Friday, 5 October 2018

5th அக்டோபர் முக்கிய நிகழ்வுகள்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் சுலாவேசி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், சும்பா தீவில் பயங்கர பூகம்பம், சுனாமியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று அதிகாலை ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜப்பானில் ஏற்பட்டுள்ள இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவானது என்று அமெரிக்க புவியில் மையம் தெரிவித்துள்ளது.

போர்ப்ஸின் இந்தியப் பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு: 11 ஆண்டுகளாக முதலிடத்தில் அம்பானி
போர்ப்ஸ் இதழின் இந்த ஆண்டுக் கான இந்தியப் பணக்காரர்கள் பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித் துள்ளார் முகேஷ் அம்பானி. இதன் மூலம் தொடர்ந்து 11-வது ஆண் டாக முதலிடத்தைத் தக்கவைத் துள்ளார்.
போர்ப்ஸ் இதழ் ஒவ்வோராண் டும் வெளியிடும் பணக்காரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இந்தியப் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தை முகேஷ் அம்பானி தக்கவைத்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் உரிமையாளரான இவருடைய தற்போதைய சொத்து மதிப்பு ரூ. 3.5 லட்சம் கோடியாக உள்ளது. தொடர்ச்சியாக 11 ஆண்டு களாக முதலிடத்தில் அசைக்க முடியாதவராக தொடர்கிறார். அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டு மட்டும் அவரது சொத்து மதிப்பு ரூ. 70 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது. இந்தவகையிலும் முதலிடத்தில் இவரே உள்ளார்.

லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டு: இந்திய நிறுவனங்களுக்கு உலக வங்கி 10 ஆண்டுகள் தடை

லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டு காரண மாக சர்வதேச அளவில் உலக வங்கி திட்டங்களை செயல்படுத்தி வந்த இந்திய நிறுவனங்களுக்கு உலக வங்கி தடை விதித்துள்ளது.
உலக வங்கி நிதியில் பல்வேறு நாடுகளில் பல மக்கள் நலமேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் வங்கதேசத்தில் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வந்த ஆலிவ் ஹெல்த் கேர் நிறு வனம் மற்றும் ஜேய் மோடி ஆகிய நிறுவனங்களுக்கு தடை விதிப்ப தாக உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

No comments:

Post a Comment