Monday, 6 March 2017

Daily Current Affairs For Competitive Exam - 6th March

உலகம் :

பல ஏவுகணைகளை கடலில் செலுத்தி வட கொரியா சோதனை'
தடை செய்யப்பட்ட சக்தி வாய்ந்த ஏவுகணைகள் பலவற்றை கடலுக்குள்செலுத்தி வட கொரியா சோதனை மேற்கொண்டது என்று தென் கொரியராணுவம் திங்கள்கிழமை தெரிவித்தது.


தென் கொரிய முப்படைகளின் தலைவரான தளபதி லீ சூன்-ஜின் வெளியிட்டஅறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
வட கொரியாவின் வடக்கு பியோங்கன் மாகாணத்தில் உள்ள டோங்சாங்ரிபகுதியிலிருந்து ஏவுகணைகள் செலுத்தப்பட்டனஇவை தடை செய்யப்பட்டசக்தி வாய்ந்த ஏவுகணைகளாகும்அந்த ஏவுகணைகள் சுமார் ஆயிரம் கி.மீதூரம்பறந்து சென்று கிழக்கு கடலுக்குள் பாய்ந்தன என்று அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த வகையான ஏவுகணைகளைச் செலுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டதுஎன்றோஎத்தனை ஏவுகணைகள் செலுத்தப்பட்டன என்றோ அதில்குறிப்பிடப்படவில்லை.
அமெரிக்க ராணுவமும் தென் கொரிய ராணுவமும் இணைந்து ஆண்டுதோறும்நடத்தி வரும் போர்ப் பயிற்சி நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில்வடகொரியாவின் ஏவுகணை சோதனை நடைபெற்றிருக்கிறது.
பேஸ்புக் மெசேஞ்சரில் வருது 'டிஸ்லைக்பட்டன்!
சீன பாதுகாப்புத் துறை பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.10.18 லட்சம் கோடி
சீனாவின் பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 1.04 லட்சம் கோடி யுவான்(சுமார் ரூ. 10.18 லட்சம் கோடிஎன்று அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமானஜின்ஹுவா தெரிவித்தது.
அந்தச் செய்தி நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
2017-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில்பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு1.04 லட்சம் யுவானாக (சுமார் ரூ. 10.18 லட்சம் கோடிஇருக்கும்கடந்த ஆண்டுஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையைவிட இது 7.6 சதவீதம் அதிகாகும்.
சீனாவின் பாதுகாப்புத் துறை பட்ஜெட் ஒதுக்கீடு 1 லட்சம் கோடி யுவானைத்தொடுவது இதுவே முதல் முறைநாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது1.3 சதவீதமாகும்நேட்டோ நாடுகளின் சராசரி ஒதுக்கீடு 2 சதவீதமாகும்அமெரிக்க ராணுவ பட்ஜெட் ஒதுக்கீடு 10% அதிகரிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப்கூறியுள்ள நிலையில்சீனாவின் ஒதுக்கீட்டை அதிகம் என்று கூற முடியாதுஎன்று ஜின்ஹுவா தெரிவித்தது.
இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஒதுக்கீட்டை விட இது 3 மடங்கு அதிகம் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்தியா:
ரூ. 4,500 கோடி செலவில் 50 விமான நிலையங்களை புதுப்பிக்கும் திட்டம்மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நாட்டில் பயன்பாட்டில் இல்லாத 50 விமான நிலையங்கள் மற்றும் விமானஓடுபாதைகளை புதுப்பிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள ரூ.4,500 கோடிமதிப்பிலான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல்அளித்தது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம்பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் திங்கள்கிழமைநடைபெற்றதுஅப்போதுபயன்பாட்டில் இல்லாத சுமார் 50 விமான நிலையங்கள்மற்றும் ஓடுபாதைகளைப் புதுப்பிக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2017-18-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போதுவிமானநிலையங்களைப் புதுப்பிக்க ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டம்செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்திருந்தார்.
அதன்படிஇந்தத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் தற்போதுவழங்கப்பட்டுள்ளது.
அட்டாரிநாட்டின் மிகப்பெரிய மூவர்ணக்கொடி ஏற்றிவைப்பு
பஞ்சாப் மாநிலம்அட்டாரி அருகே உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில்நாட்டிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படும் மூவர்ணக் கொடிமிக உயரமானகம்பத்தில் ஏற்றிவைக்கப்பட்டுள்ளது.
120 அடி நீளமும், 80 அடி அகலமும் கொண்ட அந்தத் தேசியக்கொடியை பஞ்சாப்மாநில அமைச்சர் அனில் ஜோஷி ஞாயிற்றுக்கிழமை ஏற்றி வைத்தார்அப்போதுதனது கனவுத் திட்டம் தற்போது நனவாகியிருப்பதாக அவர் கூறினார்.
110 மீட்டர் (360 அடிஉயரமுள்ள கம்பத்தில்இந்தக் கொடி ஏற்றிவைக்கப்பட்டுள்ளதுஇதுவரைஜார்க்கண்ட் மாநிலம்ராஞ்சியில் 91.44 மீட்டர்உயரமுள்ள கம்பத்தில் பறக்கும் தேசியக் கொடியேமிக உயரமான கம்பத்தில்பறக்கும் கொடியாகக் கருதப்பட்டது.
மக்களவை முன்னாள் தலைவர் ரபி ராய் மறைவு
மக்களவையின் முன்னாள் தலைவரும்பிரபல சோஷலிஸ தலைவருமான ரபிராய் (90) திங்கள்கிழமை காலமானார்.
