உலகம் :
வருது வருது பேஸ்புக் டி.வி !
பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் விரைவில்தொலைக்காட்சிகளில் வருவதைப் போன்றே நிகழ்ச்சிகளை வழங்கஉள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இது தொடர்பாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் 'வால் ஸ்ட்ரீட்ஜர்னல்' என்னும் இதழில் வெளியாகியுள்ள செய்தி பின்வருமாறு:
பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் முதலில் 'பேஸ்புக் லைவ்'என்னும் பெயரில் பயனாளர்கள் தங்களது வீ டியோக்களை நேரலைஒளிபரப்பு செய்யும் முறையை அறிமுகப்படுத்தியது. அதற்குகிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து தற்போதுதொலைக்காட்சிகளில் வருவதைப் போன்றே நிகழ்ச்சிகளை வழங்கமுடிவு செய்துள்ளது.
இந்தியா:
வாடிக்கையாளர் கணக்கில் குறைந்தபட்ச தொகை இருப்புஇல்லையெனில் கட்டணம்: பாரத ஸ்டேட் வங்கி
வாடிக்கையாளர் கணக்கில் குறைந்தபட்ச தொகை இருப்புஇல்லையெனில், அவரிடம் வரும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல்கட்டணம் வசூலிப்பதென்று பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) முடிவுசெய்துள்ளது.
இதுகுறித்து தில்லியில் பாரத ஸ்டேட் வங்கி மூத்த அதிகாரிஒருவர் கூறியதாவது:
பாரத ஸ்டேட் வங்கிக்கு புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும்திட்டத்துடன், கடந்த 2012-ஆம் ஆண்டு குறைந்தபட்ச தொகைஇருப்பு இல்லாத கணக்குகள் மீது கட்டணம் வசூலிக்கும்நடைமுறை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், வாடிக்கையாளர்கணக்கில் குறைந்தபட்ச தொகை இருப்பு இல்லையெனில்அவரிடம் கட்டணம் வசூலிப்பதற்கு ரிசர்வ் வங்கிஅனுமதியளித்தது.
இதையடுத்து, வாடிக்கையாளர் கணக்கில் குறைந்தபட்ச தொகைஇருப்பு இல்லையெனில் வரும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல்மீண்டும் கட்டணம் வசூலிப்பதென்று பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ)முடிவு செய்துள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம்: லாகூரில் இந்தியா-பாக்.பேச்சுவார்த்தை
சிந்து நதி நீர்ப் பகிர்வு ஒப்பந்தம் தொடர்பாக, லாகூரில் இந்தியா-பாகிஸ்தான் இடையே, வரும் 20, 21-ஆம் தேதிகளில்பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள உரி ராணுவ முகாம் மீது கடந்த ஆண்டுசெப்டம்பர் மாதம், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள்தாக்குதல் நடத்தியதை அடுத்து, அந்நாட்டு அரசுடனானபேச்சுவார்த்தையை நிறுத்தி வைக்க இந்தியா முடிவு செய்திருந்தது.இந்த நிலையில், 6 மாதங்களுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான்இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
1960-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர்ப் பகிர்வுஒப்பந்தத்தின்படி, இந்தியாவும், பாகிஸ்தானும் ஆண்டுக்கொருமுறை பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதன்படி, லாகூரில்,வரும் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள வருடாந்திர பேச்சுவார்த்தைக் கூட்டத்தில், இந்தியத் தரப்பில் இருந்து சிந்து நதி நீர்ஆணையரும், வெளியுறவு அமைச்சக அதிகாரிகளும் கலந்துகொள்கிறார்கள். இதற்கு முன்பு, இந்தப் பேச்சுவார்த்தைக் கூட்டம்,கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது.
மதிய உணவு திட்டத்தில் பயன்பெற மாணவர்களுக்கு "ஆதார்'கட்டாயம்: மத்திய அரசு
பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தில் பயன்பெறும்மாணவர்களும், சமையலர்களும் ஆதார் எண்ணை கட்டாயம்சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைஅமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:
பள்ளிக் கல்வி தொடர்புடைய மானியத் திட்டங்களில் ஆதாரைஇணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவின்அடிப்படையில், மேற்கண்ட நடவடிக்கையை மனிதவளமேம்பாட்டுத் துறை அமைச்சகம் எடுத்துள்ளது. இதன் மூலம், மதியஉணவுத் திட்டத்தை இன்னும் சிறப்பாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுத்த முடியும்.
அரசின் சேவைகள், சலுகைகள் மற்றும் மானியங்கள் வழங்குவதில்ஆதாரை இணைப்பதன் மூலம் பயனாளிகள் நேரடியாக பலன்களைபெற முடிகிறது.
மதிய உணவுத் திட்டத்தில் மாணவர்கள் மட்டுமன்றிசமையலர்களும் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.இதுதொடர்பான அறிவிக்கை அனைத்துப் பள்ளிகளுக்கும்விரைவில் அனுப்பப்படவுள்ளது. இதுவரை ஆதார் அட்டை பெறாதமாணவர்களுக்காக ஜூன் 30-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கவும்முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகம்:
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 2510 ஜூனியர் டெலிகாம் அதிகாரிபணி
அனைவராலும் பிஎஸ்என்எல் என அழைக்கப்படும் மத்திய அரசின்தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்நிறுவனத்தில் 2017 2018-ஆம் ஆண்டிற்கான 2510 ஜூனியர்டெலிகாம் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பைவெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவிண்ணப்பதாரர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ இணையதளமானwww.externalbsnlexam.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Telecom Officer (JTO)
மொத்த காலியிடங்கள்: 2,510. இதில் தமிழகத்திற்கு 103 இடங்கள்ஓதுக்கப்பட்டுள்ளன.
பணியிடம்: இந்தியா முழுவதும்
தகுதி: பொறியியல் துறையில் டெலிகாம், எலக்ட்ரானிக்ஸ்,வானொலி, கணினி அறிவியல், எலக்ட்ரிக்கல், தகவல்தொழில்நுட்பம், இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற துறைகளில்பி.இ, பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரிக்கல்,கணினி அறிவியல் போன்ற துறைகளில் எம்.எஸ்சி முடித்தவர்கள்விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மற்றும் 2017 கேட் தேர்வுக்குவிண்ணப்பித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 06.04.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
தேர்வு செய்யப்படும் முறை: 2017 கேட் தேர்வில் பெற்றமதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்குரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.300.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.04.2017
மேலும் முழுமையான விவரங்கள்அறிய http://www.externalbsnlexam.com/documents/GATE_JTODR_Notification.pdf என்ற (PDF) லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று முதல் விண்ணப்பம்விநியோகம்
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்பங்கள், திங்கள்கிழமை (மார்ச் 6) முதல்வழங்கப்படவுள்ளன
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1மற்றும் 2 ஆகியவை, ஏப்ரல் மாதம் 29, 30 ஆகிய நாள்களில்நடைபெறவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள், சென்னை மாவட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலரால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளமையங்களில் திங்கள்கிழமை (மார்ச் 6) முதல் மார்ச் 22-ஆம் தேதிவரை காலை 9 முதல் மாலை 5 வரை விநியோகிக்கப்படும்.
ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும். ஒரு நபருக்கு ஒருவிண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும்.
இரண்டு தேர்வுகளையும் எழுத விரும்புவோர் தனித்தனியானவிண்ணப்பிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள்தெரிவித்தனர்.
விளையாட்டு:
மகளிர் ஹாக்கி: இந்தியாவுக்கு ஹாட்ரிக் வெற்றி
பெலாரஸூக்கு எதிரான 3-ஆவது ஹாக்கி ஆட்டத்தில் இந்தியமகளிர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
இதன்மூலம் தொடர்ச்சியாக 3-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளதுஇந்திய அணி.
மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் ஞாயிற்றுக்கிழமைநடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் கால் ஆட்டம் கோலின்றிமுடிந்தது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது கால் ஆட்டத்தின் 24-ஆவதுநிமிடத்தில் பெலாரஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க,அதில் ரிட்டா பதுரா கோலடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேரமுடிவில் பெலாரஸ் அணி 1-0 என முன்னிலை பெற்றது.
பின்னர் நடைபெற்ற 3-ஆவது கால் ஆட்டத்தில் இந்திய கேப்டன்ராணி 35 மற்றும் 39-ஆவது நிமிடங்களில் கோலடிக்க, 42-ஆவதுநிமிடத்தில் தீபிகா கோலடித்தார். இதனால் இந்திய அணி 3-1 என்றகோல் கணக்கில் வெற்றி கண்டது.
மெக்ஸிகோ ஓபன்: சாம் கியூரி சாம்பியன்
மெக்ஸிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் சாம்கியூரி சாம்பியன் பட்டம் வென்றார்.
மெக்ஸிகோவின் அகாபுல்கோ நகரில் நடைபெற்ற இந்தப்போட்டியின் இறுதிச் சுற்றில் சாம் கியூரி 6-3, 7-6 (3) என்ற நேர்செட்களில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலைத் தோற்கடித்தார்.
சர்வதேச தரவரிசையில் 40-ஆவது இடத்தில் இருக்கும் சாம் கியூரிநடாலுக்கு எதிராக 19 ஏஸ் சர்வீஸ்களை பறக்கவிட்டார். இதுவரைநடாலுடன் 5 முறை மோதியுள்ள கியூரி, முதல்முறையாக அவரைவீழ்த்தியுள்ளார்.
மெக்ஸிகோ ஓபனில் 2005, 2013 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன்பட்டம் வென்றவரான நடால், முதல்முறையாக இங்குதோற்றுள்ளார். முன்னதாக 14 ஆட்டங்களில் தொடர்ச்சியாகவென்றிருந்தார்.
சாம் கியூரிக்கு இது 9-ஆவது ஏடிபி பட்டமாகும். இந்தப் போட்டியில்சர்வதேச தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும்பெல்ஜியத்தின் டேவிட் கோஃபின், ஆஸ்திரியாவின் டொமினிக் தீம்,நிக் கிர்ஜியோஸ், நடால் ஆகியோரை வீழ்த்தியிருக்கிறார்.
இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் முதல் 30 இடங்களுக்குள்முன்னேறும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் சாம் கியூரி.
வர்த்தகம் :
மத்திய, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சட்டங்களுக்கு கவுன்சில்ஒப்புதல்
மத்திய சரக்கு-சேவை வரி விதிப்புச் சட்டம் (சிஜிஎஸ்டி),ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி விதிப்பு (ஐஜிஎஸ்டி) சட்டம்ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் சனிக்கிழமை ஒப்புதல்அளித்தது.
தில்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில்ஜிஎஸ்டி கவுன்சிலின் 11-ஆவது கூட்டம் சனிக்கிழமைநடைபெற்றது. இக்கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் முன்புநிறைவேற்றப்பட்ட ஜிஎஸ்டி சட்டத்தின் துணைச் சட்டங்களானமத்திய சரக்கு-சேவை வரி விதிப்புச் சட்டம் (சிஜிஎஸ்டி),ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி விதிப்புச் சட்டம் (ஐஜிஎஸ்டி)ஆகியவற்றின் வரைவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரையிலும் வருமானம் ஈட்டக்கூடியசிறிய ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்ட், தாபாக்களுக்கு 5 சதவீதஜிஎஸ்டி வரி (மத்திய, மாநில அரசுகள் தலா 2.5 சதவீத வரி விதிப்பு)விதிப்பதென்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் அருண் ஜேட்லிபேசியபோது இந்தத் தகவலை தெரிவித்தார். அவர் மேலும்கூறியதாவது:
தில்லியில் கடந்த முறை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில்கூட்டத்தில் மாநிலங்களுக்கான இழப்பீட்டு சட்டத்துக்கு ஒப்புதல்அளிக்கப்பட்டது. அதையடுத்து சிஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டிசட்டங்களுக்கு சனிக்கிழமை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.இதையடுத்து தில்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 12-ஆவது கூட்டம்வரும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் மாநில ஜிஎஸ்டிசட்டம், யூனியன் பிரதேசங்களுக்கான ஜிஎஸ்டி சட்டங்களுக்குஒப்புதல் அளிக்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment