Monday 10 September 2018

11th செப்டம்பர் முக்கிய நிகழ்வுகள்

உலகம்

ஆஸ்திரேலிய கடற்படை ராணுவப் பயிற்சியில் சீனா பங்கேற்பு

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் கூட்டுக் கடற்படை ராணுவப் பயிற்சியில் சீனா உட்பட 27 நாடுகள் பங்கேற்றுள்ளன.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், "ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியிலுள்ள போர்ட் டார்வினில் 27 நாடுகள் பங்கேற்ற கடற்படை தொடர்பான ராணுவப் பயிற்சியில் சீனா முதல் முறையாகப் பங்கேற்றுள்ளது. இதில் வெவ்வேறு நாடுகளிலிருந்து 3,000 கடற்படை வீரர்கள் கலந்து கொண்டனர். 23 கப்பல்கள் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டன” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சி மூலம் நாடுகளுக்கிடையே நிலவும் வேறுபாடுகள், ஒற்றுமைகள் பரஸ்பரமாகப் புரிந்துகொள்ள முடிந்தது. மேலும் இந்தக் கூட்டுப் பயிற்சி நம்பகத்தன்மையை இதில் பங்கேற்ற நாடுகளிடையே அதிகரித்துள்ளது என்று ஆஸ்திரேலிய ராணுவப் படை தெரிவித்துள்ளது.

இந்தியா


35-ஏ சட்டப் பிரிவை ரத்து செய்ய எதிர்ப்பு; உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பு: மக்கள் ஜனநாயக கட்சி எச்சரிக்கை

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை பாது காக்க நடவடிக்கை எடுக்கா விட்டால், உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்போம் என தேசிய ஜனநாயகக் கட்சியை அடுத்து, மக்கள் ஜனநாயகக் கட்சியும் (பிடிபி) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 35-ஏ பிரிவு காஷ்மீர் மாநில மக்களுக்கு சிறப்பு உரிமை வழங்குவதுடன் பிற மாநில மக்கள் காஷ்மீரில் அசையா சொத்து வாங்க தடை விதிக்கிறது. இந்தப் பிரிவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

விளையாட்டு


‘கோல்டன் ஆர்ம்’-சதநாயகர்கள் குக், ரூட்டை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் வாய்ப்பு பெற்ற ஹனுமா விஹாரி

ஓவல் டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான இன்று இந்தியப் பந்து வீச்சை வறுத்தெடுத்த அலிஸ்டர் குக், ஜோ ரூட் ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் வாய்ப்புப் பெற்றார் அறிமுக வீரர் ஹனுமா விஹாரி.
தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 364 ரன்கள் என்று 404 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
முதல் டெஸ்ட்டிலேயே கடும் நெருக்கடித் தருணத்தில் இறங்கி அரைசதம் அடித்து தன் தேர்வு குறித்து இருந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்த ஹனுமா விஹாரியை முதல் இன்னிங்சில் கோலி சரியாகப் பயன்படுத்தவில்லை.
இந்நிலையில் 3வது விக்கெட்டுக்காக இணைந்து 259 ரன்களைச் சேர்த்து இந்தியப் பந்து வீச்சை வறுத்து எடுத்த ஜோ ரூட், அலிஸ்டர் குக் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஹாட்ரிக் வாய்ப்புப் பெற்றார் ஹனுமா விஹாரி.

வணிகம்


அதிவேக தொழில்நுட்பத்தில் ஹாத்வே இணைய சேவை: சென்னையில் அறிமுகம் 

ஹாத்வே கேபிள் மற்றும் டேட்டா காம் நிறுவனம், 300 எம்பிபிஎஸ் வேகத்தில் புதிய மெஷ் வைஃபை தொழில்நுட்பத்துடன் பிராட்பேண்ட் இணைய சேவையை சென்னையில் நேற்று அறிமுகம் செய்தது. இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பொழுது போக்கு மற்றும் தொழில் காரணங் களுக்காக அதிவேக இணைய சேவையின் தேவையும் அதிக மாக உள்ளது. இதை பூர்த்தி செய்வதற்காக ஹாத்வே நிறுவ னம் புதிய தொழில்நுட்பத்துடன் களமிறங்கியுள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக மெஷ் வைஃபை தொழில்நுட் பத்தில் இயங்கும் ‘ஹாத்வே எட்ஜ்’ என்ற சேவையை ஹாத்வே நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இந்த மெஷ் தொழில்நுட்பம் உலக ளவில் அதிவேக இணைய சேவைக் காகப் பயன்படுத்தப்படும் முன் னணி தொழில்நுட்பமாகும். 300 எம்பிபிஎஸ் வேகம், 2 டிபி டேட்டா வுடன் வரும் இந்த ’ஹாத்வே எட்ஜ்’ 12 மாத பேக்கேஜ் மாதம் ரூ. 1250க்கு அறிமுகப்படுத்தப் பட்டுள் ளது என்று இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜிவ் குப்தா தெரிவித்தார்.

No comments:

Post a Comment