28th March Current Affairs for TNPSC Exam
- இந்திய விமானப்படையில், புதிய வகை CH47F(I) என்ற சினூக் ஹெலிகாப்டர்கள்” இணைத்துக் கொள்ளப்பட்டது. இந்த சினூக் ரக இராணுவ ஹெலிகாப்டர்களை இந்தியா, அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தினடமிருந்து வாங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் 2015ல் கையெழுத்தாகியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் 2015ல் கையெழுத்தாகியுள்ளது.
- இராணுவத்தில் பயன்படுத்தப்படும் சிறிய ரக பீரங்கிகள், தளவாடங்கள், எரிபொருள் ஆகியவற்றை, எடுத்துச் செல்வதற்கும் பேரிடர் மீட்பு பணிகளுக்கு இந்த ஹெலிகாப்டர்கள் பயன்படும்.
- 4 சினூக் ரக ஹெலிகாப்டர்களை முதற்கட்டமாக சண்டிகரின் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படை தளபதி பி.எஸ். தனெனா அறிமுகம் செய்துள்ளார்.
- மத்திய இடைநிலைக் கல்வி வாரியமானது (CBSE) இணைய வாயிலாக பயன்படுத்தக்கூடிய சிக்சாவானி (Shikshavani) எனும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இது சரியான நேரத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு முக்கியமான தகவல்களைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- சீனாவின் உலகளாவிய கட்டுமான திட்டமான “Belt Road Initiative” (BRI) திட்டத்தில் இணைவதற்கு “இத்தாலி” நாடு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகி உள்ளது.
- G7 நாடுகளில் இருந்து Belt Road Initiative திட்டத்தில் இணையும் முதலாவது நாடு இத்தாலி ஆகும்.
- மஸ்கட் நகரில் நடைபெற்ற 2019ம் ஆண்டிற்கான ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியின் 21 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் “அர்ச்சனா காமத்” வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
- இப்போட்டியில் ஜப்பானின் சாட்சுகி ஓடோ தங்கம் வென்றுள்ளார்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த சத்யன் ஞானசேகரன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
- இத்தாலி விண்வெளி மையத்திற்காக ஐரோப்பாவின் வேகா விண்கலமானது பிரிஸ்மா (PRISMA) என்று பெயரிடப்பட்ட ஒரு புதிய புவிக் கண்காணிப்பு செயற்கைக் கோளை அதன் சுற்றுவட்டப் பாதைக்கு சுமந்து சென்றுள்ளது.
- இந்தச் செயற்கைக் கோளானது சூரிய ஒத்தியக்கச் சுற்றுவட்டப் பாதையில் செயல்பட உள்ளது.
- பாகிஸ்தான் நாட்டின் தேசிய நாள் விழா (23.03.19) கொண்டாட்ட விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற “மலேசிய பிரதமர் மஹதிர் முகம்மது” அவர்களுக்கு பாகிஸ்தான் நாட்டின் குடிமக்களுக்கு அளிக்கப்படும் “நிஷான்-இ-பாகிஸ்தானி” எனப்படும் மிக உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
- இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா மற்றும் பாகிஸ்தானின் உயரிய விருதான நிஷான்-இ-பாகிஸ்தானி ஆகிய இரண்டு விருதுகளையும் பெற்ற இந்தியர் மொராஜி தேசாய் ஆவார்.
- 2018ம் ஆண்டிற்கான “வியாஸ் சம்மன்” விருதானது, இந்தி எழுத்தாளர் “லீலாதார் ஜகுதி” (Leeladhar Jagudi) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- கே.கே. பிர்லா அறக்கட்டளையால் “ஜித்னே லோக் உட்னி பிரேம்” கவிதைகள் தொகுப்பிற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
- சர்வதேச சாதனையாளர்கள் தினம் – மார்ச் 24 (International Day for Achievers)
- ஏதாவது ஒரு துறையில் தலைசிறந்த சாதனைகளை நிகழ்த்திய சாதனையாளர்களை கௌரவிப்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24ம் தேதி சர்வதேச சாதனையாளர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
- உலக காசநோய் தினம் இதே நாளில் கடைபிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment