Sunday, 5 February 2017

Daily Current Affairs For Competitive Exam - 5th & 6th February


உலகம்:
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலராகிறார் அப்துல் பாசித்
இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக இருக்கும் அப்துல் பாசித் (58), பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலராக விரைவில் நியமிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலராக தற்போது ஐசாஸ் அகமது சௌதுரி உள்ளார். அவர், அமெரிக்காவுக்கான பாகிஸ்தானின் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார். 
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலராக அப்துல் பாசித்தை நியமிப்பது என்று அந்நாட்டு அரசு கொள்கை அளவில் முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பான அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியிடப்படலாம் என்றும் அந்த செய்திகள் கூறுகின்றன.
இதே பதவிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பும் அப்துல் பாசித்தின் பெயரை அந்நாட்டு அரசு பரிசீலித்தது. ஆனால், சில தொழில்நுட்ப காரணங்களால் அந்தப் பதவியில் அப்துல் பாசித் நியமிக்கப்படவில்லை. பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை செயலராக அப்துல் பாசித் நியமிக்கப்பட்டதும், அவருக்குப் பதிலாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக யாரை நியமிப்பது? என்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
ஹைதி நாடாளுமன்றத் தேர்தல்: ஜோவ்னல் மோய்ஸின் கட்சி வெற்றி
ஹைதி நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் ஜோவ்னல் மோய்ஸ் தலைமையிலான டெட் கேல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது.
ஹைதி நாட்டின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது.
இத்தேர்தலில் ஜோவ்னல் மோய்ஸின் டெட் கேல் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் இணைந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிக இடங்களைக் கைப்பற்றின.
முன்னதாக, கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது, வரலாறு காணாத முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, அந்தத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நாட்டில் சுமார் ஒன்றரை ஆண்டு காலம் அரசியல் ஸ்திரமற்ற தன்மை நிலவியது. இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது.
எனினும், இத்தேர்தலில் வெறும் 21 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர்.
அரசியல் கட்சிகள் போதுமான அளவில் பிரசாரம் மேற்கொள்ளாத காரணத்தாலும், தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்ற பொதுமக்களின் அவநம்பிக்கை காரணமாகவும், மிகக் குறைந்த அளவிலான வாக்குகள் மட்டுமே பதிவானதாகக் கூறப்பட்டது.
அமெரிக்காவின் தடைகளை மீறி ஏவுகணை சோதனை நடத்தியது ஈரான்
தங்களது நாட்டின் மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், அதையெல்லாம் மீறி ஏவுகணை சோதனை உள்பட பல்வேறு ராணுவ பயிற்சிகளை ஈரான் சனிக்கிழமை மேற்கொண்டது.
இதுபற்றி அந்நாட்டு ராணுவ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், எவ்வித அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் வகையில் ராணுவ பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், வடகிழக்கு மாகாணமான செம்னானில் இப்பயிற்சிகள் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பல்வேறு வகை ஏவுகணைகளும், ரேடார் செயல்பாடுகளும் பரிசோதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக ஐ.நா. தீர்மானத்தை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்ததாகவும், யேமனில் புரட்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் கூறி, ஈரான் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளிக்கிழமை புதிய பொருளாதாரத் தடைகளை விதித்தார். உலகிலேயே பயங்கரவாதத்துக்கு அதிக நிதியுதவி அளிக்கும் நாடு என்று ஈரான் மீது அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியா:
பிப்.8-இல் சர்வதேச அணுசக்தி பாதுகாப்பு கருத்தரங்கம்
தில்லியில் வரும் 8-ஆம் தேதி தொடங்கி 2 நாள்களுக்கு அணு சக்தி பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இந்தக் கரத்தரங்கை மத்திய அரசு நடத்துகிறது. இதில் சுமார் 100 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அணு சக்தி துறையுடன் இணைந்து வெளியுறவு அமைச்சகம் இந்தக் கருத்தரங்கை நடத்த உள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் இந்த கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
அணுசக்தி பாதுகாப்பு, அணு ஆயுதப் பரவல் தடுப்பு, அணுசக்தி சார்ந்த பயங்கரவாதத்தை ஒடுக்குவது ஆகியவை குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் பட்டதாரிகளுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அப்பரண்டீஸ் பயிற்சி மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Advertisement No: DR/TA2017 (1)
தேதி: 03.02.2017
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Trade Apprentice Attendant Operator (Chemical Plant) - 20
பணி: Laboratory Assistant (Chemical Plant)
  Quality Control - 10
சம்பளம்: பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.6,970 - 7,220
தகுதி: இயற்பியல், கணிதம், வேதியியல், தெழிலக வேதியியல் போன்ற துறைகளில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி காலம்: 18 மாதம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அணுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Chief Human Resource Manager,
Indian Oil Corporation Limited (AOD),
DIGBOI - 786171
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.iocl.com/download/Advt_AOCP_Digboi_03022017_R.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தமிழகம்:
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராஜிநாமா
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தார்.
