Thursday, 4 May 2017

Daily Current Affairs For Competitive Exam - 5th May

இந்தியா:
இந்தியாவின் மிகத் தூய்மையான நகரமாக இந்தூர் தேர்வு: திருச்சிக்கு 6-ஆவது இடம்
துப்புரவுக்கான 'ஸ்வச் சர்வக்ஷன்-2017' விருதை, திருச்சி மாநகராட்சி ஆணையர் என். ரவிச்சந்திரனிடம் (இடது ஓரம்) வழங்குகிறார் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு.

இந்தியாவின் மிகத் தூய்மையான நகரமாக இந்தூரை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது.
இந்தியாவின் 434 நகரங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு, இந்த ஆண்டுக்கான மிகத் தூய்மையான நகரங்களின் பட்டியலை மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை வெளியிட்டது.
அந்தப் பட்டியலின் முதலிடத்தை மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் பெற்றுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக, அதே மாநிலத்தைச் சேர்ந்த போபால் இரண்டாவது மிகத் தூய்மையான நகரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இந்தப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து, மிக அசுத்தமான நகரம் என்ற பெயரை உத்தரப் பிரதேசத்தின் கோண்டா நகரம் பெற்றுள்ளது. அந்த நகருக்கு அடுத்தபடியாக மிக அசுத்தமான நகரம் என்ற பெயரை மகாராஷ்டிர மாநிலத்தின் புசாவல் நகரம் பெற்றுள்ளது.
ஜிஎஸ்எல்வி எஃப்09 ராக்கெட் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று விண்ணில் ஏவப்படவுள்ள ஜிஎஸ்எல்வி - எஃப்09 ராக்கெட்.
ஆந்திரம் மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 4.57 மணிக்கு ஜிசாட்9 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்09 ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணுக்கு செலுத்தப்படவுள்ளது.
இதற்கான கவுன்ட்டவுன் ஸ்ரீஹரிகோட்டாவில் வியாழக்கிழமை பகல் 12.57 மணிக்கு தொடங்கியது.
தெற்காசிய நாடுகளின் பயன்பாட்டுக்காக ஜிசாட் 9 செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். தெற்காசிய மண்டல நாடுகளில் பாகிஸ்தானைத் தவிர, மற்ற நாடுகளின் கூட்டுத் திட்டத்தில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 230 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், தகவல் தொடர்புக்கு உதவும் 12 கே.யு. பேண்ட் கருவிகளைச் சுமந்து செல்கிறது.
/இதன் ஆயுள் காலம் 12 ஆண்டுகளாகும். தெற்காசிய நாடுகளில் ஏற்படும் பேரழிவு தொடர்பான தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கும் வல்லமை கொண்ட இந்த செயற்கைக்கோள், ஜி.எஸ்.எல்.வி. எஃப்09 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.
அக்னி - 2 ஏவுகணை சோதனை வெற்றி
அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்ல வல்ல 'அக்னி - 2' ஏவுகணையானது ஒடிஸா மாநிலம் பலாசூரில் வியாழக்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
எதிரிப் படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ராணுவத்தில் பயன்படுத்தப்படும் நவீன ஏவுகணையான அக்னி - 2, சுமார் 16,000 கிலோ எடையும், 20 மீட்டர் நீளமும் கொண்டது. 1,000 கிலோ வரை அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் வல்லமை கொண்ட இந்த ஏவுகணையின் மூலம், நிலத்திலிருந்து 2,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைக் கூட துல்லியமாகத் தாக்க முடியும்.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு விரைவில் புதிய ஆளுநர்
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு விரைவில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகம், மத்தியப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், மேகாலயம் ஆகிய மாநிலங்களில் கடந்த பல மாதங்களாக பொறுப்பு ஆளுநர்களே உள்ளனர். மேலும், ஆந்திரம், தெலங்கானா மாநில ஆளுநராக உள்ள .எஸ்.எல். நரசிம்மன் கடந்த 2 ஆண்டுகளாக பதவி நீட்டிப்பில் உள்ளார்.
இந்நிலையில், 5 மாநிலங்களுக்கும் விரைவில் புதிய ஆளுநரை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை மத்திய அரசு வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
