உலகம் :
தென் கொரியா: செயல்பாட்டுக்கு வந்தது வான் பாதுகாப்பு ஏவுகணை
தென் கொரியாவில் ஈடுபடுத்தியுள்ள வான்
பாதுகாப்பு ஏவுகணை
தளவாடம் முழு
செயல்பாட்டுக்கு வந்ததாக அமெரிக்கா அறிவித்தது.
வட கொரியாவின் தாக்குதல் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, தென்
கொரியாவில் வான்
பாதுகாப்புக்கான அதிநவீன ஏவுகணை
தளவாடத்தை அமெரிக்கா அமைத்துள்ளது. எதிரியின் ஏவுகணைகளை விண்ணில் தடுத்து அழிக்கும் அந்த
தளவாடம் அண்மையில் அமெரிக்காவிலிருந்து கொண்டு
வரப்பட்டது.
இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறை
வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
தென் கொரியாவின் சியோங்ஜு பகுதியில் அமெரிக்கா அமைத்துள்ள வான்
பாதுகாப்பு ஏவுகணை
தளவாடம் செயல்பாட்டுக்கு வந்தது.
எதிரியின் சிறு
ரக
மற்றும் நடுத்தர ரக
ஏவுகணைகளை நடுவானில் தடுக்கும் திறன்
இந்த
வான்
பாதுகாப்பு தளவாடத்துக்கு உள்ளது.
இந்த தளவாடத்தைத் தொடர்ந்து மேம்படுத்துவதன் மூலம்
மிகவும் சக்தி
வாய்ந்த ஏவுகணைகளையும் நடுவானில் தடுத்து அழிக்க
முடியும். இந்த
ஆண்டு
இறுதிக்குள் இதன்
திறனை
அதிகரிக்க அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என்று
ராணுவ
வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியா:
பொதுக் கணக்கு குழுவின் புதிய தலைவர் கார்கே
நாடாளுமன்ற பொதுக்
கணக்கு
குழுவின் தலைவராக மக்களவை காங்கிரஸ் தலைவர்
மல்லிகார்ஜுன கார்கே
நியமிக்கப்பட்டுள்ளார்.
மொத்தம் 21 உறுப்பினர்களைக் கொண்ட
இந்தக்
குழுவின் தலைவராக இருந்த
கே.வி.தாமஸின் பதவிக்
காலம்
கடந்த
30-ஆம்
தேதியுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து, அந்தப்
பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே
நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது, பொதுக்
கணக்கு
குழுவில் பாஜக
உறுப்பினர்களின் எண்ணிக்கையே அதிகம்.
இந்தக்
குழுவின் உறுப்பினர்களாக இருந்த
பாஜகவைச் சேர்ந்த எம்.பி.க்கள் ரிச்சர்ட் ஹே,
ஜனார்த்தன் சிங்
சிக்ரிவால் ஆகியோருக்கு பதிலாக
சுபாஷ்
சந்தர
பஹேரியாவும், ராம்
சங்கரும் புதிய
உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின்
செலவுகளுக்காக நாடாளுமன்றத்தில் ஒதுக்கப்படும் நிதியை
பொதுக்
கணக்குக் குழு
ஆய்வு
செய்யும். பாதுகாப்பு, ரயில்வே, வரிவதிப்பு ஆகியவை
தொடர்பாக தாக்கல் செய்யப்படும் மத்திய
கணக்குத் தணிக்கைக் குழுவின் அறிக்கையையும் இந்தக்
குழு
ஆய்வு
செய்யும்.
தமிழகம்:
அரசுப் பணி தேர்வுகளுக்கான ஏப்ரல் மாத (PDF) மாதிரி வினா-விடை தொகுப்பு
தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ,
குரூப்
2 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், 31.08.2015 முதல் சத்யா
ஐ.ஏ.எஸ். அகாதெமி, சென்னை
தொகுத்து அளிக்கும் மாதிரி
வினா-விடை பகுதி, தினந்தோறும் தினமணி
இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்.
ஏப்ரல் மாதத்திற்கான முழுமையான (PDF) தொகுப்பு தேதிவாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேதி
வாரியாக கிளிக்
செய்து
படித்து பயன்பெறவும்.
குரூப் 2ஏ பிரிவில் காலியாகவுள்ள 1,953 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மே
26 ஆம்
தேதி
கடைசி
நாளாகும். ஆகஸ்ட்
6 ஆம்
தேதி
தேர்வு
நடைபெறும். விண்ணப்பங்களை www.tnpsc.gov.in, www.tnpscexams.net என்ற இணையதளங்களின் வழியே
பூர்த்தி செய்து
அனுப்ப
வேண்டும்.
விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி
நாள்
வரை
காத்திருக்காமல் அதற்கு
முன்னரே போதிய
கால
அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஏப்ரல் மாத (PDF) முழுத்தொகுப்பு:
|
|
|
|
|
விளையாட்டு:
ஜீஜீ, குர்பிரீத் சாந்து பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
கால்பந்து வீரர்கள் ஜீஜீ
லால்பெக்லுவா, குர்பிரீத் சாந்து,
வீராங்கனை ஒய்னம்
பெம்பெம் தேவி
ஆகியோருக்கு அர்ஜுனா விருதுகள் வழங்க
அகில
இந்திய
கால்பந்து சம்மேளனம் (ஏஐஎஃப்எஃப்) பரிந்துரை செய்துள்ளது.
கடந்த ஆண்டு
ஷில்லாங்கில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியுடன் தனது
சர்வதேச கால்பந்து வாழ்க்கையிலிருந்து ஓய்வு
பெறுவதாக ஒய்னம்
பெம்பெம் தேவி
அறிவித்துள்ளார்.
இந்நிலையில், மகளிர்
கால்பந்தில் ஜாம்பவானான தேவிக்கு அர்ஜுனா விருது
வழங்குவது, கால்பந்து விளையாட்டில் அவரது
பங்களிப்புக்கு பொருத்தமான கெளரவமாக இருக்கும் என்று
கருதுவதாக அகில
இந்திய
கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அதேபோல், இந்திய
கோல்
கீப்பரான குர்பிரீத் சாந்து,
பிரபல
ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் பங்கேற்ற ஒரே
வீரர்
என்ற
பெருமைக்குரியவர். அத்துடன், நார்வேயில் நடைபெறும் கிளப்புகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியில், சிறந்த
அணியான
ஸ்டாபேக் அணிக்கு அவர்
தேர்வு
செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகம் :
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வைப்பு தொகைக்கான வட்டி குறைப்பு
ஸ்டேட் பேங்க்
ஆப்
இந்தியாவில் மூன்று
ஆண்டுகள் வரையிலான வைப்பு
தொகைக்கு 6.75 சதவீத
வட்டி
வழங்கப்பட்டு வருகிறது. இந்த
வட்டி
தொகை
தற்பொழுது .50 சதவீதம் குறைக்கப்பட்டு 6.25 சதவீதமாக குறைத்துள்ளது.
மேலும் இந்த
வங்கியில் முதியோருக்கான வைப்பு
நிதி
வைப்பு
தொக்கைக்குக்கான வட்டித் தொகையும் 7.25 சதவிகிதம் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது இது
6.75 சதவிகிதமாகக் குறைக்கப்படுவதாக எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது.
ஏற்கெனவே குறைத்த பட்ச
இருப்பு தொகையை
அதிகப்படுத்திய எஸ்.பி.ஐ தற்போது வைப்பு
தொகைக்கான வட்டி
விதங்களை குறைத்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment