ஜப்பான்: கட்சித் தலைவர் தேர்தலில் ஷின்சா அபே வெற்றி
ஜப்பான் பிரதமர் ஷின்சா அபே ஆளும் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார்.
முற்போக்கு ஜனநாயக கட்சி யின் (எல்டிபி) தலைவரான ஷின்சோ அபே, கடந்த 2012-ம் ஆண்டு முதல் பிரதமராக பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில், எல்டிபி கட்சித் தலைவர் தேர்தலில் அபே போட்டியிட்டார்.
இதில் வியாழக்கிழமை நடத்த தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிங்கெரு இஷிபாவை தோற்கடித்து 3-வது முறையாக தலைவர் பதவிக்கு ஷின்சே அபே தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
உபியில் வாஜ்பாய் பெயரில் புதிய சாலைகள்
உத்தர பிரதேசத்தின் ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பும் தரமான சாலை ஒன்றை அமைக்க வேண்டும் என்றும், அந்தச் சாலைக்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் நினைவாக ‘அடல் கெளரவ் பாத்’ என்று பெயர் வைக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.
அந்தச் சாலைகளில் எல்லா அடிப்படை வசதிகளும், நவீன வசதிகளும் அமைக்கப்படும் என்று கூறியிருக்கும் அவர், சாலைகளில் மழைநீர் வழித்தடங்கள் சுத்தப்படுத்தப்பட்டு அவை முறையாக மூடிவைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்.
2 வாரங்களுக்கு பிறகு ‘நிமிர்ந்தது’ இந்திய ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த இரண்டு வாரங்களுக்கு பிறகு இன்று சற்று அதிகரித்துள்ளது.
உலக அளவில் டாலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாணயங்களும் சரிவினைக் கண்டுள்ளன. ஈரான் ரியால் மதிப்பு ஒரு டாலருக்கு நிகராக 1 லட்சத்து 20 ஆயிரம் என்ற அளவில் சரிவடைந்தது. இதுபோலவே துருக்கி நாணயமான லிரா உள்ளிட்டவையும் சரிவடைந்து வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பும் இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டது.
No comments:
Post a Comment