உலகம் :
ஆசிய மல்யுத்த போட்டி: பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க இந்தியா மறுப்பு
இந்தியாவில் மே 10 முதல் 14-ம் தேதி வரை ஆசிய மல்யுத்த போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் மல்யுத்த வீரர்களுக்கு விசா வழங்க இந்தியா மறுத்துள்ளது.
ஐந்து நாள் நடைபெற உள்ள ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபெற பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் விசாவிற்காக 45 நாட்களுக்கு முன் விண்ணப்பித்திருந்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் மல்யுத்த கூட்டமைப்பு செயலாளர் முஹம்மத் அஷத், கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும் போது எங்கள் மல்யுத்த வீரர்களான முஹம் இனா பட் மற்றும் முஹம்மது பிலால் ஆகியோர் பிராந்திய நிகழ்வில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தியா:
பிரம்மோஸ்: 2-ஆவது நாளாக வெற்றிகர சோதனை
நிலத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கவல்ல அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணையை இந்திய ராணுவம் தொடர்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமையும் அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் வெற்றிகரமாக சோதனை செய்தது.
போர்க் காலங்களில் நிலத்தில் உள்ள எதிரிகளின் இலக்குகளை நிலத்திலிருந்து தாக்கி அழிக்கும் வகையில் இந்த பிரம்மோஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. நிலத்தில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் இலக்குகளை மட்டுமல்லாமல் வேகமாகச் செல்லும் இலக்குகளையும் துல்லியமாகத் தாக்கும் வகையில் இந்த அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நிலத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கவல்ல அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணை தொடர்ந்து 5-ஆவது முறையாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை மூலம் நிலம், கடல், போர் விமானம் ஆகியவற்றிலிருந்து குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்து தாக்குதல் நடத்த முடியும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவு: கவுன்ட்டவுன் இன்று தொடக்கம்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து வெள்ளிக்கிழமை விண்ணில் ஏவப்பட உள்ள 'ஜிசாட் 9' செயற்கைக்கோளை சுமந்து செல்லவுள்ள ஜிஎஸ்எல்வி - எஃப்09 ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி புதன்கிழமை நிறைவடைந்தது. ராக்கெட்டை செலுத்துவதற்கான 24 மணிநேர கவுன்ட்டவுன் வியாழக்கிழமை தொடங்குகிறது.
தெற்காசிய நாடுகளின் பயன்பாட்டுக்காக ஜிசாட் 9 செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். தெற்காசிய மண்டல நாடுகளில் பாகிஸ்தானைத் தவிர, மற்ற நாடுகளின் கூட்டுத் திட்டத்தில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.
2,230 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், தகவல் தொடர்புக்கு உதவும் '12 கே.யு.' பேண்ட் கருவிகளைச் சுமந்து செல்கிறது. இதன் ஆயுள்காலம் 12 ஆண்டுகளாகும். தெற்காசிய நாடுகளில் ஏற்படும் இயற்கை பேரிடர்கள் தொடர்பான தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கும் வல்லமை கொண்ட இந்த செயற்கைக்கோள், ஜி.எஸ்.எல்.வி. எஃப்09 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.
கொங்கன் ரயில்வேயில் பொறியாளர் வேலை
இந்திய ரயில்வே துறையின் கொங்கன் ரயில்வேயில் காலியாக உள்ள 37 மூத்த துறை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: CO/P-R/01/2017
பணி: Sr.Section Engineer
மொத்த காலியிடங்கள்: 37
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Electrical - 20
2. Mechanical - 02
3. Signal/Telecomm - 05
4. Civil - 07
1. Electrical - 20
2. Mechanical - 02
3. Signal/Telecomm - 05
4. Civil - 07
தகுதி: பொறியியல் துறையில் Electrical, Mechanical, Civil, Signal, Telecommunication போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4600
வயதுவரம்பு:01.07.2017 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை Favour of FA&CAO/KRCL என்ற பெயருக்கு மும்பையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்பவும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.konkanrailway.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டியி அஞ்சல் முகவரி: Assistant Personnel Officer (Recruitment), Konkan Railway Corporation Ltd, Plot No.6, Belapur Bhavan, Sec-11, CBD Belapur, Navi Mumbai-400614.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.05.2017
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 22.05.2017
மேலும் http://www.konkanrailway.com/uploads/vacancy/Notification_SE-2017-FINAL.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தங்களின் சந்தேகங்களுக்கான விளக்கத்தை அறிந்து கொள்ளவும்.
விளையாட்டு:
ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதி
ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன், சிவா தாபா, சுமித் சங்வான், அமித் பாங்கல் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இதன்மூலம் இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதியாகியுள்ளது.
மேற்கண்ட 4 பேரும் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 60 கிலோ எடைப் பிரிவு காலிறுதியில் சீன தைபேவின் சூ யென் லாயை வீழ்த்தினார் சிவ தாபா. ஆசிய குத்துச்சண்டை போட்டியில் மூன்றாவது முறையாக பதக்கத்தை உறுதி செய்திருக்கும் சிவ தாபா, தனது அரையிறுதியில் மங்கோலியாவின் சின்úஸாரிங் படார்சுக்கை சந்திக்கிறார்.
விகாஸ் கிருஷ்ணன் (75 கிலோ) தனது காலிறுதியில் இந்தோனேசியாவின் பிரம்ம ஹேந்திராவை தோற்கடித்தார். அடுத்ததாக தென் கொரியாவின் டாங்கியூன் லீயை எதிர்கொள்கிறார் விகாஸ். சுமித் சங்வான் (91 கிலோ) தனது காலிறுதியில் சீனாவின் ஃபெங்காயை வீழ்த்தினார். அரையிறுதியில் தஜிகிஸ்தானின் ஜகோன் குர்போனோவை எதிர்கொள்கிறார் சுமித் சங்வான்.
வர்த்தகம் :
ஜூலை 1-ம் தேதி முதல் புதுச்சேரி-ஹைதராபாத் இடையே விமான சேவை
ஜூலை 1-ம் தேதி முதல் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் மூலம் புதுச்சேரி-ஹைதராபாத் இடையே விமான சேவை ஆரம்பமாக இருக்கிறது.
இதுதொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறையுடன் முதல்வர் நாராணயசாமி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அதற்கு ஒப்புதல் கிடைத்ததையடுத்து ஜூலை 1-ம் தேதி முதல் புதுச்சேரி-ஹைதராபாத் இடையே விமானம் இயக்கப்பட உள்ளது.
விமான கட்டணம் 2500 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து பெங்களூருவுக்கு 2 ஆண்டுகளுக்கு முன் விமானம் இயக்கப்பட்டது. போதிய பயணிகள் இல்லாததால் அந்த சேவை ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Great article keep it up.
ReplyDeletehttp://scamphishingmail.blogspot.com