Friday, 3 March 2017

Daily Current Affairs For Competitive Exam - 3rd March

உலகம் :

பிரெக்ஸிட் மசோதாவில் திருத்தம் செய்ய பிரிட்டன் நாடாளுமன்றமேலவை தீர்மானம்பிரதமர் தெரசா மேவுக்குப் பின்னடைவு
ஐரோப்பிய யூனியனைவிட்டு பிரிட்டன் வெளியேற வகை செய்யும் பிரெக்ஸிட்மசோதாவில் திருத்தம் தேவை என்று அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையில்தீர்மானம் நிறைவேறியது.
ஆளும் கட்சிக்கு மேலவையில் பெரும்பான்மை கிடையாதுஇது பிரிட்டன்பிரதமர் தெரசா மேவுக்குத் தனிப்பட்ட தோல்வி என்றாலும்கூடஅரசு கவிழும்அபாயம் இல்லை.


இது பிரதமர் தெரசா மேவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
பிரெக்ஸிட் மசோதாவுக்கு நாடாளுமன்ற கீழவை ஏற்கெனவே ஒப்புதல்வழங்கிவிட்ட நிலையில்மேலவையில் அந்த மசோதா நிறைவேற்றப்படுவதுவெறும் சடங்காக கருதப்பட்டதுஇந்த நிலையில்மசோதா குறித்துநாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பின்போதுஐரோப்பியர்குடியேற்றம் தொடர்பாக மசோதாவில் முக்கியத் திருத்தம் கொண்டு வரப்படவேண்டும் என்று 358 எம்.பி.க்களும்திருத்தம் தேவையில்லை என்று அரசுக்குஆதரவாக 256 பேரும் வாக்களித்தனர்.
இந்தியா:
கப்பல் தகர்ப்பு ஏவுகணைநீர்மூழ்கியிலிருந்து ஏவி வெற்றிகரமாகசோதனை
எதிரி நாட்டு கப்பலை தகர்த்து அழிக்கும் ஏவுகணையை நீர்மூழ்கிக் கப்பலில்இருந்து செலுத்தி இந்தியக் கடற்படை வியாழக்கிழமை வெற்றிகரமாகசோதனை செய்தது.
இதன்மூலம்கடற்படைக்கு கூடுதல் பலம் சேர்க்கப்பட்டுள்ளதுஇந்தவெற்றியானது கடற்படைக்கு அடுத்தகட்ட பாய்ச்சல் ஆகும்.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்கூறப்பட்டுள்ளதாவது:ஸ்கார்பியன் வகையைச் சேர்ந்த 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் மும்பையில்உருவாக்கப்பட்டு வருகின்றனஅவற்றில் முதலாவதாக தயாரிக்கப்பட்டுள்ளகல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து எதிரி நாட்டு கப்பலை துல்லியமாகத்தாக்கி தகர்க்கும் ஏவுகணை பொருத்தப்பட்டு வியாழக்கிழமை சோதனைசெய்யப்பட்டது.
அரபிக் கடலில் இருந்து தரைதளத்தில் மிக தொலைதூரத்தில் நிர்ணயிக்கப்பட்டஇலக்கை இந்த ஏவுகணை துல்லியமாகத் தாக்கி தகர்த்தது என்று அந்தச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கிக் கப்பல்களை பிரெஞ்சு கடற்படை மற்றும் ஆற்றல்நிறுவனம் வடிவமைத்தது.
இணைய வழியில் ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய விரைவில்ஆதார் எண் கட்டாயம்
இணைய வழியில் ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதற்கு ஆதார் எண்கட்டாயமாக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாகரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரியொருவர்வியாழக்கிழமை கூறியதாவது:
ரயில்வே இணையதளம் வாயிலாக பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதற்குஆதார் எண் கட்டாயமாக்கப்பட உள்ளதுஅந்த தளத்தில் முதன்முறையாக பதிவுசெய்யும்போதுஆதார் எண்ணை குறிப்பிட்டாக வேண்டும்இந்த நடைமுறைவிரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.
