Tuesday, 2 October 2018

02nd அக்டோபர் முக்கிய நிகழ்வுகள்

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்: சும்பா தீவில் அச்சத்துடன் மக்கள் தவிப்பு
இந்தோனேசியாவில் சுலாவேசி தீவில் கடந்த வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று காலையில், சும்பா தீவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 6.0 ஆகப் பதிவானது என்று அமெரிக்க புவியில் மையம் தெரிவித்துள்ளது.

தேசிய கடற்கரை வாலிபால்: தமிழ்நாடு பெண்கள் அணி சாம்பியன்
நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கடற்கரை வாலிபால் போட்டியின் பெண்கள் பிரிவில், தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றது.
தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கான 64-வதுகடற்கரை வாலிபால் போட்டிகள் நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் கடந்த மாதம் 27-ம்தேதி தொடங்கின. இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் 14, 17, 19 வயதுக்குட்பட்ட 3 பிரிவுகளின் கீழ் நடைபெற்றது.

ஆதார் இணைப்புக்குப் பதிலாக மாற்று திட்டம்: 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க டெலிகாம் நிறுவனங்களுக்கு யுஐடிஏஐ உத்தரவு

மொபைல் எண்களுக்கு ஆதார்எண் சரிபார்த்தலை நிறுத்துவதற்கான மாற்று திட்டத்தை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று டெலிகாம் நிறுவனங்களுக்கு யுஐடிஏஐ அமைப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆதார் பயன்பாடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பைக் கடந்த வாரம் அறிவித்தது. அந்தத் தீர்ப்பில் ஆதார் சட்டம் பிரிவு 57ல் திருத்தம் செய்துள்ளது.

No comments:

Post a Comment