிக்கல் அதிகாரி மற்றும்முதுநிலை டெக்னிக்கல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளதுஇதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோடிகிரிமுடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.1/2017  தேதி: 24.02.2017
மொத்த காலியிடங்கள்: 28
பணியிடம்: கர்நாடகா
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Technical Assistant - 25
தகுதிபொறியியல் துறையில் மின் மற்றும் தொலைத்தொடர்பு அல்லது மின்மற்றும் மின்னணு பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.  
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200/4,600
பணி: Technical Officer - 01
தகுதிபொறியியல் துறையில் ஏரோநட்டிக்கல்விண்வெளி பொறியியல்துறையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் பி. அல்லது பி.டெக் முடித்திருக்கவேண்டும்.சம்பளம்மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200/4,600
பணி: Senior Technical Officer - 02
தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ்முடித்திருக்க வேண்டும்.வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.சம்பளம்மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
தேர்வு செய்யப்படும் முறைதிறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம்தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்றபிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.03.2017எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதிஏப்ரல்மே மாதங்களில் நடைபெறலாம்.
மேலும் முழுமையான விவரங்கள்அறிய http://www.nal.res.in/pdf/All%20India%20advt%20%20group%20III%20%204%20of%202016.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
இந்திய வனப் பணி தேர்வுயூபிஎஸ்சி அறிவிப்பு
இந்திய வனத்துறையில் 2017-18 ஆம் ஆண்டிற்கான பணியிடங்களைநிரப்புவதற்கான இந்திய வனப் பணி தேர்வுக்கான அறிவிப்பை யூபிஎஸ்சி எனஅழைக்கப்படும் மத்திய மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம்அறிவித்துள்ளதுஇதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடமிருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்110
பணி: Indian Forest Service Examination
தகுதிகால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல்தாவரவியல்வேதியியல்புவியமைப்பியல்கணிதம்இயற்பியல்புள்ளியியல் மற்றும்விலங்கியல் அல்லது விவசாயம்வனவியல் அல்லது பொறியியல் துறைகளில்பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு21 - 32க்குள் இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறைஎழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம்தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையம்தமிழகத்தில் சென்னைகோவைமதுரைதிருச்சிபுதுச்சேரி
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்றபிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.03.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி18.06.2017
மேலும் முழுமையான விவரங்கள்அறியhttp://www.upsc.gov.in/sites/default/files/Engl_IFS_2017_0.pdf என்றஇணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விளையாட்டு :
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்வெண்கலம் வென்றார் ஜிது ராய்
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஜிது ராய், 10மீ ஏர்பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம்தில்லியில் நடைபெற்று வரும் இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில்இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாகஆடவருக்கான 10மீ ஏர் பிஸ்டல் போட்டி செவ்வாய்க்கிழமைநடைபெற்றதுஇதில் 8 பேர் பங்கேற்ற இறுதிப் போட்டியில் ஜப்பானின்டோமோயுகி மட்சுடா மொத்தம் 240.1 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும்அவரைஅடுத்து வியத்நாமின் ஜுவான் வின் ஹோவாங் 236.6 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.
இந்திய வீரர் ஜிது ராய் மொத்தம் 216.7 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம்வென்றார்முதல் சுற்றில் 7-ஆவது இடத்தில் இருந்த ஜிது ராய், 2-ஆவது சுற்றில்98.7 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்துக்கு முன்னேறினார்.
இதையடுத்து நடைபெற்ற இறுதிச் சுற்றில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டஅவர்வெள்ளிப் பதக்க வாய்ப்பை சற்றே நெருங்கினாலும்பின்னர் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்தார்.
இந்திய மகளிர் ஹாக்கி தலைமை பயிற்சியாளராக ஜோயர்ட் மரைன்நியமனம்
இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கான தலைமை பயிற்சியாளராக நெதர்லாந்தைச்சேர்ந்த ஜோயர்ட் மரைன்  நியமிக்கப்பட்டுள்ளார்.
நெதர்லாந்து மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் பயிற்சியாளரான மரைன்,அடுத்த 4 ஆண்டுகளுக்கு இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக நீடிப்பார் எனஹாக்கி இந்தியா அமைப்பு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
அவருக்கான இணை பயிற்சியாளராக சக நாட்டவரான எரிக் வோனிக்நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஜோயர்ட் மரைன் கூறுகையில், ’இந்திய மகளிர் அணியின்பயிற்சியாளராகப் பணியாற்ற மிகுந்து ஆர்வத்துடன் உள்ளேன்நான் அறிந்தவரையில்இந்திய அணியினர் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் என்பதுடன்கடுமையாக உழைக்கக் கூடியவர்கள்.
உலக ஹாக்கியில் சக்தி வாய்ந்த ஒரு அணியாக தங்களை நிலைநாட்டிக்கொள்வதற்கான திறமை அவர்களுக்கு இருப்பதாக நம்புகிறேன்என்றார்.
வர்த்தகம் :
ஜிஎஸ்டி வரி ஜூலை 1 முதல் அமல்மத்திய அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் சரக்குசேவை வரி சட்டம் (ஜிஎஸ்டிவரும் ஜூலை 1 முதல்அமலுக்கு வருவதாக பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பை உறுதி செய்வதற்காக ஜிஎஸ்டிமசோதாவை மத்திய அரசு கொண்டுவந்ததுபெரும் போராட்டத்துக்குப் பிறகுஎதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் அந்த மசோதாநாடாளுமன்றத்தில்நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து நடந்து வந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ரூ.1.5 கோடிக்கும்குறைவாக விற்றுமுதல் ஈட்டும் நிறுவனங்களுக்கான வரி மதிப்பீடு மற்றும்வசூல் நடவடிக்கைகளில் 90 சதவீதத்தை மாநில அரசுகள் மேற்கொள்வதெனகூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதுஅதேபோன்று ரூ.1.5 கோடிக்கு அதிகமாகவிற்றுமுதல் ஈட்டும் நிறுவனங்களுக்கான வரி மதிப்பீடுவசூலிப்புநடவடிக்கைகளை மத்தியமாநில அரசுகள் சரிபாதியாக பிரித்துச்செயல்படுத்தவும் இசைவு தெரிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ரோமிங் கட்டணம் ரத்துஏர்டெல்அதிரடி அறிவிப்பு
ஜியோ வருகைக்குப்பின் தொலைத்தொடர்பு சந்தையில் தங்களைநிலைநிறுத்திக்கொள்ள வோடபோன்ஏர்டெல்ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள்புதுப்புது சலுகைகளை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில்முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றானஏர்டெல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கால் மற்றும்டேட்டாவுக்கான ரோமிங் கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளதுமேலும்வெளிநாடு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில்ரோமிங் கட்டணங்களை வழங்கவும் ஏர்டெல் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “நாங்கள் உள்நாட்டுரோமிங் கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம்” எனதெரிவித்துள்ளது

No comments:

Post a Comment