Monday, 24 September 2018

24th செப்டம்பர் முக்கிய நிகழ்வுகள்

அமெரிக்காவில் குடும்பத்துடன் தங்கியுள்ள இந்திய ஐடி ஊழியர்களுக்கு நெருக்கடி: எச் 4 விசாவில் மாற்றம்
இந்தியா ஐடி ஊழியர்கள் உட்பட அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினர் மனைவி மற்றும் குழந்தைகள் அங்கு தங்கி இருக்க வழங்கப்படும் எச் 4 விசா விதிமுறைகள் 3 மாதங்களில் மாற்றப்படும் என அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

4,000 இணையதளங்களை நீக்கிய சீனா
சமூக வலைதளங்களில் கடுமையான விதிமுறைகளை சீனா பின்பிற்றி வருகிறது அதன்படி கடந்த 3 மாதங்களில் 4,000 இணையதளங்களை நீக்கியுள்ளது.
இதுகுறித்து சினுவா என்ற சீன அரசு ஊடகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தியில், "கடந்த மூன்று மாதங்களில் தவறான கருத்துகளைப் பரப்பக்கூடிய இணையதளங்கள், சூதாட்டம், மதம், ஆபாசத் திரைப்படங்கள் என சுமார் 4,000 இணையதளங்களை சீனா நீக்கியுள்ளது. கடந்த மே மாதம் தொடங்கப்பட்ட இப்பணியில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமான கருத்துகள் நீக்கப்பட்டுள்ளன” தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரபேல் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய மாட்டோம்: அமைச்சர் அருண் ஜேட்லி திட்டவட்டம்
பிரான்ஸ் நாட்டின் ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று கூறியதாவது:
ராகுல் காந்தி பழிவாங்கும் எண்ணத்தில் செயல்படுகிறார். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் அவர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்துமே புனையப்பட்டவை. கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதியே ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், பாரிஸில் சில குண்டுகள் வெடிக்கப் போகின் றன. சற்று பொறுத்திருங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

ஷோயிப் மாலிக் 78 ரன்கள் விளாசல்: பாகிஸ்தான் அணி 237 ரன்கள் சேர்ப்பு
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது.

பொதுத்துறை வங்கிகளைத் தொடர்ந்து கிராம வங்கிகளை இணைக்க திட்டம் 
பொதுத்துறை வங்கிகளை இணைப்பது போல, கிராம வங்கி களையும் இணைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி பல்வேறு மாநிலங்களில் உள்ள 56 கிராம வங்கிகளை இணைத்து 36 வங்கிகளாக்க முடிவு செய் துள்ளது.


No comments:

Post a Comment