Wednesday 29 August 2018

28 ஆகஸ்ட் முக்கிய நிகழ்வுகள்

உலகம்

பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம்: ஆஸ்திரேலிய தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடல் அருகே இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஆஸ்திரேலியா அருகிலுள்ள நியூ கலிடோனியா, ஃபிஜி, வனாடு ஆகிய மூன்று தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறிய அளவே மக்கள்தொகை கொண்ட லயோலிட்டி தீவுகளுக்கு அருகே சுமார் 231 கிலோ மீட்டர் தொலைவில் தெற்கு பசிபிக் பெருங்கடலில் 27 கிலோமீட்டர் (17 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை ஆஸ்திரேலியா அருகில் நியூ கலிடோனியாவின் கடற் கடற்கரைக்கு அருகே 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 0..3 லிருந்து 1 மீட்டர் உயரத்திற்க கடல் அலைகள் உயர்ந்துள்ளதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

விண்வெளியில் புற்றுநோய்க்கு சிகிச்சை: நாசாவின் ஆராய்ச்சியில் முன்னேற்றம்

புற்றுநோய் சிகிச்சைகள் கண்டுபிடிப்பதற்கான ஒரு தேடலில். சர்வதேச விண்வெளிகளில் ரத்த செல்களில் பரிசோதனைகளை நாசா நடத்தி வருகிறது. இதில் முன்பைவிட முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் மைக்ரோஆக்டிவிடி சயின்ஸ் குளோவ்பாக்ஸ் விண்வெளி நிலையத்தில் இருந்தபடி விண்வெளி வீரர் செரீனா அவுன்-சான்ஸலர் ஆன்ஜிக்ஸ் புற்றுநோய் சிகிச்சை ஆய்வுக்காக ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுகின்றனர்.
ஆனோன் சான்செலர் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே விண்வெளி நிலையத்தை சென்றடைந்தார். இரத்த நாளங்களின் மேற்பரப்புக்கு இட்டுச்செல்லும் உயிரணுக்கள் மீதான சோதனைகளை நடத்துவதற்காக அடுத்த சில மாதங்களும் அங்கேயே செலவிடுவார்.

கேரளாவுக்கு அதிகமான நிவாரண உதவியை மத்திய அரசு வழங்காதது வேதனை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு அதிகமான நிவாரண உதவிகளை மத்தியிலும் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வழங்காதது வேதனை அளிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கேரளாவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக கேரளாவுக்கு வந்துள்ளார். செங்கனூர், கொச்சின், எர்ணாகுளம், ஆலப்புழா, கோட்டயம், உள்ளிட்ட நகரங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார்.
ஒரு கோடி பேர் பலனடைவர்; மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி, 9 சதவீதமாக வழங்க அளிக்கப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த அறிவிப்பு மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தப்பட்டநிலையில், 4 மாதங்களில் மீண்டும் 2 சதவீதம் உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
உயர்த்தப்பட்ட இந்த அகவிலைப்படி ஜூலை மாதம் முன்தேதியிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

விளையாட்டு


சிமோனா ஹாலப் தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் சிமோனா ஹாலப் தோல்வி அடைந்தார்.
ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான ருமேனி யாவின் சிமோனா ஹாலப், 44-ம் நிலை வீராங்கனையான எஸ்டோனியாவின் கயா கனே பியை எதிர்த்து விளையாடினார்.
இதில் சிமோனா ஹாலப் 2-6, 4-6 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார். இதன் மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸில் முதல் சுற்றுடன் வெளியேறிய முதல், நம்பர் ஒன் வீராங்கனை என்ற மோசமான சாதனையை படைத்தார் ஹாலப். மற்ற ஆட்டங் களில் ஸ்பெயினின் கார்பைன் முகுருசா, உக்ரையின் எலினா ஸ்விட்டோலினா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஆடவர் பிரிவு முதல் சுற்றில் இங்கிலாந்தின் ஆண்டி மூர்ரே, அமெரிக்காவின் ஜான் இஷ்னர், கனடாவின் மிலோஸ் ரயோனிச், சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

வணிகம்


இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத சரிவு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று, வரலாற்றில் இல்லாத அளவு கடுமையாக சரிந்தது.
துருக்கியின் பொருளாதார சரிவின் காரணமாக அதன் நாணயமான லிரா கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் அண்மைகாலமாக உலக அளவில் டாலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாணயங்களும் சரிவினை கண்டுள்ளன. இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டது.
அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியது. இதனால் கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்தநிலையில் இந்திய ரூபாய் மதிப்பு இன்று வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்துள்ளது.

No comments:

Post a Comment