நடுவானில் கோளாறான ரஷ்ய ராக்கெட்: தப்பித்த விண்வெளி வீரர்கள்
ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட் நடுவானில் சென்று கொண்டிருக்கும்போது நடுவானில் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அதில் பயணம் செய்த விண்வெளி வீரர்கள் அவசரமாகத் தரையிறங்கினர்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில். "கசகஸ்தான் நாட்டிலிருந்து ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட் விண்வெளி வீரர்களுடன் இன்று (வியாழக்கிழமை) புறப்பட்டப்போது நடுவானில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த அந்த ராக்கெட்டில் பயணம் செய்த விண்வெளி வீரர்களான நிக் மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் ஆகியோர் சுமார் 2.30 மணியளவில் தரையிறங்கினர். இதனைத் தொடர்ந்து ராக்கெட்டை ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரா ஆசிய விளையாட்டு போட்டி: உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார் சரத் குமார்; மாரியப்பனுக்கு வெண்கலப் பதக்கம்
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் பாரா ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் சரத் குமார் தங்கப் பதக்கம் வென்றார். 26 வயதான சரத் குமார் 1.90 மீட்டர் உயரம் தாண்டி முதலிடம் பிடித்தார். வெள்ளி, வெண்கலப் பதக்கத் தையும் இந்திய வீரர்களே கைப் பற்றினர். ரியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் 1.67 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும், வருண் பாத்தி 1.82 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
சென்செக்ஸ் 34,000 புள்ளிகளுக்கு சரிந்தது: முதலீட்டாளர்களுக்கு ரூ.4 லட்சம் கோடி இழப்பு
இந்திய பங்குச் சந்தைகள் கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளன. மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையின் சரிவு நேற்று ஒரு நாளில் 2 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது. நேற்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்களுக்கு ரூ.4 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
நேற்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் அதிகபட்சமாக 1037 புள்ளிகள் வரை இறக்கம் கண்டது. வர்த்தக முடிவில் 759 புள்ளிகள் சரிந்து 34,001 புள்ளிகளில் நிலை கொண்டது.
No comments:
Post a Comment