Thursday, 27 September 2018

27th செப்டம்பர் முக்கிய நிகழ்வுகள்

பிரதமர் மோடிக்கு ஐ.நா.வின் உயரிய சுற்றுச்சூழல் விருது
பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க முயற்சி எடுத்தல், சூரிய ஒளிமின்சாரத்தை பயன்படுத்த ஊக்கப்படுத்துதல், ஆகியவற்றுக்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஐக்கிய நாடுகள் சபை மிக உயரிய விருதான சுற்றுச்சூழல் விருது(சாம்பியன்ஸ் ஆப் எர்த்) வழங்கிக் கவுரவித்துள்ளது.

மேலும், சூரியசக்தியால் இயங்கும் உலகின் முதல் விமான நிலையம், கேரள மாநிலம், கொச்சியில் உள்ள சர்வதேச விமானநிலையமாகும். இந்த விமான நிலையத்துக்கும் சிறந்த தொழில்முனைவோர் விருது வழங்கப்பட்டுள்ளது.

சிபிஎம் இளைஞர் பிரிவின் மேற்கு வங்க மாநாட்டை நாளை தொடங்குகிறார் பிரகாஷ் ராஜ்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவாக இருப்பது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எப்ஐ). மேற்கு வங்கத்தின் ஹுக்ளி மாவட்டம் தன்குனியில் அதன் மாநில மாநாடு நாளை (வெள்ளிக் கிழமை) நடைபெற உள்ளது. பெரும்பாலும் சிபிஎம் கட்சி நிர்வாகிகள் அல்லது டிஒய்எப்ஐ யின் முன்னாள் தலைவர்கள் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் இந்தமுறை பிரகாஷ்ராஜ் அழைக் கப்பட்டிருக்கிறார். இதன்மூலம், பிரகாஷ்ராஜ் அரசியலுக்கு வருவாரா எனும் கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

இந்தியா ராணுவத்துடன் ஐசிஐசிஐ வங்கி ஒப்பந்தம்
தனியார் வங்கிகளில் முதன்மை யானதாக திகழும் ஐசிஐசிஐ வங்கி இந்திய ராணுவத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்ஓயு) செய்துள்ளது.
ராணுவத்தில் பணி புரியும் அனை வருக்கும், ஓய்வூதியதாரர்களுக் கும் வங்கிச் சேவையை ஐசிஐசிஐ வங்கி அளிக்கும். ஐசிஐசிஐ வங்கியில் ராணுவ சம்பள கணக்கு என தனி கணக்கு செயல்படுத்தப்படும்.
இவர்களுக்கு ரூ. 1 கோடி வரை காப்பீடு வசதி (விமான விபத்துக்கு), ரூ. 30லட்சம் வரை விபத்து காப்பீடு வசதி அளிக்கப் படும். இது ராணுவத்தினர் அனைவருக்கும் பொருந்தும்.

சக வீரரான காஷ்யப்பை மணமுடிக்கிறார் சாய்னா: டிசம்பர் 16-ல் திருமணம்
இந்திய பாட்மிண்டன் நட்சத்திர வீராங்கனையான சாய்னா நெவால், சகவீரரான பாருபள்ளி காஷ்யப்பை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

10 வருடங்களாக பழகி வந்த இவர்கள் தற்போது திருமண பந்தத்தின் வாயிலாக இந்த ஆண்டு இறுதியில் இணைய உள்ளனர். ஹைதராபாத்தை சேர்ந்த சாய்னா நெவால், பாருபள்ளி காஷ்யப் திருமணம் வரும் டிசம்பர் மாதம் 16-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இரு வீட்டினரின் சம்மதத்துடன் நடைபெறும் இந்த திருமணத் துக்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர் கள் என சுமார் 100 பேரை மட்டுமே அழைக்க முடிவு செய் துள்ளனர். இதைத் தொடர்ந்து டிசம்பர் 21-ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சியை பெரிய அளவில் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment