Tuesday, 18 September 2018

18th செப்டம்பர் முக்கிய நிகழ்வுகள்

14 வீரர்களுடன் சென்ற ரஷ்ய போர் விமானம் சிரியாவில் மாயம்
ரஷ்யாவைச் சேர்ந்த போர் விமானம் ஒன்று சிரியாவில் மாயமாகி உள்ளதாக அந் நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில், "ரஷ்யாவின் போர் விமானமான Russian Il-20, 14 வீரர்களுடன் சிரியாவிலுள்ள ரஷ்யாவின் ராணுவ தளமான ஹிமியம் விமானப்படை தளத்திற்குத் திரும்பியது. அப்போது சிரியா கடற்கரையில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் மத்திய தரைக்கடல் பகுதியில் வந்தபோது விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானத்தைத் தேடும் பணி நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி அன்னா ராஜம் மல்ஹோத்ரா மும்பையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 91.
1951-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ராஜம், மெட்ராஸ் மாநிலத்தில் முதல்வர் ராஜாஜியின் கீழ் பணிபுரிந்தவர். 7 முதல்வர்களின் கீழ் பணியாற்றியுள்ள ராஜம், முன்னாள் பிரதமர்கள் இந்தியா காந்தி, ராஜீவ் காந்தியின் கீழ் பணியாற்

ஆசியக் கோப்பை: இலங்கையை வீட்டுக்கு அனுப்பியது ஆப்கான்; ஸ்பின்னில் மடிந்து அதிர்ச்சி
அபுதாபியில் நடைபெறும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் குரூப் பி ஆட்டத்தில் முதலில் வங்கதேசத்திடமும் பிறகு நேற்று ஆப்கானிஸ்தானிடமும் தோற்று இலங்கை அணி அதிர்ச்சி வெளியேற்றம் கண்டது.

5 முறை ஆசிய சாம்பியன்களான இலங்கை 3 நாட்களில் ஆசியக் கோப்பையிலிருந்து வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விஜயா வங்கி, தேனா வங்கி, பிஓபி இணைப்பு ?
பொதுத்துறை வங்கிகளான விஜயா வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆப் பரோடா (பிஓபி) ஆகிய மூன்று வங்கிகளையும் இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. இத்தகவலை மத்திய அரசின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
வங்கிகள் இணைப்பு குறித்து மூன்று வங்கிகளின் இயக்குநர் குழு கூடி ஆராய உள்ளதாக மத்திய நிதி சேவைத்துறை செயலர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
வங்கித் துறைகளை சீரமைக்க வேண்டியது மிகவும் அவசிய மாகும். வங்கிகளுக்குத் தேவைப் படும் நிதியை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு பார்த்துக் கொள்ளும் என்றும் அவர் குறிப் பிட்டார்.

No comments:

Post a Comment