இந்தியா:
இறுதிக்கட்டத் தேர்தல்: மணிப்பூரில் 86%, உ.பி.யில் 60% வாக்குப்பதிவு
மணிப்பூர் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் புதன்கிழமை நடைபெற்ற இறுதிக்கட்டத்தேர்தல்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. குறிப்பாகமணிப்பூரில் இதுவரை இல்லாத வகையில் 86 சதவீத வாக்குகள் பதிவாகின. உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை வாக்குப்பதிவு 60 சதவீதமாக இருந்தது.
மணிப்பூர்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூருக்கு இரண்டுகட்டமாகத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 4-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 38 தொகுதிகளுக்குநடைபெற்ற அந்தத் தேர்தலில் 84 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக தெளபால், உக்ருல், சந்தேல், தமெங்லாங், சேனாபதி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 22 பேரவைத் தொகுதிகளுக்குபுதன்கிழமை தேர்தல் நடைபெற்றது.
தமிழகம்:
மார்ச் 16-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 16-ஆம் தேதிகூடுகிறது. அன்று தமிழக அரசின் 2017 - 2018-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல்செய்யப்படுகிறது.
நிதியமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இடைப்பாடிபழனிசாமி முதல்வராக பதவியேற்ற பின்னர் தாக்கல் செய்யப்படும் முதல்பட்ஜெட் இதுவாகும்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 26(1)-ன்கீழ், பேரவைத் தலைவர் தமிழ்நாடுசட்டப்பேரவையின் அடுத்தகூட்டத்தை, 2017-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 16-ஆம்தேதி வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு பேரவை மண்டபத்தில்கூட்டியுள்ளார்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 181(1)-ன்கீழ், 2017-2018-ஆம் ஆண்டிற்கானநிதிநிலை அறிக்கையினை 2017-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 16-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று பேரவைக்கு அளிக்க வேண்டுமென்றும், 2017-18-ஆம்ஆண்டிற்கான முன்பணமானியக் கோரிக்கைகள் 2017-ஆம் ஆண்டு மார்ச் திங்கள்23-ஆம் தேதி வியாழக்கிழமை பேரவைக்கு அளிக்க வேண்டுமென்றும் ஆளுநர்கேட்டு கொண்டுள்ளார்.
ஆசிரியர் தகுதி தேர்வுகள் மூலம் 1,111 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்: 10-ல்தகுதி பட்டியல்
ஏற்கனவே நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வுகள் மூலம் 1,111 பட்டதாரிஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதற்கான தேர்ச்சி பெற்றவர்களின் தகுதிபட்டியல் 10-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்தெரிவித்துள்ளதாவது:
ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் மூலம் பள்ளிக்கல்வித்துறையில் 286 பட்டதாரிஆசிரியர்கள், பின்னடைவு பணியிடங்கள் 623, அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் 202 பணியிடங்கள் ஆகியவற்றுக்கு ஏற்கனவே, 2012, 2013, 2014-ஆம்ஆண்டுகளில் நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுகளில் தேர்ச்சிபெற்றவர்களை கொண்டு நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 1,111 பட்டதாரிஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தற்போது கூடுதலாக வேறுஇளங்கலை பட்டம் பெற்றவர்கள், ஏற்கனவே தேர்ச்சி பெற்று சான்றிதழ்சரிபார்ப்புக்கு வராதவர்கள், பி.எட். படித்த ஆண்டில் ஆசிரியர் தகுதித்தேர்வுஎழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின்போதுபணித்தெரிவுக்கு உரிய தகுதி பெறாமல் தற்போது தகுதி பெற்றவர்கள் ஆகியோர்மீண்டும் வாய்ப்பு வழங்கவேண்டி விண்ணப்பித்துள்ளனர்.
எனவே, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதி பட்டியல்ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) 10-ஆம் தேதிவெளியிடப்பட உள்ளது. அந்த பட்டியல் 20-ஆம் தேதி வரை இருக்கும். இதனைசரிபார்த்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசில் உதவி வேளாண் அதிகாரி பணி: ஏப்ரல் 4க்குள்விண்ணப்பிக்க அழைப்பு
தமிழ்நாடு வேளாண் விரிவாக்க சார்புநிலை தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள326+7 உதவி வேளாண் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணைம் இன்று புதன்கிழமை (மார்ச்.8) வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரகள் ஆன்லைன் மூலம் மட்டுமேவிண்ணப்பிக்க முடியும்.
அறிக்கை எண்: 08/2017
விளம்பர எண்: 463
பணி: Assistant Agricultural Officer
காலியிடங்கள்: 326+7
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
பதிவுக் கட்டணம்: ரூ.150
தேர்வுக் கட்டணம்: ரூ.150
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி கணக்கிடப்படும். பொது பிரிவினர் 18 - 30க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயதுவரம்பு இல்லை.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி விவரம்:
தகுதி: +2 தேர்ச்சி பெற்று வேளாண் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு மையம்: சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோவை, சேலம்,திருநெல்வேலி
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in/www.tnpscexams.net/ www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும்.
தாள்-I 02.07.2017 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை
தாள்-II 02.07.2017 அன்று மதியம் 2.30 மணி முதல் மாலை 04.03 மணி வரை
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.04.2017
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 11.04.2017
மேலும் முழுமையான விவரங்கள்அறிய http://www.tnpsc.gov.in/notifications/2017_8_not_eng_asst_agrl_officer.pdf என்றஇணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்கள் தேர்வு
அஞ்சல் துறை சேவைகளான அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் ஊரக அஞ்சல்ஆயுள் காப்பீடு விற்பனைக்கான நேரடி முகவர் பணிக்கான விண்ணப்பங்கள்வரவேற்கபடுகிறது.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில்தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இந்தப் பணிக்கான வயது வரம்பு 18-லிருந்து 60 வரை.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவங்களை அண்ணா சாலையில் உள்ளதலைமை அஞ்சல் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பப்படிவங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் மார்ச் 15.
இந்தப் பணிக்கான நேர்காணலை அஞ்சல் துறை, அண்ணா சாலையில் உள்ளதலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடத்தும். நேர்கானலுக்கு தேர்ச்சிப்பெற்றவிண்ணப்பதாரர்கள் நேர்காணலின்போது சுயவிபரக் குறிப்புடன் வயது மற்றும்கல்வித் தகுதிக்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்கவேண்டும்.
விளையாட்டு:
ஐசிசி தரவரிசை: முதலிடத்தில் அஸ்வின், ஜடேஜா
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின்அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
இரு சுழற்பந்து வீச்சாளர்கள் ஒரே நேரத்தில் தரவரிசையில் முதலிடத்தைப்பிடிப்பது இதுவே முதல்முறையாகும். பெங்களூர் டெஸ்டில் 8 விக்கெட்டுகளைவீழ்த்தியதன் மூலம் அஸ்வின் தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். அதேநேரத்தில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா ஓர் இடம் முன்னேற்றம்கண்டுள்ளார். ஜடேஜா, தரவரிசையில் முதலிடத்தைப் பிடிப்பது இதுவேமுதல்முறையாகும்.
இதற்கு முன்னர் 2008 ஏப்ரலில் தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயினும், இலங்கையின் முத்தையா முரளீதரனும் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஒரேநேரத்தில் முதலிடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
மகளிர் ஹாக்கி: இந்தியாவுக்கு 5-ஆவது வெற்றி
மகளிர் ஹாக்கி டெஸ்ட் தொடரின் 5-ஆவது ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்றகோல் கணக்கில் பெலாரஸ் அணியைத் தோற்கடித்தது.
இதன்மூலம் இந்தத் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி,பெலாரûஸ "ஒயிட் வாஷ்' ஆக்கியது. மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில்புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடியஇந்திய அணி 6-ஆவது நிடத்தில் முதல் கோலை அடித்தது. இந்த கோலைவந்தனா கேத்ரியா அடித்தார். இதன்பிறகு 15-ஆவது நிமிடத்தில் குர்ஜித் கெüர்கோலடிக்க, இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.
52-ஆவது நிமிடத்தில் பெலாரஸின் யூலியா கோலடிக்க, 55-ஆவது நிமிடத்தில்இந்தியா தனது 3-ஆவது கோலை அடித்தது.
இந்தக் கோலை ராணி அடித்தார். இதன்மூலம் இந்தியா 3-1 என்ற கோல்கணக்கில் வெற்றி கண்டது.
No comments:
Post a Comment