Thursday, 4 October 2018

4th அக்டோபர் முக்கிய நிகழ்வுகள்

இந்தோனேசியாவில் சுனாமி தாக்குதல்: உயிரிழப்பு 1,400 ஆக உயர்வு
இந்தோனேசியாவில் சுனாமி தாக்கியதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,400-ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சிலாவேசி தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை, சுனாமி தாக்கியது. இதனால் அந்த நகரம் ஏறக்குறைய அழிந்த நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.
ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓ சந்தா கோச்சார் திடீர் ராஜினாமா: புதிய மேலாண் இயக்குநர் நியமனம்
மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் மேலாண் இயக்குநர்(எம்.டி) மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி(சிஇஓ)பதவியில் இருந்து சந்தா கோச்சார் இன்று திடீரென ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, அவருக்குப் பதிலாக சந்தீப் பக் ஷி புதிய எம்டி மற்றும் சிஇஓ வாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2023, அக்டோபர் 3-ம் தேதிவரை 5ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ரூபாய் மதிப்பு மீண்டும் கடும் சரிவு: பங்குச்சந்தைகளில் பெரும் வீழ்ச்சி; முதலீட்டாளர்களுக்கு ரூ. 1.75 லட்சம் கோடி இழப்பு
கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியது போன்ற காரணங்களால் இந்திய ரூபாய் மதிப்பு 73.70 ரூபாயாக வீழ்ச்சியடைந்தது. பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருவதால் நேற்று ஒரே நாளில் 1.75 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியது. இதனால் கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த மாதம் ரூபாய் மதிப்பு மிக மோசமான சரிவைச் சந்தித்தது. ஒவ்வொரு நாளும், முந்தைய நாளை முந்திக் கொண்டு மீண்டும் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்தது.

No comments:

Post a Comment