இந்தியா:
மின்னணு பணப் பரிமாற்ற கட்டணங்கள் குறையும்: அருண் ஜேட்லி
மின்னணுப் பணப் பரிமாற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், அதற்கான சேவைக் கட்டணங்கள் குறையும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது:
மின்னணுப் பணப் பரிமாற்றங்களுக்கான கட்டணங்களை நிர்ணயிக்க ரிசர்வவங்கி முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.மின்னணு பணப் பரிமாற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், அதற்கான சேவைக் கட்டணங்கள் குறையும் என்று உறுதியாக நம்பலாம்.
பணம் செலுத்துகை மற்றும் பட்டுவாடா சட்டத்தின்படி, ரூ.1,000-க்குள்ளானமின்னணுப் பரிவர்த்தனைக்கு 0.25 சதவீதமும், ரூ.2,000-க்கு மேற்பட்ட மின்னணுப்பரிவர்த்தனைக்கு 0.5 சதவீதமும் சேவைக் கட்டணம் நிர்ணயிக்க ரிசர்வ் வங்கிபரிசீலித்து வருகிறது.
பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பற்று அட்டைகளை (டெபிட் கார்டு)கொண்டு எரிபொருள் வாங்குவதற்கான சேவைக் கட்டணங்களை எண்ணெய்நிறுவனங்களே ஏற்கின்றன.
அதேபோல், ரயில் கட்டணங்களுக்கான மின்னணுப் பணப் பரிவர்த்தனைக்கட்டணங்களை மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. புதிய தொழில்நுட்பங்கள்அறிமுகம் ஆகி வரும் நிலையில், மின்னணுப் பணப் பரிமாற்றங்களுக்கானகட்டணங்களும் குறையும்.
மின்னணுப் பணப் பரிமாற்ற முறையைப் பயன்படுத்துமாறு மத்திய அரசின்ஊழியர்களுக்கு ஊக்கமளித்து வருகிறோம் என்றார் ஜேட்லி.
தமிழகம்:
முதல்வரின் கூடுதல் முதன்மைச் செயலர் சாந்த ஷீலா நாயர் ராஜினாமா
தமிழக முதல்வரின் கூடுதல் முதன்மைச் செயலராக இருந்த சாந்த ஷீலா நாயர்தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், முதலமைச்சரின்தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி பதவியில் இருந்து சாந்த ஷீலா நாயர் ராஜினாமாசெய்துள்ளார்.
2016ம் ஆண்டு முதல், முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரியாக இருந்த சாந்தஷீலா நாயர், திட்டக் குழுவின் தலைவராக இருந்தவர்.
தனது சொந்த காரணங்களுக்காக தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி பதவியைராஜினாமா செய்வதாக சாந்த ஷீலா நாயர் கூறியிருப்பதாகவும் தகவல்கள்தெரிவிக்கின்றன.
சாந்த ஷீலா நாயர் கூடுதல் முதன்மை செயலராக இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிஎன்றாலும், அவரது அனுபவமும், திறமையும் தனது அரசுக்கு தேவை என்பதால், அவருக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனிப்பிரிவு அதிகாரி பதவியைக்கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் அரசியல் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணனின்பதவிக் காலம் மார்ச் 31ம் தேதி வரை இருக்கும் நிலையில், கடந்த வாரம்அவரும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், இன்றுதனிப்பிரிவு சிறப்பு அதிகாரியும் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டு :
ஆப்ரிக்க கோப்பை கால்பந்து: கேமரூனுக்கு சாம்பியன் பட்டம்
ஆப்ரிக்க கோப்பை கால்பந்து போட்டியில் கேமரூன் அணி சாம்பியன் பட்டத்தைவென்றது. இறுதி ஆட்டத்தில் அந்த அணி எகிப்தை 2-1 என்ற கோல்கணக்கில்வென்றது.
