Wednesday, 5 September 2018

5th செப்டம்பர் முக்கிய நிகழ்வுகள்

உலகம்

பாக். புதிய அதிபராக ஆரிப் தேர்வு 

பாகிஸ்தானில் அதிபர் மம்னூன் ஹுசைனின் பதவிக் காலம் முடிவுக்கு வருவதையொட்டி புதிய அதிபருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஆளும் பிடிஐ (பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்) கட்சி சார்பில் போட்டியிட்ட ஆரிப் ரஹ்மான் ஆல்வி வெற்றி பெற்றார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளிட உள்ளது.

ஆரிப் ஆல்வி தனது வெற்றி உரையில், “மிகப் பெரிய பொறுப்புக்கு என்னை நியமித்த பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி. அவரது 5 ஆண்டு கால ஆட்சியில் ஏழைகளின் அடிப்படை தேவைகள் நிறைவு செய்யப்படும் என நம்புகிறேன். ஆளும் கட்சிக்கு மட்டுமின்றி அனைத்து கட்சிகளுக்கும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் அதிபராக செயல்படுவேன்” என்றார்.

இந்தியா


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தனியார் ஊழியர்கள் பரிசோதிக்கக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
தேர்தலுக்கு முன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தனியார் ஊழியர்கள் பரிசோதிப் பற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பத்திரிகை யாளர் ஆசிஷ் கோயல் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், “தேர்தலுக்கு முன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பரிசோதிக்க தனியார் ஊழியர்கள் அனுமதிக்கப் படுகின்றனர். 
இவர்களில் பலர் அரசியல் கட்சிகளில் தீவிரமாக செயல்பட்டு வருபவர்களாக உள்ளனர். இவர்களின் பின்னணி, நம்பகத்தன்மை மற்றும் வாக்குப் பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து ஆராயப்படுவதில்லை. எனவே இந்த விவகாரத்தில் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அரசு ஊழியர்களை மட்டுமே வாக்குப் பதிவு இயந்திரங்களை பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

விளையாட்டு


உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றார் இந்தியாவின் மிதர்வால்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் ஓம் பிரகாஷ் மிதர்வால் தங்கப் பதக்கம் வென் றார்.
தென் கொரியாவின் சாங்வான் நகரில் உலகக் கோப்பை துப் பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஓம் பிரகாஷ் மிதர்வால் 564 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். 
23 வயதான மிதர்வால் உலகக் கோப்பை தொடரில் தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும். செர்பியாவின் தமிர் மைக் 562 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், தென் கொரியாவின் டாம்யுங் லீ 560 புள்ளிகளுடன் வெண்கலப் பதக் கமும் கைப்பற்றினர். இந்தியாவின் மற்றொரு முன்னணி வீரரான ஜித்து ராய் 552 புள்ளிகளுடன் 17-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

வணிகம்


பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் உற்பத்தி வரியைக் குறைக்க மாட்டோம்: மத்திய நிதி அமைச்சகம் திட்டவட்டம்
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் உற்பத்தி வரியைக் குறைக்கப் போவதில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித் துள்ளது. உற்பத்தி வரி குறைப்பால் வரி வருவாய் குறையும் என்றும் மத்திய அரசின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்து வரும் நிலையில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மத்திய அரசு கூடுதலாக செலவிட வேண்டியுள்ளது. அத்துடன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை யும் குறைந்து வருகிறது. உள்நாட்டில் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக உற்பத்தி வரியைக் குறைப்பது என்ற வழியை அரசு பின்பற்றாது என்றும் அவர் கூறினார்.
டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு செவ்வாய்க்கிழமை 71.54 என்ற அளவுக்கு சரிந்தது. இதனால் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ளது.
டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 79.31 என்ற விலையிலும் டீசல் ஒரு லிட்டர் ரூ. 71.34 என்ற விலையிலும் விற்பனையானது. இந்த விலையில் பாதி அளவு மாநில வரி மற்றும் மத் திய அரசின் உற்பத்தி வரியும் அடங் கும். இதனால் உற்பத்தி வரியைக் குறைக்கலாம் என்ற பரிந்துரை பரவலாக வலியுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment