Thursday, 11 October 2018

11th அக்டோபர் முக்கிய நிகழ்வுகள்

பப்பூவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பப்பூவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வலர்கள், "பசுபிக் தீவு நாடான பப்பூவா கீனியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலி 7. 0 ஆக பதிவாகியது. இதனைத் தொடர்ந்து லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கம் குறிப்பாக ரபால் நகரத்தில் உணரப்பட்டது” என்று கூறியுள்ளன

வளரும் நாடுகளின் பொருளாதாரம்; இந்தியாவின் கடன் சுமை குறைவாக உள்ளது: சர்வதேச செலாவணி நிதியம் கணிப்பு
சர்வதேச அளவில் வளரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவின் கடன் சுமை மிகவும் குறை வாக உள்ளது என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) குறிப்பிட்டுள்ளது. இருந்தபோதி லும் சர்வதேச அளவிலான கடன் சுமை மிகவும் அதிகரித்து, அபாய அளவைத் தொட்டு விட்டதாக ஐஎம்எப் நிதி விவகாரத்துறை இயக் குநர் விடோர் கஸ்பர் எச்சரித்துள் ளார். 2017-ம் ஆண்டில் உலகின் கடன் சுமை 182 டிரில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

இதில் இந்தியாவின் கடன் சுமை யானது அந்நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி திறனுடன் (ஜிடிபி) ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது.

அமெரிக்கவாழ் இந்தியர்களின் பெற்றோருக்கு கிரீன் கார்டு பெறுவதில் சிக்கல்
உயர் திறமையான வெளிநாட்டு பணியாளர்களுக்கு அமெரிக்க அரசு எச்1பி விசாவினை வழங்கு கிறது. இந்த விசாவை பெற்ற வெளிநாட்டினர், 6 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கியிருந்து பணி யாற்ற முடியும். பெரும்பாலும் எச்1பி விசா முடிந்த பிறகு அமெரிக் காவின் நிரந்தர குடியுரிமை (கிரீன் கார்டு) கோரி வெளிநாட்டினர் விண்ணப்பிக்கின்றனர். கிரீன் கார்டு வரும் வரை ஆண்டுதோறும் எச்1பி விசாவை புதுப்பிக்கவும் வசதி உள்ளது.
இந்நிலையில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அரசு, கிரீன் கார்டு நடைமுறைகளைக் கடுமை யாக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான புதிய விதிகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இது விரைவில் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.




No comments:

Post a Comment