Wednesday, 19 September 2018

20th செப்டம்பர் முக்கிய நிகழ்வுகள்

நிதி மோசடி வழக்கு: மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீண்டும் கைது
நிதி மோசடி வழக்கு தொடர் பாக மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கை அந்நாட்டு ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, அக்கூட்டணியின் தலைவரான மகாதீர் முகமது பிரதமராக பதவியேற்றார். அது முதலாக, முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.

அசாம் என்ஆர்சி வரைவுப் பட்டியல்; விடுபட்டவர்களிடம் 60 நாட்கள் விண்ணப்பம் பெற வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
அசாமில் என்ஆர்சி (தேசிய குடிமக்கள் பதிவேடு) வரைவுப் பட்டியலில் விடுபட்ட அனைவரிடம் இருந்தும் விண்ணப்பம் மற்றும் ஆட்சேபங்களை பதிவுசெய்யும் நடைமுறைகளைப் மீண்டும் தொடங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அசாமில் இந்த ஆண்டு ஜூலையில் வெளியான என்ஆர்சி இறுதி வரைவுப் பட்டியலில் சுமார் 40 லட்சம் பேர் விடுபட்டது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி வென்றார் சஜன் பன்வால்
உலக ஜூனியர் மல்யுத்தப் போட்டி சுலோவேக்கியாவில் நடைபெற்றது. இதில் ஆடவருக்கான 77 கிலோ கிரகோ ரோமன் பிரிவில் இந்தியாவின் சஜன் பன்வால் இறுதி சுற்றில் ரஷ்ய வீரர் இஸ்லாம் ஒபியேவை எதிர்த்து விளையாடினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இஸ்லாம் ஒபியேவ் 8-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

2-வது இடம் பிடித்த சஜன் பன்வால் வெள்ளிப் பதக்கம் பெற்றார். மற்றொரு இந்திய வீரரான விஜய், 55 கிலோ கிரகோ ரோமன் பிரிவில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் அவர், துருக்கியின் அஹ்மத் லிமானை 16-8 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

2-வது சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 
சீன ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

சீனாவின் சாங்ஸோ நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 7-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 23-ம் நிலை வீரரான டென்மார்க்கின் ரஸ்மஸ் ஜெம் கியை எதிர்த்து விளையாடினார். இதில் ஸ்ரீகாந்த் 21-9, 21-19 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

தொழில்நுட்பத்தில் பின்தங்கிய நிறுவனங்கள் காணாமல் போகும்: அலிபாபா நிறுவனர் ஜாக் மா எச்சரிக்கை
உற்பத்தி துறை நிறுவனங்கள் காலத்துக்கேற்ப புதிய தொழில் நுட்பங்களுக்கு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லை யெனில் புதிய தொழில்நுட் பங்களை பயன்படுத்தும் உற்பத்தி நிறுவனங்கள் அழித்துவிடும் என்று அலிபாபா நிறுவனர் ஜாக் மா கூறியுள்ளார்.

அலிபாபா கிளவுட் கம்ப்யூட்டிங் மாநாட்டில் பேசிய அவர், அடுத்த முப்பது ஆண்டுகளில் வரப்போகும் தொழில்நுட்பங்கள் தான் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு சிறு விஷயங்களையும் தீர்மானிக்கப் போகிறது. அந்தப் புதிய தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப உற்பத்தி நிறுவனங்கள் தங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் காணாமல் போக வேண்டியதுதான் என்று எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment