பொருளாதாரத்துக்கான
நோபல் பரிசு:
வில்லியம்
நார்தாஸ்,
பால்
ரோமர் வென்றனர்
2018
ஆம்
ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான
நோபல் பரிசை அமெரிக்காவைச்
சேர்ந்த வில்லியம் நார்தாஸ்,
பால்
ரோமர் ஆகியோர் பெறவுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவீடனைச்
சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட்
நோபல் நினைவாக மருத்துவம்,
இயற்பியல்,
வேதியியல்,
இலக்கியம்,
அமைதி,
பொருளாதாரம்
ஆகிய துறைகளில் சாதனை
படைத்தவர்களுக்கு நோபல்
பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த
நிலையில் இன்று (திங்கட்கிழமை)
பொருளாதாரத்துக்கான
நோபல் பரிசு வழங்கப்பட்டது.
பொருளாதாரத்துக்கான
நோபல் பரிசை அமெரிக்காவைச்
சேர்ந்த பொருளாதார அறிஞர்களான
வில்லியம் நார்தாஸ்,
பால்
ரோமர் ஆகியோர் வென்றுள்ளனர்.
வில்லியம்
நார்தாஸ் பருவநிலை மாற்றம்
தொடர்புடைய பொருளாதார
ஆய்வுகளுக்காக நோபல் பரிசைப்
பெறுகிறார்.
யூத்
ஒலிம்பிக் 2018
: பளு
தூக்குதலில் இந்தியாவுக்கு
முதல் தங்கம்
அர்ஜெண்டினாவில்
நடைபெற்று வரும் யூத்
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு
முதல் தங்கத்தைப் பெற்றுத்
தந்திருக்கிறார் ஜெர்மி
லலிரினுங்கா.
62
கிலோ
எடைப் பிரிவில் 247
எடையை
வெற்றிகரமாக தூக்கி ஜெர்மி
முதல் இடம் பிடித்திருக்கிறார்.
இதில்
இரண்டாவது இடம் துருக்கியை
டாப்டாஸுக்கு,
மூன்றாவது
இடம் கொலம்பியாவைச் சேர்ந்த
வில்லருக்கும் கிடைத்துள்ளது.
ஐசிசி
தரவரிசை:
அசைக்க
முடியாத இடத்தில் விராட்
கோலி,
ஜஸ்பிரித்
பும்ரா;
3 இடங்களில்
இந்திய வீரர்கள்
ஐசிசி
ஒருநாள் போட்டிக்கான
பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில்
இந்திய அணியின் கேப்டன் விராட்
கோலியும்,
பந்துவீச்சாளர்கள்
வரிசையில் இந்திய வீரர்
ஜஸ்பிர்த் பும்ராவும் தொடர்ந்து
முதலிடத்தில் இருந்து
வருகின்றனர்.
சர்வதேச
கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)
ஒரு
போட்டிக்கான தரவரிசைப்
பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
இதில்
பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப்
பட்டியலில் இந்திய அணியின்
கேப்டன் விராட் கோலி 884
புள்ளிகளுடன்
முதலிடத்தில் உள்ளார்.
அதைத்
தொடர்ந்து 842
புள்ளிகளுடன்
ரோஹித் சர்மா 2-வது
இடத்தில் உள்ளார்.
இந்தியர்
தலைமையில் போயிங் எப்-15
போர்
விமான திட்டம்
போயிங்
நிறுவனத்தின் எப்-15
போர்
விமான திட்டத்துக்குத் தலைமை
தாங்கும் பொறுப்புக்கு
இந்தியரான பிரத்யுஷ் குமார்
தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
போயிங்
நிறுவனம் வெளியிட்ட
செய்திக்குறிப்பில் இவ்வாறு
தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment