Sunday, 9 September 2018

10th செப்டம்பர் முக்கிய நிகழ்வுகள்

உலகம்

பாகிஸ்தான் புதிய அதிபராக ஆரிப் ஆல்வி பதவியேற்பு

பாகிஸ்தான் நாட்டின் புதிய அதிபராக ஆரிப் ஆல்வி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவர் இம்ரான் கான். கடந்த மாதம் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் பாகிஸ்தானின் அதிபர் தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் அய்தாஸ் அஹ் சான், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் கட்சியின் மவுலான பசல் ஆகி யோரைத் தோற்கடித்து தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி சார்பில் ஆரிப் ஆல்வி வெற்றி கண்டார்.

இந்த நிலையில் இஸ்லாமா பாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தானின் 13-வது அதிபராக ஆரிப் ஆல்வி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சாகிப் நிஸார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தீபாவளி சிறப்பு தபால் தலை வெளியிடுகிறது ஐ.நா. சபை

தீபாவளி பண்டிகைக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில், அடுத்த மாதம் சிறப்பு தபால் தலை வெளியிடப் படும் என்று ஐ.நா. சபை அறிவித் துள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 6-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அந்தப் பண்டிகைக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில், சிறப்பு தபால் தலை வெளியிட ஐ.நா. சபை முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. சபை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஐ.நா.வின் தபால் தலை நிர்வாகப் பிரிவு, தீபாவளி பண் டிகைக்காக அடுத்த மாதம் சிறப்பு தபால் தலை வெளியிடுகிறது. நியூயார்க்கில் (ஐ.நா. தலைமை அலுவலகம்) அக்டோபர் 19-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் தீபாவளி சிறப்பு தபால் தலைகள் வெளியிடப்படும். ஒரு தாளில் 10 சிறப்பு தபால் தலைகள் இருக்கும். அதன் விலை 1.15 டாலர். அந்தச் சிறப்பு தபால் தலையில் அகல்விளக்கு ஒளிரும் படம் இடம்பெறும். அதன் பின் னணியில் ஐ.நா. தலைமை அலுவலக கட்டிடமும் ‘மகிழ்ச்சி யான தீபாவளி’ வாழ்த்தும் இடம்பெறும்.

இந்தியா

ஹரியானாவில் பூகம்பம்; டெல்லியும் அதிர்ந்தது

ஹரியானா மாநிலம், ஜிஜார் மாவட்டத்தில் இன்று மாலை மிதமான அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இந்தபூகம்பத்தின் அதிர்வுகள் டெல்லி வரை உணரப்பட்டது.
ஹரியானா மாநிலம் ஜிஜார் மாவட்டத்தில் இன்று மாலை 4.37 மணிக்கு திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 3.8 ஆகவும், பூமியின் 10கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகத் தேசிய நிலஅதிர்வுஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நில அதிர்வு தலைநகர் டெல்லி, குருகிராம், மஹாவீர் என்கிளேப் ஆகிய பகுதிகள் வரைஉணரப்பட்டது. பூகம்பம் ஏற்பட்டபோது, ஜிஜார் மாவட்டத்தில் கட்டிடங்கள் லேசாகக் குலுங்கியதால்,மக்கள் பீதியடைந்து அலறி வெளியே ஓடி சாலைக்கு வந்தனர். இதுமிதமான நிலநடுக்கம் என்பதால், எந்தவிதமான சேதமும், பொருள் இழப்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

விளையாட்டு


உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் இந்திய வீரர் அங்குர் மிட்டல்

உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் டபுள் ட்ராப் பிரிவில் இந்தியாவின் அங்குர் மிட்டல் தங்கப் பதக்கம் வென்றார்.
தென் கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான டபுள் ட்ராப் பிரிவில் இந்தியாவின் அங்குர் மிட்டல் தங்கப் பதக்கம் வென்றார். இறுதி சுற்றில் அங்குர் மிட்டல், சீனாவின் யியங், சுலேவேக்கியாவின் ஹுபர்ட் ஆகியோர் தலா 140 புள்ளிகள் பெற்று முதலிடம் வகித்தனர். இதனால் வெற்றியை தீர் மானிக்க ஷூட்-ஆஃப் முறை கடைபிடிக்கப் பட்டது. இதில் அங்குர் மிட்டல் 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தினார். யியங் வெள்ளிப் பதக்கமும், ஹூபர்ட் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

வணிகம்


ஓய்வு பெறுகிறார் ஜாக் மா: கல்விச் சேவையில் முழுமையாக ஈடுபட முடிவு 

சீனாவின் மிகப்பெரிய பணக்கார ரான ஜாக் மா தனது அலிபாபா நிறுவனத்திலிருந்து வரும் திங்கள் அன்று ஓய்வுபெறுவதாக அறிவித் துள்ளார். முன்னாள் ஆங்கில ஆசிரி யரான ஜாக் மா, ஒருகாலத்தில் ஆங்கிலம் பேச வராத காரணத் தினால் வேலை கிடைக்காமல் திண் டாடியவர். 1999ல் தன்னுடைய மாணவர்களை வைத்து தொடங் கியதுதான் அலிபாபா நிறுவனம்.

ஆன்லைன் வர்த்தக நிறுவன மான அலிபாபா, சீன மக்களின் வாழ்க்கை முறையையே மாற்றி யது. சீனாவில் இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சந் தையை முழுவதுமாகத் தனதாக் கிக்கொண்டதன் மூலம் அலிபாபா 420 பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக உயர்ந்தது. ஜாக் மாவும் இதன் மூலம் 40 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் சீனாவின் முதல் பெரிய பணக்காரராக உயர்ந்தார். தற்போது அலிபாபா தனது சேவையை உலகின் பல் வேறு நாடுகளிலும் பல்வேறு தொழில்களிலும் விரிவுபடுத்தி வருகிறது.

No comments:

Post a Comment