ஆப்ரிக்க கோப்பைக்கான கால்பந்து போட்டி லிப்ரேவில்லி நகரில் நடந்தது. இதில்நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த இறுதிப் போட்டியில் எகிப்து அணியைஎதிர்த்து கேமரூன் ஆடியது. இப்போட்டியின் முதல் பாதி ஆட்டத் தில் எகிப்துஅணியின் கையே ஓங்கி இருந்தது.
ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் முகமது எல்னெனி அடித்த கோலின் மூலம்முன்னிலை பெற்ற எகிப்து அணி, அதன் பிறகு ஆட்டத்தை தங்கள்கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. கேமரூன் வீரர்கள் கோல் அடிப்பதற்காக செய்தமுயற்சிகளை எகிப்து வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் முதல் பாதிஆட்டத்தின் இறுதியில் எகிப்து அணி 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.
2-வது பாதி ஆட்டத்தில் புத்துணர்ச்சியுடன் ஆடிய கேமரூன் வீரர்கள், எகிப்துஅணியின் கோல்போஸ்ட் மீது அலை அலை யாக தாக்குதல்களை நடத்தினர். 59-வது நிமிடத்தில் இதற்கு பலன் கிடைத்தது.
சக வீரர் பாஸ் செய்து தந்த பந்தை தலையால் முட்டி கோலுக்குள் திணித்துகேமரூன் அணிக்கு சமநிலையை பெற்றுத்தந்தார் நிகோலோ கொலு. இருஅணிகளும் தலா ஒரு கோல் அடித்ததைத் தொடர்ந்து ஆட்டம் சூடுபிடித்தது. வெற்றிக்கான கோலை அடித்து தங்கள் அணிக்கு கோப்பையை பெற்றுத்தரும்முயற்சியில் இரு அணிகளின் வீரர்களும் தீவிரமாக ஈடுபட்டனர்.
வர்த்தகம் :
சுற்றுச் சூழலுக்கு ஏற்ற கார் தயாரிப்புக்காக டொயோடா, சுஸூகி ஒப்பந்தம்
ஜப்பானைச் சேர்ந்த முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங் களான டொயோடா,சுஸூகி நிறுவனங்கள் சூழலை பாதிக்காத கார் தயாரிப்பதற்காக ஒப்பந்தம்மேற்கொண்டுள்ளன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே இதற்கான பேச்சுவார்த்தையில்ஈடுபட்டிருந்தன, இந்த நிலையில் நேற்று இரு நிறுவனங்களும் கூட்டாகவெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுச் சூழல் பாதுகாப்பான கார்கள் மற்றும்வாகனங்களில் கூடுதல் பாது காப்பு தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்வதற்காக ஒப்பந் தம் மேற்கொண்டுள்ளதாக கூறப் பட்டுள்ளது. இந்தஒப்பந்தத்திற்கு இரண்டு நிறுவனங்களின் இயக் குநர் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் தகவல் தொழில்நுட்பங்களில் கூட்டாக இணைந்துசெயல்படவும், உதிரிபாகங்களை நிறுவனங்களுக்குள் பகிர்ந்து கொள்ளவும்முடியும். இதன் அடுத்த கட்டமாக இரண்டு நிறுவனங்களும் இணைந்துதிட்டங்களை மேற்கொள்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
சுஸூகி நிறுவனம் ஹைபிரிட் கார் வகைகளோ அல்லது எலெக்ட்ரிக் கார்,பேட்டரி கார்களையோ அதன் ஆலைகளில் தயாரிப்பதில்லை. டிரைவர் இல்லாதகார்களுக்கான தொழில்நுட்பத்தில் அந்த நிறுவனம் ஈடுபடவில்லை ஆனால்ஆட்டோமொபைல் துறை இவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.
இது தொடர்பாக பேசிய டொயோடா நிறுவனத்தின் தலைவர் அகியோ, இந்தஒப்பந்தத்தின் மூலம் டொயோடா எதிர்காலத்தில் நிறைய கற்றுக் கொள்ளும். எங்களது சவால்களும், திறமைகளும் மேலும் அதிகரித்துள்ளன என்றுகுறிப்பிட்டார்.
No comments:
Post a Comment