இந்தோனேசியாவை உலுக்கிய சுனாமி: 400 பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் தவிப்பு: அதிர வைக்கும் வீடியோ
இந்தோனேசியாவில் சுற்றுலா ஸ்தலமான சுலவேசி தீவில் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியதில் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சுனாமி தாக்கிய அதிர வைக்கும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தோனேசியாவின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் டோங்காலா நகரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் 6.1 ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் பதிவானது. இதைத் தொடர்ந்து. மத்திய பகுதியில் பாலு நகரில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இருநகரங்களிலும் சுமார் 6 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர்.
ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் கொல்கத்தா - கேரளா மோதல்
இந்தியன் சூப்பர் லீக் (ஐஸ்எல்) கால்பந்து தொடரின் 5-வது சீசன் போட்டிகள் இன்று கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யுவபாரதி மைதானத்தில் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி, இருமுறை 2-வது இடம் பிடித்த - கேரளா அணியுடன் மோதுகிறது.
இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்சி, இரு முறை சாம்பியனான கொல்கத்தா, கேரளா, கோவா, டெல்லி, பெங்களூரு, நார்த் ஈஸ்ட் யுனைட்டெடு, மும்பை, புனே, ஜாம்ஷெட்பூர் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன. கொல்கத்தாவில் இன்று தொடங்கும் இந்த உள்ளூர் கால்பந்து திருவிழா சுமார் 6 மாத காலங்கள் நடைபெற உள்ளது.
பிஎன்பி வங்கி மோசடியில் தலைமறைவான மெகுல் சோக்ஸியை ஒப்படைக்க ஆண்டிகுவா அரசு சம்மதம்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து ரூ. 13 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவ ரான மெகுல் சோக்ஸியை இந்தியா விடம் ஒப்படைக்க எல்லா விதத்தி லும் உதவுவதாக ஆண்டிகுவா அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியிடமிருந்து ரூ. 13 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய் தார். இதுதொடர்பாக சிபிஐ, அம லாக்கப் பிரிவு நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்ஸி, மற்றும் குடும்பத்தார், நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வங்கி மோசடி நாடுமுழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பிஎன்பி வங்கியின் பங்கு விலை பெருமளவு சரிந்தது.

No comments:
Post a Comment