Monday, 8 October 2018

8th அக்டோபர் முக்கிய நிகழ்வுகள்

ஸ்னூக்கர் போட்டி இந்திய சிறுமி சாம்பியன்

உலக ஸ்னூக்கர் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சிறுமி கீர்த்தனா பாண்டியன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ரஷ்யாவின் செயின்ட் பீட் டர்ஸ்பர்க் நகரில் 16 வயதுக் குட்பட்டோருக்கான உலக ஐபி எஸ்எப் ஸ்னூக்கர் போட்டி நடை பெற்றது. சர்வதேச பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் கூட்டமைப்பு இந்தப் போட்டியை நடத்தி யது.

மர்மம் விலகாத நிலையில் இண்டர்போல் தலைவர் ராஜினாமா

சர்வதேச குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் காவல்அமைப்பான இண்டர்போல் தலைவர் பற்றியே மர்மமான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் இண்டர்போல் தலைவர் பொறுப்புவகித்து வந்த மெங் ஹாங்வெய் ராஜினாமா செய்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச காவல் அமைப்பான இண்டர்போலுக்கு முதன்முறையாக சீனாவிலிருந்து மெங் ஹாங்வெய் என்பவர் பொறுப்பை ஏற்றார். அவர் ஒரு முறை சீனாவில் பொது பாதுகாப்பு துணை அமைச்சராகப் பணியாற்றினார். குற்றவியல் நீதி மற்றும் காவல் ஆகிய துறைகளில் 40 ஆண்டுகால அனுபவம் அவருக்கு உண்டு.

இன்ஷூரன்ஸ் விற்பனையில் ப்ளிப்கார்ட்: பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

இ-காமர்ஸ் நிறுவனமான ப்ளிப்கார்ட், இன்ஷூரன்ஸ் விற்பனையில் இறங்க உள்ளது. இதற்காக பஜாஜ் அலை யன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய் துள்ளது. இது தொடர்பாக அந்த நிறு வனம் வெளியிட்டுள்ள செய்தியில்,


இன்ஷூரன்ஸ் திட்டங்களை விற் பனை செய்வதற்கான கார்ப்பரேட் ஏஜெண்ட் லைசன்ஸ் கிடைத்துள்ளது. பஜாஜ் அலையன்ஸ் பொதுக் காப் பீடு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய் யப்பட்டுள்ளது. இதன் மூலம் ப்ளிப் கார்ட் தளத்தில் விற்பனை செய்யப் படும் அனைத்து பிராண்ட் மொபைல் போன்களின் பாதுகாப்புக்கும் இன்ஷூரன்ஸ் தீர்வுகளை அளிக்க முடி யும். இந்த திட்டம் அக்டோபர் 10-ம் தேதி தொடங்க உள்ள `பிக் பில்லியன் டே’ விற்பனையிலிருந்து தொடங்கப் படும் என்று குறிப்பிட்டுள்ளது.a

No comments:

Post a Comment