Thursday, 25 October 2018

25th அக்டோபர் முக்கிய நிகழ்வுகள்

இஸ்ரேலிடம் இருந்து பராக் 8 ரக ஏவுகணைகளை வாங்குகிறது இந்தியா

எதிரிகளின் விமானத்தை இடைமறித்து தாக்கும் திறன் கொண்ட பராக் 8 ரக ஏவுகணைகளை இஸ்ரேலிடம் இருந்து வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவும் இஸ்ரேலும் ராணுவம், விவசாயம் உள்ளிட்டதுறைகளில் ஒத்துழைக்க ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ளன. அதன்படி, இந்திய கடற்படைக்கு இஸ்ரேல் நாட்டிடம் இருந்து சக்திவாய்ந்த பராக் 8 ரக ஏவுகணைகளை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இஸ்ரேல் அரசுக்கு சொந்தமான இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஐஏஐ) நிறுவனத்துடன் 77.7 கோடி டாலருக்கு இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

அனைத்துவித சர்வதேசப் போட்டிகளிலிருந்து பிராவோ ஓய்வு
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ அனைத்துவித சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஓய்வு குறித்து பிராவோ கூறும்போது, ” நான் இன்று கிரிக்கெட் உலகத்திற்கு அனைத்துவித சர்வதேசப் போட்டிகளிலிருந்தும ஓய்வு பெறுவதாக தெரிவித்துக் கொள்கிறேன். 15 வருடங்களுக்குப் பின்னரும் எனது முதல் அறிமுகப் போட்டியை என்னால் நினைவுகொள்ள முடிகிறது. 2004 -ல் இங்கிலாந்துஅணிக்கு எதிராக அறிமுகமான எனக்கு லாட்ஸ் மைதானத்துக்குள் இறங்குவதற்கு முன்னதாகவே அந்த மெருன் தொப்பி வழங்கப்பட்டது.

டாடா குழுமத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாளில் புதிய நிறுவனம் தொடங்கினார் சைரஸ் மிஸ்திரி
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரி புதிதாக ஒரு முதலீட்டு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.
மிஸ்திரி வென்சர்ஸ் எல்எல்பி என்ற இந்தப் புதிய நிறுவனம் ஸ்டார்ட் அப் தொழில்களுக்கான முதலீடுகளையும் ஆலோசனைகளையும் வழங்கும் என்று நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சைரஸ் மிஸ்திரியும் சகோதரர் ஷபூர் மிஸ்திரியும் இணைந்துபுதிதாக ஒரு தனியார் பங்கு முதலீட்டு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். டாடா குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டு சரியாக இரண்டு ஆண்டுகள் ஆனநிலையில், பதவியிலிருந்து நீக்கப்பட்ட அதேநாளில் இந்தப் புதிய நிறுவனத்தை சைரஸ் மிஸ்திரி தொடங்கியுள்ளார்.

No comments:

Post a Comment