தமிழக ஆளுநராக இருந்த கே.ரோசய்யா கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து, மகாராஷ்டிர ஆளுநர் சி.வித்யாசாகர் ராவ், தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.
இதேபோல, மத்தியப் பிரதேச ஆளுநர் பொறுப்பை குஜராத் ஆளுநர் ஓம் பிரகாஷ் கோலியும், மேகாலய ஆளுநர் பொறுப்பை அஸ்ஸாம் ஆளுநர் பன்வாரிலாலும், அருணாசலப் பிரதேச ஆளுநர் பொறுப்பை நாகாலாந்து ஆளுநர் பத்மநாப ஆச்சார்யாவும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர்.
விளையாட்டு:
ஆசிய குத்துச்சண்டை சதீஷ் குமார் தோல்வி
ஆசிய குத்துச்சண்டை போட்டியின் காலிறுதியில் இந்திய வீரர் சதீஷ் குமார் (+91 கிலோ எடைப் பிரிவு) தோல்வியடைந்தார்.
உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சதீஷ் குமார் தனது காலிறுதியில் கஜகஸ்தானின் கம்ஷிபெக்கிடம் தோல்வி கண்டார். மற்றொரு இந்திய வீரரான மணீஷ் பன்வார் (81 கிலோ) தனது காலிறுதியில் துர்க்மேனிஸ்தானின் நூர்யாக்டியிடம் தோல்வி கண்டார்.
மற்ற இந்தியர்களான மனோஜ் குமார் (69 கிலோ), கவிந்தர் சிங் (49 கிலோ) ஆகியோரும் தங்களின் காலிறுதியில் தோல்வியடைந்தனர்.
அர்ஜுனா விருது சர்ஜுபால தேவி உள்ளிட்ட மூவர் பெயர் பரிந்துரை
இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் சவீதி பூரா (81 கிலோ எடைப் பிரிவு), சோனியா (57 கிலோ), சர்ஜுபால தேவி (51) ஆகியோரின் பெயர்களை அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைத்துள்ளது இந்திய குத்துச்சண்டை சம்மேளனம்.
இவர்கள் மூவரும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சவீதி, சர்ஜுபால தேவி ஆகியோர் 2014 உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும், சோனியா 2016 உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர்.
இது தொடர்பாக இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த முறை அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள மூவரும் வீராங்கனைகள்தான். ஏனெனில் அவர்கள் மூன்று பேர் மட்டுமே அர்ஜுனா விருதுக்கு விண்ணப்பிக்க எங்களை அணுகினார்கள்' என்றார்.
கால்பந்து தரவரிசை 100-ஆவது இடத்தில் இந்தியா
சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 100-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த 21 ஆண்டுகளில் முதல்முறையாக 100-ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது இந்தியா. அதேநேரத்தில் சுதந்திரம் பெற்ற பிறகு 6-ஆவது முறையாக 100-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா. 1996 பிப்ரவரியில் 94-ஆவது இடத்தைப் பிடித்ததே இந்தியாவின் அதிகபட்ச தரவரிசையாக இன்றளவும் உள்ளது. ஆசிய அணிகள் தரவரிசையில் இந்தியா தற்போது 11-ஆவது இடத்தில் உள்ளது.
இது குறித்து இந்திய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டான்டின் கூறியதாவது: தரவரிசையில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது நாம் சரியான திசையில் முன்னேறிக் கொண்டிருப்பதைக் காட்டுவதாக அமைந்துள்ளது. அடுத்ததாக பெரிய ஆட்டங்களில் மோத வேண்டியிருக்கிறது. அதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது' என்றார்.
வர்த்தகம் :
.சி..சி.. வங்கி லாபம் ரூ.2,024 கோடி
நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான .சி..சி.. நான்காவது காலாண்டில் ரூ.2,024.64 கோடி லாபம் ஈட்டியது.
இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: .சி..சி.. வங்கி சென்ற நிதி ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் ரூ.16,585.76 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த 2015-16-ஆம் நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.18,590.86 கோடியாக காணப்பட்டது.
நிகர லாபம் ரூ.701.89 கோடியிலிருந்து பல மடங்கு அதிகரித்து ரூ.2,024.64 கோடியாக இருந்தது.
சென்ற 2016-17 முழு நிதி ஆண்டில் மொத்த வருவாய் ரூ.68,062.48 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.73,660.76 கோடியாக காணப்பட்டது. நிகர லாபம் ரூ.9,726.29 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.9,801.09 கோடியானது.


No comments:

Post a Comment