அணு ஆயுத சோதனைக் கூடங்களை வெளிநாட்டு நிபுணர்கள் முன்னிலையில் அழிக்கத் தயார்: வடகொரியா
வடகொரியாவில் உள்ள அணு ஆயுத ஏவுகணை சோதனைக் கூடங்களை வெளிநாட்டு நிபுணர்கள் முன்னிலையில் நிரந்தரமாக அழிக்க அந்நாடு சம்மதம் தெரிவித்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும், தென்கொரிய அதிபர் மூன் ஜே உன்னும் வடகொரியா தலைநகர் பியாங்கியாங்கில் நடைபெற்ற கொரிய உச்சி மாநாட்டில் பங்கேற்றனர். பின்னர் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
புகையில்லை, 140கி.மீ வேகம்; சூழலை பாதிக்காத உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் வெள்ளோட்டம்
சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாதவகையில், ஹைட்ரஜனில் ஓடும் உலகின் முதல் ரயில் ஜெர்மனியில் நேற்று சோதனை ஓட்டம் செய்து பார்க்கப்பட்டது.
மின்சாரத்திலும், டீசலிலும் தற்போது ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், சூழலுக்கு விளையும் கேடுகளை குறைக்கும் வகையில் இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பிரதமர் மோடியின் கனவுத் திட்டத்துக்கு திடீர் சிக்கல் - புல்லட் ரயிலுக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு; 1000 விவசாயிகள் வழக்கு
மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்துக்கான பூர்வாங்க பணிகள் நடந்து வரும் நிலையில் தங்கள் நிலம் சட்டவிரோதமாக எடுக்கப்படுவதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் குஜராத் உயர் நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பிரதமர் மோடியின் கனவுத்திட்டங்களில் ஒன்று மும்பை- அகமதாபாத் புல்லட் ரயில் திட்டமாகும். ஜப்பான் உதவியுடன் 1.10 லட்சம் கோடி ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட உள்ள புல்லட் ரயில் 2022ம் ஆண்டு முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால், நாட்டில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என மத்தியஅரசு நம்புகிறது.
2-வது சுற்றில் பி.வி.சிந்து
சீன ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
சீனாவின் சாங்ஸோ நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொட ரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 3-ம் நிலை வீராங் கனையான இந்தியாவின் பி.வி. சிந்து, 39-ம் நிலை வீராங்கனை யான ஜப்பானின் சயினா கவா கமியை எதிர்த்து விளையாடினார். 26 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-15, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
பங்குச் சந்தையை புரிந்து கொள்ள ‘எஸ் அண்ட் பி’ பிஎஸ்இ குறியீடுகள்
பங்குச் சந்தை சார்ந்த முதலீடு களில் கவனம் செலுத்த ‘எஸ் அண்ட் பி’ பிஎஸ்இ குறியீடுகள் முதலீட்டாளர்களுக்கு உதவு கின்றன. இது தொடர்பாக ‘எஸ் அண்ட் பி' பிஎஸ்இ குறியீடுகளின் தெற்காசிய தலைவர் கோல் கோஷ் கூறுகையில்,
பங்குச் சந்தை போக்கினை புரிந்து கொள்ளவும், பங்குச் சந்தையில் சிறப்பாக செயல்படவும் ‘எஸ் அண்ட் பி ' குறியீடுகள் முதலீட் டாளர்களுக்கு உதவுகின்றன. எஸ்அண்ட்பி பாரத் 22, பிஎஸ்இ100, இ எஸ் ஜி இண்டெக்ஸ் போன்ற குறியீடுகள் சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கு உதாரணமாக உள்ளன.
No comments:
Post a Comment