தற்போதுசில இடைத் தரகர்கள் இணைய வழியில் போலியான பெயர்களில்முன்பதிவு செய்து பயணச்சீட்டுகளை பெற்று அவற்றை அதிக விலைக்கு வேறுநபர்களுக்கு விற்றுவிடுகின்றனர்.
ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்ட பின்புஇத்தகைய மோசடிகள்நடைபெறுவதற்கு வாய்ப்பில்லாமல் போகும்.
லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது தில்லி மெட்ரோ
மெட்ரோ வழித்தடம் அமைக்கும் பணியில் ஒரே மாதத்தில் "யுவடிவிலான 200 கர்டர்களை நிறுவியதன் மூலம் லிம்கா சாதனைப் புத்தகத்தில் தில்லி மெட்ரோரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சிஇடம் பிடித்துள்ளது.
நொய்டா மெட்ரோ ரயில் நிறுவனத்திற்காக (என்எம்ஆர்சிநொய்டா - கிரேட்டர்நொய்டா இடையேயான 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேம்பால ரயில்வேவழித் தடத்தை அமைக்கும் பணியை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம்(டிஎம்ஆர்சிமேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில்இதற்காக "யுவடிவமான சிமிண்ட் கான்கிரீட் கர்டர்களைஅமைக்கும் பணியில் டிஎம்ஆர்சி ஈடுபட்டு வருகிறதுஇந்நிலையில், 2.7 கிலோமீட்டர் தொலைவுக்கு 200 "யுவடிவிலான கர்டர்களை ஒரே மாதத்தில்நிறுவுவதற்கு டிஎம்ஆர்சி நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்துஇந்தியாவில் மெட்ரோ ரயில்வே வழித்தடம் அமைக்கும் பணிகள்நடைபெறும் இடங்களிலேயே ஒரே மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான "யுகர்டர்களை நிறுவிய நிறுவனமாக டிஎம்ஆர்சி லிம்கா சாதனைப் புத்தகத்தில்இடம் பெற்றுள்ளது.
இதையடுத்துஇதற்கான சான்றிதழ் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின்மேலாண்மை இயக்குநர் மங்கு சிங்கிடம் "லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்நிறுவனத்தின் உதவி ஆசிரியர் ஸ்மிதா ஜோசப் வியாழக்கிழமை வழங்கினார்.
மத்திய அரசு பணிக்கு 2.80 லட்சம் பேர் தேர்வு
மத்திய அரசு பணிகளுக்கு 2.80 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்இவர்களில் சுமார் 2 லட்சம் பேர் மத்திய அரசின் காவல்வருமானவரி மற்றும்சுங்கத்துறைகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் தற்போது சுமார் 33 லட்சம் ஊழியர்கள்உள்ளனர்தற்போது வருமான வரித்துறையில் சுமார் 46 ஆயிரம் ஊழியர்களேஉள்ளனர்இந்த எண்ணிக்கை 80 ஆயிரமாக அதாவது இரட்டிப்பாக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதுஅடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கூடுதல் ஊழியர்கள்தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல துறைகளில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாகஇருப்பதால் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படுட்டு வருவதையடுத்துஅவற்றை நிவர்த்தி செய்யும் வகையில்மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்குஊழியர்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதுமத்திய பட்ஜெட்டில்இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு ஊழியர்கள் தேர்வு நடைமுறைக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி மத்திய அரசு பணிகளுக்கு 2.80 லட்சம் பேர் தேர்வு செய்யப்படஉள்ளனர்இவர்களில் சுமார் 2 லட்சம் பேர் மத்திய அரசின் காவல்வருமானவரிமற்றும் சுங்கத்துறைகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தமிழகம்:
உள்நாட்டு சுற்றுலாவில் 3வது ஆண்டாக தமிழகம் தொடர்ந்து முதலிடம்
உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் மாநிலமாக தமிழகம் 3வது முறையாகதொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் தமிழகத்துக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து34 கோடியே 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அதே சமயம்கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் தமிழகத்தில் கடந்த 2016ம்ஆண்டு வந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 3% அதிகரித்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்தைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம்விளங்குகிறது.
