இராக் அதிபராக பார்ஹம் சாலிஹ் தேர்வு
இராக்கின் புதிய அதிபராக அந்நாட்டின் மூத்த அரசியல்வாதியான பார்ஹம் சாலிஹ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூத்த மிதவாத அரசியல்வாதியாக அறியப்பட்ட சாலிஹ் , அந்நாட்டின் இரண்டு முக்கிய குர்து கட்சிகளிடையே நடந்த வாக்கெடுப்புகளின் இறுதியில் அதிபர் வேட்பாளராக வெற்றி பெற்றிருக்கிறார்.
2018-ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு: லேசர் பிசிக்ஸ் பிரிவில் புதுமை செய்த அமெரிக்கா, பிரான்ஸ், கனடா விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு
ஸ்வீடனில் உள்ள நோபல் பரிசுக்குழுவினர் 2018-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை அமெரிக்கா, பிரான்ஸ், கனடா விஞ்ஞானிகளுக்கு அறிவித்துள்ளனர்.
இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கிக் கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், 2018-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது.
2018 மருத்துவத்துக்கான நோபல்: புற்றுநோய் சிகிச்சையில் புதிய பாதையைத் திறந்த ஜேம்ஸ் பி.அலிசன், டசூகு ஹோஞ்சோ ஆகியோர் வென்றனர்
மருத்துவத்துக்கான நோபல் பரிசு புற்றுநோய் சிகிச்சையில் ‘இம்யூன் செக் பாயிண்ட் தெரபி’ (நோய் எதிர்ப்புச் சக்தி தடை உடைப்பு சிகிச்சை) என்ற பாதைத்திறப்புக் கண்டுபிடிப்பைச் செய்ததற்காக அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி ஜேம்ஸ் பி.அல்லிசன், மற்றும் ஜப்பானின் டசூகு ஹோஞ்சோ ஆகியோருக்கு 2018-ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இயற்பியலுக்கான நோபல் பரிசை ஸ்வீடன் நோபல்பரிசுக் குழுவினர் இன்று அறிவித்தனர். லேசர் பிசிக்ஸ் பிரிவில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளைச் செய்த அமெரிக்க இயற்பியலாளர் ஆர்தர் ஆஷ்கின், பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி ஜெரார்டு மோரோ, கனாடா நாட்டின் பெண் விஞ்ஞானி டோனா ஸ்டிரிக்லான்ட் ஆகியோருக்குக் கூட்டாக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்றார் ரஞ்சன் கோகோய்
ரஞ்சன் கோகோய் உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக இன்று (புதன்கிழமை) பதவியேற்றார். புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கோகோய்க்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வரும் முதல் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான கோகோய், நவம்பர் 17, 2019 வரை பதவியில் இருப்பார்.
தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவர இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு பிசிசிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), ஒரு அரசு சாரா ஒரு தனியார் அமைப்பு என்று கூறிக்கொண்டு வருகிறது. மேலும் உலகிலேயே அதிக வலிமை வாய்ந்த விளையாட்டு அமைப்பாகவும், கோடிக்கணக் கான சொத்துகளை கொண்ட அமைப்பாகவும் உள்ளது.இருந்த போதும், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மூவர்ண நிறம் தாங்கிய தேசிய சீருடையை அணிந்து, அசோகா சக்கரம் பொறிக்கப்பட்ட ஹெல்மெட்டுடன் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டி களிலும் பங்கேற்று வருகிறார்கள்.
ஐஎம்எப் தலைமை பொருளாதார ஆலோசகராக இந்திய வம்சாவளி கீதா கோபிநாத் நியமனம்
சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எப்) தலைமைப் பொருளாதார ஆலோசகராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐஎம்எப் அமைப்பின் தலைமை பொருளாதார ஆலோசகராக, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுக்கு பின்னர் நியமிக்கப்படும் 2-வது இந்தியர் கீதா கோபிநாத் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜன் இந்த பொறுப்பில் 2003-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை இருந்தார். பின்னர் நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும் பணியாற்றினார்
No comments:
Post a Comment