இதுதொடர்பாக அவர் ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், "தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் பொறுப்பை ராஜிநாமா செய்கிறேன். ராஜிநாமாவை கனிவுடன் ஏற்றுக் கொண்டு டிசம்பர் 6-இல் நியமிக்கப்பட்ட அமைச்சர்களையும் விடுவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
2001-இல்...: டான்சி வழக்கு காரணமாக, மறைந்த ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருந்து 2001-ஆம் ஆண்டு செப்டம்பரில் விலக நேரிட்டது. அப்போது, பன்னீர்செல்வம் முதல் முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றார். வழக்குகளில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை 2002-ஆம் ஆண்டு பிப்ரவரியில் ராஜிநாமா செய்தார்.
2014-இல் மீண்டும்...: சொத்துக் குவிப்பு வழக்கு காரணமாக, முதல்வர் பதவியை தொடர முடியாத நிலை ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது. இதனால், 2014-ஆம் ஆண்டு செப்டம்பரில் முதல்வராக மீண்டும் பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம். 2015-ஆம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றம் வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுவித்தது. இதைத் தொடர்ந்து, தான் வகித்த முதல்வர் பதவியை மே மாதத்தில் ராஜிநாமா செய்தார் ஓ.பன்னீர்செல்வம்.
ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு...: முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016 டிசம்பர் 5-இல் மரணம் அடைந்தார். அன்றைய இரவே ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றது. இரு மாதங்கள் முதல்வராகப் பதவி வகித்த அவர், பிப்ரவரி 5-இல் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
முதல்வராகிறார் வி.கே.சசிகலா: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாகத் தேர்வு
அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக கட்சியின் பொதுச் செயலாளரான வி.கே.சசிகலா ஞாயிற்றுக்கிழமை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் தமிழக முதல்வராகிறார். அநேகமாக அவர் வரும் செவ்வாய்க்கிழமை (பிப்.7ஆம் தேதி) முதல்வராக பதவியேற்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் இ.மதுசூதனன் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் சட்டப் பேரவைத் தலைவராக அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் பெயரை முதல்வரும், அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் அதை வழிமொழிந்தனர். இதைத் தொடர்ந்து கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவராக வி.கே.சசிகலா ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியை கேட்டவுடன் வி.கே.சசிகலா கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவரை பன்னீர் செல்வம் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் வரவேற்றனர்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் பதவியையும் முதல்வர் பதவியையும் ஏற்குமாறு தம்மை பன்னீர் செல்வம் வற்புறுத்தி வந்ததாகவும் சசிகலா குறிப்பிட்டார்.
விளையாட்டு :
தேசிய டேபிள் டென்னிஸ்: சரத் கமல் 7-ஆவது முறையாக சாம்பியன்
தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரரான சரத் கமல் 7-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ஹரியாணா மாநிலம் மனேசரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் சரத் கமல் 11-8, 6-11, 11-9, 3-11, 11-8, 11-5 என்ற செட் கணக்கில் செளம்யஜித் கோஷை தோற்கடித்தார்.
மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் மதுரிகா 11-5, 11-9, 11-5, 12-10 என்ற நேர் செட்களில் 6 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்றவரான பௌலமி கடக்கை தோற்கடித்தார்.
ஆடவர் இரட்டையர் இறுதிச்சுற்றில் செளம்யஜித் கோஷ்-ஜுபின் குமார் ஜோடி 11-3, 7-11, 11-6, 8-11, 11-5 என்ற செட் கணக்கில் சுஷ்மித் ஸ்ரீராம்-அனிருபன் கோஷ் ஜோடியை தோற்கடித்து சாம்பியன் ஆனது. மகளிர் இரட்டையர் பிரிவில் அனின்திதா சக்ரவர்த்தி-சுத்ரிதா முகர்ஜி ஜோடி 11-8, 11-8, 4-11, 11-3 என்ற நேர் செட் கணக்கில் போலோமி கடக்-மெளதா தாஸ் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
கலப்பு இரட்டையர் பிரிவில் அர்ஜுன் கோஷ்-சுத்ரிதா முகர்ஜி ஜோடி 11-9, 11-5, 11-9 என்ற நேர் செட்களில் சனில் ஷெட்டி-பூஜா சஹஸ்ராபுதே ஜோடியை தோற்கடித்து சாம்பியன் ஆனது. சரத் கமலுக்கு ரூ.2.2 லட்சமும், மதுரிகாவுக்கு ரூ.1.2 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன.
ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ்: இந்திய ஆடவர் அணிக்கு தங்கம்
ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றது.
ஹாங்காங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் மலேசிய அணியைத் தோற்கடித்தது.
இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் செந்தில் வேலவன் 12-10, 11-0, 11-2 என்ற நேர் செட்களில் மலேசியாவின் ஆங் சாய் ஹன்னை தோற்கடித்தார்.
2-ஆவது ஆட்டத்தில் இந்தியாவின் அபய் சிங் 10-12, 7-11, 11-5, 14-12, 11-6 என்ற செட் கணக்கில் மலேசியாவின் டேரன் ராகுலைத் தோற்கடித்தார்.
இதன்மூலம் ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் 2-ஆவது முறையாக தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது இந்தியா. முன்னதாக 2011-இல் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகம் :
பழைய ரூபாய் வைத்திருந்தால் அபராதம்: மக்களவையில் மசோதா தாக்கல்
பணமதிப்பு நீக்கம் செய்யப் பட்ட பழைய ரூபாய் நோட்டு களை வைத்திருந்தால் அபராதம் விதிக்கும் மசோதா மக்கள வையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூ.500 மற்றும் 1000 நோட்டுகளை 10 எண்ணிக்கைக்கு மேல் வைத்திருந்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது.
கறுப்பு பண நடவடிக்கைகளை எல்லா வகையிலும் ஒழிக்க வேண்டும் என்பதற் காக இந்த மசோதா அறிமுகப் படுத்தப்படுகிறது என்று மக்கள வையில் இந்த மசோதாவை தாக் கல் செய்கையில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி குறிப்பிட்டார்.
5 மடங்கு அபராதம்
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் சட்டமாகும்பட்சத்தில் தனிநபர்கள் பழைய ரூபாய் நோட்டுகளில் 10 எண்ணிக்கை யிலும், நிறுவனங்கள் 25 எண் ணிக்கையில் ஆய்வுக்காக மட்டுமே வைத்திருக்க முடியும். முறை கேடாக வைத்திருந்தால் அது குற்ற மாகக் கருதப்பட்டு ரூ.10,000 அபராதம் அல்லது வைத்திருக்கும் தொகைக்கு ஈடாக 5 மடங்கு தொகையில், அதிகபட்சம் அபராதமாக வசூலிக்கப்படும்.
இந்த சட்டம் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பது, அதைக் கொண்டு வர்த்தகத்தில் ஈடுபடுவது, பரிவர்த்தனை செய் வது உள்ளிட்டவற்றை 2016 டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு தடை செய்கிறது. நீதிபதி முன்னி லையில் ஆஜர்படுத்தவும், அபராதம் விதிக்கவும் வகை செய்கிறது.

No comments:

Post a Comment