Monday, 17 September 2018

17th செப்டம்பர் முக்கிய நிகழ்வுகள்

பிலிப்பைன்ஸைத் தாக்கிய மங்குட் புயல்: 59 பேர் பலி; ஹாங்காங், தெற்கு சீனாவிலும் கடும் பாதிப்பு
இந்த வருடத்தின் சக்கி வயந்த புயலாகக் கருதப்பட்ட மங்குட் புயல் பிலிப்பைன்ஸைத் தாக்கியதில் இதுவரை 59 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், "பிலிப்பைன்ஸின் பக்காயோ இடத்தில் மங்குட் புயல் ஞாயிற்றுக்கிழமை கரையைக் கடந்தது. இதனால் மணிக்கு 300 கிலோமீட்டர் அளவில் சூறைக்காற்று வீசியது. 

கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைப்பு: குமாரசாமி அதிரடி
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்படும் என்ற அறிவிப்பை கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி இன்று வெளியிட்டார்
ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்க அரசுகள் எரிபொருள் விலையைக் குறைத்த பின்னர் குமாரசாமிக்கு எதிரான அரசியல் அழுத்தத்தை அடுத்து இந்த அறிவிப்பு வருகிறது.

ஜன்தன் யோஜனாவில் புதிதாக 20 லட்சம் பேர்: மொத்த பயனாளர் எண்ணிக்கை 32.61 கோடி
பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா திட்டத்தில் 20 லட்சம் பேர் புதிதாக இணைந்துள்ளனர். இதன் மூலம் இத்திட்டத்தில் சேர்ந் தவர்களின் எண்ணிக்கை 32.61 கோடியாக உயர்ந்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித் துள்ளது.
இம்மாத தொடக்கத்தில் ஜன்தன் யோஜனா திட்டத்தில் சில மாற்றங் களை மத்திய அரசு மேற் கொண்டது. இதன்படி இத்திட்ட பயனாளிகளுக்கான காப்பீட்டுத் தொகை இரு மடங்காக உயர்த்தப் பட்டது. அத்துடன் ஓவர் டிராப்ட் (ஓடி) வசதியும் அளிக்கப்பட்டது.

தங்கம் வென்றார் மேரி கோம்

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் சரிவு
இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் கடும் சரிவைச் சந்தித்தன. டாலர் மதிப்பு உயர்வால் பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தங்கள் பங்குகளை விற்பனை செய்ததால் சரிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
உலக அளவில் டாலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாணயங்களும் சரிவினைக் கண்டுள்ளன. ஈரான் ரியால் மதிப்பு ஒரு டாலருக்கு நிகராக 1 லட்சத்து 20 ஆயிரம் என்ற அளவில் சரிவடைந்தது. அதுபோலவே, இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டது.

No comments:

Post a Comment