ஒடிஸா மாநிலம்குர்தா மாவட்டத்திலுள்ள பன்ராகர் கிராமத்தில் 1926-ஆம்ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி ரபி ராய் பிறந்தார்இவர் 1979-ஆம் ஆண்டு ஜனவரிமுதல் 1980-ஆம் ஆண்டு ஜனவரி வரை முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின்அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1989-ஆம்ஆண்டு முதல் 1991-ஆம் ஆண்டு வரை மக்களவையின் தலைவராகப் பொறுப்புவகித்துள்ளார்.
உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து கட்டாக் நகரிலுள்ளமருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்இந்நிலையில்திங்கள்கிழமை அவர் காலமானார்பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காகஅவருடைய உடல் புவனேசுவரத்திலுள்ள லோஹியா பவனத்தில் வைக்கப்படும்என அறிவிக்கப்பட்டுள்ளதுஇதனிடையேரபி ராயின் மறைவுக்கு ஒடிஸாமுதல்வர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழகம்:
தமிழக பட்ஜெட் மார்ச் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்
தமிழக பட்ஜெட் மார்ச் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்வெளியாகி உள்ளதுதமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி23-ம் தேதி தொடங்கியதுஅன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரை நிகழ்த்தினார்அதைத் தொடர்ந்து கவர்னர் உரை மீதான விவாதம் பிப்ரவரி 1-ம்தேதி வரைநடைபெற்றது.
இதன் பிறகு .பன்னீர் செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால்எடப்பாடி பழனிசாமி புதிய முதல்வரானார்புதிய அரசு மீதான நம்பிக்கைதீர்மானத்தின் மீது கடந்த பிப்ரவரி 18-ந்தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில்வெற்றி பெற்றதுஇந்நிலையில் 2017-18 ஆம் ஆண்டின் தமிழக பட்ஜெட் மார்ச் 23-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு முதல் முறையாக பட்ஜெட்தாக்கல் செய்ய உள்ளதுமேலும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் முதல் முறையாகபட்ஜெட் தாக்கல் செய்கிறார்.  ஆனாலும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புசட்டப் பேரவை செயலகத்தில் இருந்து ஓரிரு நாளில் வெளியாகும்.
விளையாட்டு:
முர்ரேவுக்கு 45-ஆவது பட்டம்
துபை ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான பிரிட்டனின்ஆன்டி முர்ரே சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம் அவர் தனது டென்னிஸ் வாழ்க்கையில் 45-ஆவது பட்டத்தைக்கைப்பற்றியுள்ளார்.துபையில் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதிச்சுற்றில் முர்ரே 6-3, 6-2 என்றநேர் செட்களில் ஸ்பெயினின் பெர்னாண்டோ வெர்டாஸ்கோவை தோற்கடித்தார்.
ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ரோஜர்ஃபெடரிடம் தோற்ற முர்ரேவெர்டாஸ்கோவை வீழ்த்தி துபை ஓபனில் முதல்முறையாக பட்டம் வென்றுள்ளார்வெர்டாஸ்கோவுடன் இதுவரை 14 ஆட்டங்களில் மோதியுள்ள முர்ரேஇப்போது 13-ஆவது வெற்றியைப்பெற்றுள்ளார்.
வெற்றி குறித்துப் பேசிய முர்ரே, "நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இங்குமுதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறதுஇறுதிச் சுற்றில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன்ஆரம்பத்தில்மெதுவாக ஆட்டத்தைத் தொடங்கினாலும்இப்போது சிறப்பாகமுடித்திருக்கிறேன்என்றார்.
துபை ஓபனில் பட்டம் வென்ற முதல் பிரிட்டன் வீரர் என்ற பெருமையைப்பெற்றுள்ள முர்ரேஅடுத்ததாக இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் போட்டியில்களமிறங்கவுள்ளார்.
வர்த்தகம் :
சாம்சங் நிறுவனத்தின் 2 புதிய செல்லிடப்பேசிகள் அறிமுகம்
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி  வரிசையில் மேலும் இரண்டு புதிய மாடல்களில்செல்லிடப்பேசிகளை திங்கள்கிழமை மும்பையில் அறிமுகம் செய்தது.
புதிய மாடல்களை அறிமுகம் செய்து சாம்சங் இந்தியாவின் மூத்த துணைத்தலைவர் அசீம் வார்ஸி தெரிவித்ததாவது:
நடப்பு 2017-ஆம் ஆண்டில் கேலக்ஸி  வரிசை உயர் மதிப்பு பிரிவில் அதிகபட்சதயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதே எங்களின் இலக்குஅதன் ஒரு பகுதியாகதற்போது கேலக்ஸி  7 மற்றும் கேலக்ஸி  5 மாடல்களில் செல்லிடப்பேசிகள்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கேலக்ஸி  7 மாடல் செல்லிடப்பேசி 5.7 அங்கு திரை, 3,600எம்ஏஎச் திறனுடயைபேட்டரியை உள்ளடக்கியதுஇதன் விலை ரூ.33,490. கேலக்ஸி  5 மாடல்செல்லிடப்பேசி 5.2 அங்குல திரை, 3,000எம்ஏஎச் திறனுடைய பேட்டரியைகொண்டதுஇதன் விலை ரூ.28,990.
கடந்த 2015-இல் 41 சதவீதமாக இருந்த சாம்சங்கின் சந்தை பங்களிப்பு 2016-இல்46.3 சதவீதமாக உயர்ந்தது என்றார் அவர்.

No comments:

Post a Comment