Tuesday, 25 September 2018

25th செப்டம்பர் முக்கிய நிகழ்வுகள்

ஈரான் விவகாரம்: ட்ரம்பின் முடிவை மீறும் ஐந்து நாடுகள்
ஈரான் மீது அமெரிக்கா விதித்து வரும் தொடர் பொருளாதாரத் தடைகளை மீறி அந்நாட்டுடன் கச்சா எண்ணெய் உள்ளிட்ட வர்த்தகத்தில் ஈடுபட ஐந்து நாடுகள் முடிவு செய்துள்ளன. 

இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர் சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபையில் திங்கட்கிழமை நடைபெற்றது.

எதிரி ஏவுகணையை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
எதிரியின் ஏவுகணையை இடை மறித்து அழிக்கும் பிடிவி ஏவு கணையை இந்தியா வெற்றி கரமாக பரிசோதித்துள்ளது.
ஒடிசாவின் பாலோசோர் அருகே அப்துல் கலாம் தீவில் உள்ள (வீலர் தீவு) ஒருங்கிணைந்த சோதனை மையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு 8.05 மணிக்கு இந்த ஏவுகணை ஏவப்பட்டது. இந்நிலையில் இலக்கை துல்லியமாகத் தாக்கி அழித்தது.

பிபா 2018-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக ‘குரோஷியாவின் லூகா மாட்ரிச்’ தேர்வு
2018-ம் ஆண்டுக்கான பிபாவிந் சிறந்த கால்பந்து வீரராக குரோஷியாவின் லூகா மாட்ரித் சேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. பிரேசில் வீராங்கனை மார்டா 6-வது முறையாகச் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் உலகக் கால்பந்து சம்மேளனம் சர்வதேச அளவில் சிறந்த கால்பந்து வீரர்களைத் தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சிறந்த வீரர்களுக்கான தேர்வில் குரோஷிய வீரர் லூகா மாட்ரிச், போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயனோனல் மெஸ்ஸி, முகமது சலா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

இந்தியாவுக்கான புகார்களை விசாரிக்க குறைதீர்க்கும் அதிகாரியை நியமித்தது வாட்ஸ் அப்
வாட்ஸ் அப் நிறுவனம் இந்தியாவில் குறை தீர்க்கும் அதிகாரியை நிய மித்துள்ளது. வாட்ஸ் அப் செயலி மூலம் பரவும் வதந்திகளை தடுப் பதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு அந்த நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக் கொண் டிருந்தது.
இது தொடர்பாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண வும், போலி செய்திகளை கட்டுப் படுத்தவும் இந்தியாவுக்கான குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்க வும் கேட்டுக் கொண்டது. இதனை ஏற்றுகொண்ட வாட்ஸ் அப் நிறு வனம் தற்போது இந்தியாவுக்கான அதிகாரியாக கோமல் லகிரி என்பவரை நியமித்துள்ளது.

No comments:

Post a Comment