Monday, 1 October 2018

01st அக்டோபர் முக்கிய நிகழ்வுகள்

தெற்காசியாவில் மிகப்பெரிய அச்சுறுத்தல் தீவிரவாதம்: சார்க் கூட்டத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா புகார்
தெற்காசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஒரே மிகப்பெரிய அச்சுறுத்தலாக தீவிரவாதம் உள்ளது என்று சார்க் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.

ஐ.நா. பொதுச்சபையின் 73-வது கூட்டம் நியூயார்க்கில் உள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி சார்க் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மகமுது குரேஷி மற்றும் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இலங்கை மாலத்தீவு ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றனர்.

வங்கித்துறைக்கு புதிய நெருக்கடி: ஐஎல் அண்ட் எஃப் எஸ்

இந்திய உள்கட்டமைப்புத் துறையின் ஆதாரமாகக் கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வரும் நிறுவனம் ஐஎல் அண்ட் எஃப்எஸ் இப்போது திவாலாகும் நிலைக்குச் சென்றுள்ளது. இதனால் வங்கித்துறையின் அடுத்த தலைவலியாக மாறியுள்ளது.
ஐஎல் அண்ட் எஃப்எஸ் இந்தியாவில் 121, வெளிநாடுகளில் 52 துணை நிறுவனங்களை வைத்துள்ளது. இது தவிர 12 இந்திய, மூன்று வெளிநாட்டு நிறுவனங்கள் அசோசியேட் நிறுவனங்களாக உள்ளன. இதுதவிர 36 இந்திய, 6 வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு தொழிலிலும் ஈடுபட்டுள்ளது.

ஐசிசி தரவரிசை: விராட் கோலியை நெருங்கும் ரோஹித் சர்மா; ஷிகர் தவண், குல்தீப் யாதவ் ஏற்றம்

ஐசிசி தரவரிசையில் ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா, ஷிகர் தவண், குல்தீப் யாதவ் அபார முன்னேற்றம் கண்டுள்ளனர்.
ஆல்ரவுண்டருக்கான தரவரிசைப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித்கான் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

No comments:

Post a Comment