உலகம் :
தென் கொரியாவின் புதிய அதிபராகிறார் மூன் ஜே-இன்
தென் கொரியாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிபர்
தேர்தலில் மூன்
ஜே-இன் (64) பெரும் வாக்கு
வித்தியாசத்தில் வெற்றி
பெறுவார் என்று
வாக்குக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அதிபர் தேர்தலில் 13 பேர்
போட்டியிட்டனர். தென்
கொரிய
ஜனநாயகக் கட்சி
சார்பில் போட்டியிட்ட மூன்
ஜே-இன், 41 சதவீதம் முதல்
42 சதவீத
வாக்குகள் வரை
பெற்று
அதிபராவார் என்று
வாக்குக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அவரை
எதிர்த்துப் போட்டியிட்ட 12 வேட்பாளர்களில், ஹோங்
ஜூன்-பியோ, ஆன் சியோல்-சூ ஆகிய இருவரும் முறையே
சுமார்
23, 21 சதவீத
வாக்குகளைப் பெறுவர் என்று
தெரிகிறது.
வட கொரியாவுடன் நட்புறவு கொள்ள
வேண்டும் என்ற
கொள்கை
உடையவர் மூன்
ஜே-இன். அவரது மகத்தான வெற்றி
அந்த
இரு
நாடுகளிடையேயான உறவுகளில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்று
கருதப்படுகிறது.
தென் கொரிய
அதிபராகப் பதவி
வகித்த
பார்க்
கியூன்-ஹை ஊழல் வழக்கில் சிக்கி
பதவி
நீக்கம் செய்யப்பட்டார். தற்போது அவர்
சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது
பதவி
நீக்கத்தைத் தொடர்ந்து புதிய
அதிபரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
முழு வாக்கு
எண்ணிக்கை விவரங்கள் புதன்கிழமை வெளியாகும். முடிவுகள் அதிகாரபூர்வாக அறிவிக்கப்பட்டவுடன் புதிய
அதிபர்
பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.
உலக உணவு பாதுகாப்பு குழுவின் உறுப்பினராக மதுரா சுவாமிநாதன் தேர்வு
உலக உணவு
பாதுகாப்புக் குழுவின் உறுப்பினராக எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை தலைவர்
டாக்டர் மதுரா
சுவாமிநாதன் தேர்வு
செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பு: உணவுப்
பற்றாக்குறையை போக்குவது குறித்து கருத்து வழங்க
ஏதுவாக,
5 உறுப்பினர்கள் இந்தக்
குழுவுக்கு தேர்வு
செய்யப்பட்டுள்ளனர். இந்த
அமைப்புக்கு இந்தியாவிலிருந்து டாக்டர் மதுரா
சுவாமிநாதன் தேர்வாகியுள்ளார்.
இந்தியா:
நெதர்லாந்து நாட்டின் இந்தியத் தூதராக வேணு ராஜாமணி நியமனம்
நெதர்லாந்து நாட்டுக்கான இந்தியத் தூதராக
வேணு
ராஜாமணி செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை அவர்
குடியரசுத் தலைவர்
பிரணாப் முகர்ஜியின் ஊடகத்
துறை
செயலராக இருந்தார். நெதர்லாந்து தூதராக
மட்டுமல்லாது, அந்நாட்டின் தி
ஹேக்
நகரில்
உள்ள
சர்வதேச ரசாயன
ஆயுத
தடுப்பு அமைப்பு, சர்வதேச தீர்ப்பாயம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் அவர்
நியமிக்கப்பட்டுள்ளார். அவர்
அடுத்த
மாதம்
பொறுப்பேற்க இருக்கிறார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 2 ஆண்டுகள் நிருபராகப் பணியாற்றிய வேணு
ராஜாமணி, 1986-ஆம் ஆண்டு
இந்திய
வெளியுறவுப் பணியில் இணைந்தார். சீன
மொழியில் தேர்ச்சி பெற்றுள்ள அவர்,
ஹாங்காங், பெய்ஜிங்கில் இந்தியத் தூதராகப் பணியாற்றியுள்ளார்.
பின்னர் வாஷிங்டனில் உள்ள
இந்தியத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளராகவும், 2002-04-ஆம் ஆண்டில் வெளியுறவு அமைச்சக இயக்குநராகவும், இந்தியா சார்பில் ஐ.நா. மனித உரிமை
கவுன்சிலின் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
செம்மொழித் தமிழுக்கான விருதுகள்: குடியரசுத் தலைவர் வழங்கினார்
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முனைவர்கள் சோ.ந. கந்தசாமி, அ. தட்சிணாமூர்த்தி, இரா. கலைக்கோவன் ஆகியோருக்கு தொல்காப்பியர் விருதை
வழங்குகிறார் குடியரசுத் தலைவர்
பிரணாப் முகர்ஜி.
தமிழறிஞர்கள் சோ.ந. கந்தசாமி, அ. தட்சிணாமூர்த்தி, இரா, கலைக்கோவன் ஆகியோருக்கு மத்திய
செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் அறிவித்த தொல்காப்பியர் விருதுகளையும், 15 பேருக்கு இளம்
அறிஞர்
விருதுகளையும் குடியரசுத் தலைவர்
பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
தில்லியில் உள்ள
குடியரசுத் தலைவர்
மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இதற்கான விழாவில் செம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவர்
விருது
பெற்றவர்கள் விவரம்
வருமாறு:
2013-14
ஆண்டு
தொல்காப்பியர் விருது
- சோ.ந. கந்தசாமி.
ஆசிய அளவில்.. ஊழலில் ஊறிப்போன நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு முதல் இடம்
இந்தியாவில், அரசு
சேவையைப் பெற
10ல்
7 பேர்
லஞ்சம்
கொடுப்பதாக ஆசிய
நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய
வந்துள்ளது.
இந்தியாவை ஆட்சி
செய்து
வரும்
பாஜக
தலைமையிலான மோடி
அரசின்
தாரக
மந்திரமே 'ஊழலற்ற
இந்தியா' என்பதே.
ஆனால்,
அவர்கள் தங்களது தாரக
மந்திரத்தை நிறைவேற்ற இன்னும் பல
ஆண்டுகள் பயணிக்க வேண்டிய நிலை
இருப்பது தெரிய
வந்துள்ளது.
ஊழல் ஒழிப்பு சர்வதேச சமூக
அமைப்பின் டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல் (டிஐ),
ஆசியாவின் 16 நாடுகளின் ஊழல்
நிலை
குறித்து நடத்திய ஆய்வில், இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
விளையாட்டு:
இன்று தொடங்குகிறது ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: சாக்ஷி, வினேஷ், சத்யவர்த் பங்கேற்பு
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி
தில்லியில் புதன்கிழமை தொடங்குகிறது.
வரும் 14-ஆம்
தேதி
வரை
நடைபெறும் இந்தப்
போட்டியில் ஈரான்,
உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், கைர்ஜிஸ்தான், ஜப்பான், கொரியா,
சீனா,
மங்கோலியா ஆகிய
நாடுகளைச் சேர்ந்த வீரர்,
வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இதில் இந்தியாவின் சார்பில் முக்கிய வீராங்கனையாக, ரியோ
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற
சாக்ஷி
மாலிக்
பங்கேற்கிறார். அவருடன், வினேஷ்
போகத்,
ரீது
போகத்
ஆகியோரும் பங்கேற்கின்றனர். எனினும், கீதா
போகத்,
பபிதா
போகத்
ஆகியோர் பங்கேற்கவில்லை.
மாட்ரிட் ஓபன்: ஷரபோவாவை வீழ்த்தினார் பெளசார்டு
மாட்ரிட் ஓபன்
டென்னிஸ் போட்டியின் மகளிர்
பிரிவில் ரஷியாவின் மரியா
ஷரபோவாவை வீழ்த்தினார் கனடாவின் இயுஜின் பெளசார்டு.
ஸ்பெயினின் மாட்ரிட் நகரில்
நடைபெற்று வரும்
இந்த
டென்னிஸ் போட்டியில், மகளிர்
பிரிவு
2-ஆவது
சுற்றில் ஷரபோவா-பெளசார்டு மோதினர். இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த
ஆட்டத்தின் முடிவில் 7-5, 2-6, 6-4 என்ற செட்
கணக்கில் பெளசார்டு வெற்றி
பெற்றார்.
இதுவரை ஷரபோவாவை 5 முறை
சந்தித்துள்ள பெளசார்டு, அவருக்கெதிரான தனது
முதல்
வெற்றியை பதிவு
செய்துள்ளார்.
ஜுலன் கோஸ்வாமி உலக சாதனை
இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜுலன்
கோஸ்வாமி ஒருநாள் போட்டியில் அதிக
விக்கெட்டுகள் (181) வீழ்த்தியவர் என்ற
புதிய
உலக
சாதனையை செவ்வாய்க்கிழமை படைத்தார்.
இதன்மூலம், ஆஸ்திரேலியாவின் கேத்தரின் ஃபிட்ஸ்பேட்ரிக் 180 விக்கெட்டுகள் வீழ்த்தி கடந்த
10 ஆண்டுகளாக தக்க
வைத்திருந்த சாதனையை ஜுலன்
முறியடித்துள்ளார்.
இந்தியா-தென்
ஆப்பிரிக்கா இடையேயான ஒருநாள் ஆட்டம்
செவ்வாய்க்கிழமை தென்
ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இதில்
இந்திய
அணி
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தப் போட்டியின்போது தனது
181-ஆவது
விக்கெட்டாக தென்
ஆப்பிரிக்க வீராங்கனை ராய்ஸிபேவை வீழ்த்தி ஜுலன்
சாதனை
படைத்தார். அவர்
தனது
153-ஆவது
போட்டியில் இந்தச்
சாதனை
விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
மேற்கு வங்க
மாநிலம் நாடியா
மாவட்டத்தைச் சேர்ந்த ஜுலன்,
கடந்த
2002-ஆம்
ஆண்டு
அணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகம் :
புதிய தொழிற்சாலைகளுக்கு ஆன்-லைனில் அனுமதி வழங்கும் முறை அமல்
தேசிய பாதுகாப்புக் குழுமம் தமிழ்நாடு பிரிவு
சார்பில் நடந்த
நிகழ்ச்சியில் 'கிருஷ்ணா வுட்
ஒர்க்ஸ்' நிறுவனத்துக்கு புதிய
தொழிற்சாலை தொடங்குவதற்கான அனுமதி
கடிதத்தை வழங்கிய அமைச்சர்கள் டி.ஜெயக்குமார்,
புதிதாக தொடங்கவுள்ள தொழிற்சாலைகளுக்கான அனுமதியை ஆன்-லைனில் வழங்கும் முறையை
தமிழக
அரசு
செயல்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலத்துறை இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆன்-லைனில் அனுமதி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் வகையில் சென்னை
ஆலந்தூரில் புதிதாக தொடங்கப்படவுள்ள மர
வேலைப்பாடுகளை மேற்கொள்ளும் 'கிருஷ்ணா வுட்
ஒர்க்ஸ்' என்ற
புதிய
தொழிற்சாலைக்கான அனுமதிக் கடிதத்தை தமிழக
அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், நிலோஃபர் கபில் ஆகியோர் சனிக்கிழமை (மே
6) வழங்கினர்.
No comments:
Post a Comment