தமிழகத்தில் உள்ள மிகப் பழமையானவரலாற்று முக்கியத்துவம் கொண்டகோயில்கள் ஏராளமாக இருப்பது முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறதுஅதேநேரம் தமிழகத்தில் மிகச் சிறந்த மருத்துவமனை வசதிகள் இருப்பதும்டிராவல்ஏஜெண்டுகளும்மாநில சுற்றுலாத் துறையும் மிகச் சிறந்த சேவையைசெய்வதும் இதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகிறது.
விளையாட்டு:
துபை டென்னிஸ்ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி
துபை ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில்ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
துபையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நடப்பு ஆஸ்திரேலிய ஓபன்சாம்பியனான ஃபெடரர் 6-3, 6-7 (7), 6-7 (5) என்ற நேர் செட்களில் சர்வதேசதரவரிசையில் 116-ஆவது இடத்தில் இருக்கும் ரஷியாவின் ஈவ்ஜெனிடான்ஸ்காயிடம் தோல்வி கண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை எளிதாக 6-3 என்றகணக்கில் கைப்பற்றினார் ஃபெடரர்இதையடுத்து நடைபெற்ற 2-ஆவது சுற்றில்அபாரமாக ஆடிய டான்ஸ்காய்அதை டைபிரேக்கர் வரை கொண்டு சென்று 7-6 (7) என்ற கணக்கில் கைப்பற்றினார்.
பின்னர் நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-ஆவது செட்டும்டைபிரேக்கருக்கு சென்றதுஅதில் ஒரு கட்டத்தில் ஃபெடரர் 5-1 என்ற கணக்கில்முன்னிலையில் இருந்தார்அதனால் அவர் வெற்றி பெறுவார் எனஎதிர்பார்க்கப்பட்டதுஆனால் திடீரென சரிவிலிருந்து மீண்ட டான்ஸ்காய்தொடர்ச்சியாக 6 புள்ளிகளைப் பெற்று அந்த செட்டையும் 7-6 (5) என்ற கணக்கில்கைப்பற்றி வெற்றி கண்டார்.
தோல்வி குறித்துப் பேசிய ஃபெடரர், ’நிறைய வாய்ப்புகள் கிடைத்தனஆனால்கோட்டைவிட்டுவிட்டேன்இந்தத் தோல்வியிலிருந்து மீள்வதற்குமுயற்சிப்பேன்என்றார்.
அகாபுல்கோ ஓபன் காலிறுதியில் ஜோகோவிச்நடால்
அகாபுல்கோ ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்ஸ்பெயினின் ரஃபேல் நடால் உள்ளிட்டோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
மெக்ஸிகோவின் அகாபுல்கோ நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின்காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச் கடும் போராட்டத்துக்குப் பிறகு 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல்போட்ரோவை தோற்கடித்தார்ஜோகோவிச் தனது காலிறுதியில்ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸை சந்திக்கிறார்.
நடால் 6-1, 6-1 என்ற நேர் செட்களில் இத்தாலியின் பாலோ லோரென்ஸியைத்தோற்கடித்தார்காலிறுதியில் ஜப்பானின் யோஷிஹிட்டோ நிஷியோகாவைஎதிர்கொள்கிறார் நடால்குரோஷியாவின் மரின் சிலிச் 6-3, 2-6, 6-3 என்ற செட்கணக்கில் சகநாட்டவரான போர்னா கோரிச்சை தோற்கடித்தார்.
மகளிர் ஹாக்கிபெலாரஸை பந்தாடியது இந்தியா
பெல்ஜியத்துக்கு எதிரான முதல் ஹாக்கி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
இவ்விரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஹாக்கி டெஸ்ட்தொடரின் முதல் ஆட்டம் மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில்வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய இந்திய அணி 11-ஆவதுநிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் முதல் கோலை அடித்ததுஅதைத்தொடர்ந்து 15-ஆவது நிமிடத்தில் அடுத்த கோலை அடித்ததுஇந்த இருகோல்களையும் நவ்ஜோத் கெளர் அடித்தார்.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது கால் ஆட்டத்தின் 29-ஆவது நிமிடத்தில் பூனம்பர்லா கோலடிக்கஇந்தியா 3-0 என முன்னிலை பெற்றது. 3-ஆவது கால்ஆட்டத்தின் 37-ஆவது நிமிடத்தில் பெலாரஸின் ஸ்வியத்லானா கோலடித்தார்.
இதன்பிறகு நடைபெற்ற 4-ஆவது கால் ஆட்டத்தின் 57 மற்றும் 60-ஆவதுநிமிடங்களில் முறையே இந்தியாவின் தீப் கிரேஸ் இக்காகுர்ஜித் கெளர்ஆகியோர் கோலடிக்கஇந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
சர்வதேச கிரிக்கெட்டுவைன் ஸ்மித் ஓய்வு
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் மேற்கிந்தியத்தீவுகள் வீரர் டுவைன் ஸ்மித்.
2004 ஜனவரி 2-ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்இடம்பெற்றதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஸ்மித்தனதுமுதல் போட்டியிலேயே சதமடித்தார்.அதைத் தொடர்ந்து அதே ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்குஎதிரான ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய ஸ்மித்அதன்பிறகு மேற்கிந்தியத்தீவுகளின் முன்னணி வீரர்களில் ஒருவராக உருவெடுத்தார்.
கடைசியாக 2015 உலகக் கோப்பை போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காகவிளையாடினார் ஸ்மித்அதன்பிறகு சர்வதேச போட்டியில்விளையாடாதபோதும்ஐபிஎல்கரீபியன் லீக்வங்கதேச லீக் போன்ற டி20போட்டிகளில் தொடர்ந்து கலக்கி வந்தார்தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீகில்விளையாடி வரும் ஸ்மித்வரும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்காககளமிறங்கவுள்ளார்.
வர்த்தகம் :
2020 க்குள் உலகின் மிகப்பெரிய ஒயின் சந்தை பட்டியலில் இரண்டாமிடம்சீனாவுக்கு!
தற்போது உலக ஒயின் சந்தையில் சீனா 4 ஆம் இடம் வகித்து வருகிறதுசீனாவில் ஒயின் அருந்துவோர் மற்றும் பிற நாடுகளுக்கு ஒயின் ஏற்றுமதிசெய்வோர் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு சீனாவில் உள்நாட்டுவெளிநாட்டு ஒயின் விற்பனை 21 பில்லியன்டாலர்களைக் கடந்து சென்று கொண்டிருப்பதால் கூடிய விரைவில் உலக ஒயின்சந்தையில் சீனாவின் முக்கியத்துவம் அதிகரிக்கும் என்பதோடு உற்பத்தி மற்றும்விற்பனையிலும் சீனா பிரிட்டன் மற்றும் ஃப்ரான்ஸைப் பின்னுக்குத் தள்ளிஇரண்டாவது இடத்தை வெகு எளிதில் கைப்பற்றவும் வாய்ப்பிருப்பதாக வின்எக்ஸ்போ எனும் ஒயின் தொழிற்சாலை கண்காட்சியொன்று தனதுகண்காட்சியின் இறுதியில் தெரிவித்தது.
சீனா உலகச் சந்தையில் இரண்டாம் இடத்தை அடைய வேண்டுமானால் அதுஇனி வரும் ஆண்டுகளில் ஆண்டுக்கு 39.8% வளர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைக்க வேண்டும்என வின் எக்ஸ்போ நிறுவனத்தின் செயல் இயக்குனர்குல்லாமா டெக்லிஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment