மீண்டும் மீண்டும் தாக்கிய புற்றுநோய்: மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்
மைக்ரோசாஃப்டின் இணை நிறுவனரும் சிறந்த கொடை வள்ளலுமான பால் ஆலன் புற்றுநோயால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 65.
தன்னுடைய ஆட்டநாயகன் விருதை முதல் சதம் அடித்த விராட் கோலிக்கு வழங்கி கவுதம் கம்பீர் பெருந்தன்மை
கடந்த 2009-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியின் போது, தனக்கு வழங்கப்பட்ட ஆட்ட நாயகன் விருதை முதல்சதம் அடித்த விராட் கோலிக்கு வழங்கி கவுதம் கம்பீர் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
இந்த நிகழ்வு பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், ஐசிசி பட்டியலில் கூட அந்தப் போட்டியில் ஆட்ட நாயகனாக கம்பீர் பெயர் இருந்தாலும், பரிசளிப்பின் போது இதை கோலிக்கு வழங்க கம்பீர் கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். கவுதம் கம்பீருக்கு நேற்று 37-வது பிறந்தநாளாகும் இதையொட்டி இந்த நிகழ்வு மீள்பதிவாக இடப்படுகிறது.
ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக இயக்குநராக சந்தீப் பக்ஷி: நியமனத்துக்கு ஒப்புதல் அளித்தது ஆர்பிஐ
ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓவாக சந்தீப் பக்ஷி நியமிக்கப்பட்டதற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓவாக இருந்த சாந்தா கோச்சார் ராஜினாமா செய்ததை அடுத்து, அப்பதவியில் சந்தீப் பக்ஷி நியமிக்கப்பட்டார்.



No comments:
Post a Comment