ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணை வாங்கினால் இந்தியா மீது கடும் பொருளாதார தடை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை
ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணை வாங்கினால், இந்தியா மீது கடும் பொருளாதார தடை விதிக்க சாத்தியம் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
உக்ரைனில் தலையிட்டது, அமெரிக்க அரசியலில் தலை யிட்டது உட்பட பல பிரச்சினை களைச் சுட்டிக்காட்டி ரஷ்யா மீது அமெரிக்கா ஏற்கெனவே பொருளா தார தடை விதித்துள்ளது. அதன் பின், ரஷ்யாவிடம் இருந்து பாது காப்பு தளவாடங்கள், ஆயுதங்கள் கொள்முதல் செய்யும் நாடுகள், தனி நிறுவனங்கள் மீதும் பொரு ளாதார தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது.
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இந்திய மாணவர்கள் இணைந்து ஆய்வு: புதிய திட்டத்தை தொடங்கியது மத்திய அரசு
வெளிநாட்டு பல்கலைக்கழகங் களுடன் இந்திய மாணவர்கள் இணைந்து ஆய்வுகள் மேற் கொள்ளும் புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
வெளிநாடுகளுடன் இணைந்து கல்விக்கான ஆய்வு நடத்தும் திட்டம் தற்போது இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பாடப் பிரிவுகளில் மட்டுமே உள்ளது. இதனை மற்ற பாடப் பிரிவு களுக்கு விரிவுபடுத்தும் வகையில் ‘கல்விக்கான வளர்ச்சி மற்றும் ஒன்றிணைந்த ஆய்வு (ஸ்பார்க்)’ எனும் பெயரில் ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் இந்த ‘ஸ்பார்க்’ திட்டத்துக்கு கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக எதிர்வரும் இரண்டு கல்வி ஆண்டுகளுக்காக ரூ.418 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சீன ஓபன் பாட்மிண்டன்: கால் இறுதி சுற்றில் சிந்து, ஸ்ரீகாந்த் தோல்வி
சீன ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, கிடாம்பி காந்த் ஆகியோர் கால் இறுதியில் தோல்வியடைந்தனர்.
சீனாவின் சாங்ஸோ நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 7-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி காந்த், 3-ம் நிலை வீரரும் உலக சாம்பியனுமான ஜப்பானின் கென்டோ மோமோடாவை எதிர்த்து விளையாடினார்.
ஜிஎஸ்டி வரி விதிமுறைகளை மீறியதால் யெஸ் வங்கிக்கு ரூ. 38 கோடி அபராதம்
உள்நாட்டு ரெமிடன்ஸில் விதி களை பின்பற்றாததற்காக யெஸ் வங்கிக்கு ரூ. 38 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்ட பிறகு வங்கிப் பரிவர்த்தனைகளுக் கான வரி பிடித்தம் செய்வதில் விதிகளை மீறியதற்காக இந்த அபராதத் தொகை விதிக்கப்படுவ தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment