இண்டர்போல் தலைவரை ரகசியமாக சிறைபிடித்த சீனா
இண்டர்போல் தலைவர் மெங் ஹாங்வே காணாமல் போனதாக தகவல் வெளியான நிலையில் அவரை சீன அரசு தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச அளவில் நடைபெறும் குற்றங்களை விசாரிக்க ‘இண்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பு செயல்படுகிறது. இதன் தலைமையிடம் பிரான்ஸ் நாட்டின் லயோன் நகரில் உள்ளது. இதன் தலைவராக மெங் ஹாங்வே பதவி வகித்து வருகிறார்.
பரிதாபம்: 6 விக். இழப்பு, 555 ரன்கள் பின்னிலை: மிகப்பெரிய தோல்வியை நோக்கி மே.இ.தீவுகள்
40 டிகிரி வெயிலில் சுமார் 150 ஓவர்கள் களத்தில் காய்ந்து விட்டு பேட் செய்ய வந்த மே.இ.தீவுகள் அணி துல்லியத் தாக்குதல் பந்து வீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் 6 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
களத்தில் ஓரளவுக்கு டெய்ல் எண்டர்களுடன் நிலைத்து ஆடும் ராஸ்டன் சேஸ் 27 ரன்களுடனும் கீமோ பால் 13 ரன்களுடனும் உள்ளனர். தொடக்க வீரர்களை ஷமி காலி செய்ய பிறகு அஸ்வின், ஜடேஜா, குல்தீப் தலா 1 விக்கெட்டைப் பகிர்ந்து கொண்டனர்.
ஆர்பிஐ வட்டிவிகித முடிவால் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 792 புள்ளிகள் சரிவு
வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வெளியானதால், பங் குச் சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்தன. மும்பை பங்குச் சந்தை யின் குறியீடான சென்செக்ஸ் 792 புள்ளிகள் சரிந்து 34376 புள்ளிக ளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை யின் நிப்டி குறியீடு 282 புள்ளிகள் சரிந்து 10316 புள்ளிகளில் உள்ளது.
பங்குச் சந்தையின் சரிவு, தொடர்ந்து மூன்றாவது நாளாக நீடித்து வருகிறது. நேற்றைய வர்த்தகத்தில் எண்ணெய் நிறுவன பங்குகள் கடும் இழப்பை கண்டன. குறிப்பாக எரிபொருள் விலை லிட் டருக்கு ஒரு ரூபாய் குறைக்க வேண் டும் என எண்ணெய் நிறுவனங் களை மத்திய அரசு கேட்டுக் கொண் டுள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்களின் லாபம் குறையும் என்பதால் முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்தனர்.
No comments:
Post a Comment