ஜப்பான் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
ஜப்பானில் நடைபெறும் இரண்டு நாள் மாநாட்டில் கலந்து கொள் வதற்காக அந்நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்லவுள்ளார்.
இந்தியா - ஜப்பான் நாடு களுக்கு இடையேயான வருடாந்திர மாநாடு வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு: நீரவ் மோடியின் ரூ. 255 கோடி சொத்து முடக்கம்; அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடாக ரூ. 13 ஆயிரம் கோடியை ஏமாற்றிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்ட வைர வியாபாரி நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ. 255 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அமலாக்கத்துறை (இடி)இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அந்நியச் செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் (பிஎம்எல்ஏ) இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.நீரவ் மோடிக்கு சொந்தமாக துபாயில் உள்ள நிறுவனங்களில் இருந்து ஹாங்காங்கில் உள்ள நிறுவனத்துக்கு அனுப்பப்படவிருந்த 26 சரக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிதி மோசடி செய்த வழக்குதொடர்பாக இந்த பறிமுதல்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.இந்த சரக்குகள் அனைத்தும் ஹாங்காங்கில் உள்ள சரக்குகளைக் கையாளும் நிறுவனத்தின் பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்தன.
No comments:
Post a Comment