Tuesday, 9 October 2018

10th அக்டோபர் முக்கிய நிகழ்வுகள்

இந்தியாவுக்கான ஒரு நாள் பிரிட்டிஷ் தூதர்

போட்டியில் வெற்றிபெற்றால் இந்தியாவுக்கான ஒரு நாள் பிரிட்டிஷ் தூதராக நாற்காலியில் அமரலாம்கேட்பதற்கு வியப்பாக இருக்கிறது இல்லையாஆனால்நொய்டாவைச் சேர்ந்த கல்லூரி மாணவி சாதித்துக்காட்டியிருக்கிறார்

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும்விதமாக ஒரு காணொலிப் போட்டியை நடத்தியது பிரிட்டன் தூதரகம். ‘பாலின சமத்துவம்’ எனும் தலைப்பில் நடந்தப்பட்ட இந்தப் போட்டியில் இந்தியா முழுவதிலுமிருந்து 58 பேர் கலந்துகொண்டனர்போட்டியில் வென்றிருக்கும் ஈஷா பஹல்இந்தியாவுக்கான ஒரு நாள் பிரிட்டிஷ் தூதராகப் பதவியேற்றிருக்கிறார்.

போப் பிரான்சிஸுக்கு அழைப்பு விடுத்த கிம்
போப் ஆண்டவர் பிரான்சிஸுக்கு வடகொரிய அதிபர் கிம் அழைப்பு விடுத்துள்ளதாக தென்கொரியா கூறியுள்ளது.
தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் அடுத்த ஐரோப்பியா செல்ல இருக்கிறார்இந்தப் பயணத்தில்வாடிகன் செல்லும் முன் அங்கு போப் பிரான்சிஸைக் காண இருப்பதாக தென்கொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் போப் ஆண்டவர் பிரான்ஸிசை வடகொரியா வரும்படி அழைப்பு விடுத்து அழைப்புக் கடிதம் ஒன்றை எழுதி அந்நாட்டின் சார்பில் கிம் தென்கொரியாவிடம் வழங்கியுள்ளார்.

ஆசிய விளையாட்டுஇந்திய வீராங்கனை அசத்தல்
மூன்றாவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனை ஏக்தா பியான் தங்கம் வென்று அசத்தல் சாதனை புரிந்துள்ளார்.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றனஇதில் நேற்று நடைபெற்ற கிளப் த்ரோ போட்டியின் எப்32/51 பிரிவில் இந்திய வீராங்கனை ஏக்தா 16.02 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

ஹெச்.சி.எல்ஐடி நிறுவனம் ஆந்திராவில் ரூ.750 கோடி முதலீடு: 7500 வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டம்
ஐடி துறையில் கோலோச்சும் ஹெச்.சி.எல்நிறுவனம் ஆந்திர மாநிலத்தில் ரூ.750 கோடி முதலீட்டில் இரண்டு அலுவலாகங்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் 10 ஆண்டுகளில் 7500 வேலைவாய்புகளை உருவாக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதுஇதனை கட்டமாக நிறைவேற்றவுள்ளது.

No comments:

Post a Comment