Thursday, 13 September 2018

13th செப்டம்பர் முக்கிய நிகழ்வுகள்

உலகம்

அமெரிக்காவை வெறுப்பெற்ற சீனா, ரஷ்யாவுடன் கூட்டு சேரும் ஈரான்

தொடர்ந்து அமெரிக்காவால் பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளாகி வரும் ஈரான் அதிலிருந்து மீள சீனாவின் உதவியை எதிர்நோக்கி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அமெரிக்காவின் இயங்கி வரும் RAND அமைப்பிலுள்ள அரசியல் அறிஞர் ஆரியானே தபதபாய் (இவர் சமீபத்தில் எழுதிய புத்தகம் ஒன்றில் ஈரான் விரைவில் சீனா, ரஷ்யாவுடன் கைக்கோர்க்கும் என்று குறிப்பிட்டிருந்தார்) கூறும்போது, "பொருளாதார சரிவிலிருந்து மீள ஈரான் சீனாவின் உதவியை கோரவுள்ளது. விரைவில் நாம் அதனை காண இருக்கிறோம். ஆனால் ஈரானுக்கு பொருளாதார ரீதியாக உதவி புரிய சீனா நிபந்தனைகளை விதிக்கக் கூடும்” என்று கூறியுள்ளார்.

உலகின் தலைசிறந்த பொருளாதார மையம் நியூயார்க்: பெருமையை பறிகொடுத்தது லண்டன்

உலகின் தலைசிறந்த பொருளாதார மையம் என்ற பெருமையை லண்டன் நகரத்திடம் இருந்து நியூயார்க் பறித்துள்ளது.
உலகின் மிகச்சிறந்த பொருளாதார நிறுவனங்கள், வர்த்தக கம்பெனிகள் லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தன. உலக அளவில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள லண்டன் வசதியான பகுதியாக இருந்ததால், உலகின் தலை சிறந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இங்கு தங்கள் தலைமையிடத்தை வைதது இருந்தன.

இந்தியா


குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய விரைவில் புதிய கொள்முதல் கொள்கை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

எண்ணெய் வித்து விவசாயிகளுக் கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட புதிய கொள் முதல் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித் துள்ளது.
நிகழாண்டு தாக்கல் செய்யப் பட்ட பட்ஜெட்டில், விவசாயி களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை உறுதி செய் வதற்காக ஒரு செயல்திட்டம் உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. மேலும், வேளாண்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி இந்த செயல்திட்டத்தை வகுக்குமாறு நிதி ஆயோக் அமைப்பிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

வணிகம்


முந்த்ரா கடன்களால் வங்கிகளுக்கு நெருக்கடி: ரகுராம் ராஜன் எச்சரிக்கை

பெரும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை வங்கிகளுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி வாராக்கடன்களாக உருவெடுத்துள்ளதைபோலவே, முந்த்ரா, விவசாயக் கடன்களும் நெருக்கடியை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.
வாரக்கடன்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வு செய்து வருகிறது. இதற்கான நாடாளுமன்ற மதிப்பீட்டுக்குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை அறிக்கைகளாக சமர்பித்து வருகின்றனர். இதில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனும் அறிக்கை அளித்துள்ளார்.

No comments:

Post a Comment