29th March Current Affairs for TNPSC Exam
- இந்தியக் கடற்படையின் அணுசக்தி, உயிரியல் மற்றும் வேதியியல் பொருள்களுக்கு எதிரான பாதுகாப்பு வசதியானது (NBCTF – Nuclear, Biological and Chemical Training Facility) லோனவாலாவில் உள்ள “ஐஎன்எஸ் சிவாஜி”யில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
- இதற்கு அபிஹிதயா என சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளது. அதன் பொருள் “ஊடுருவ இயலாத” என்பதாகும்.
- மின் மற்றும் மின்னணு உபகரணங்கள் மற்றும் குளிர்சாதன வாயு மற்றும் சிறப்பு கழிகளை மறுசுழற்சி செய்வதற்கான உலகின் மிகப் பெரிய மின் கழிவு மறுசுழற்சி மையம் துபாயின் துபாய் தொழிற்துறை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது.
- இங்கு சுமார் 39,000 டன் மின் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகிறது.
- தைபே (Taipei)-யில் நடைபெற்ற 12வது ஆசிய ஏர்கன் சாம்பியன் ஷிப் போட்டியில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானுபாகர் மற்றும் சௌரப் சௌத்ரி இணை தங்கம் வென்றுள்ளது.
- இந்தியாவின் நிலவைப் பற்றிய ஆராய்ச்சியின் திட்டமான சந்திராயன் – 2 திட்டம் அடுத்த மாதம் செலுத்தப்பட உள்ளது. இதில் பூமியில் இருந்து நிலவின் தூரத்தை துல்லியமாக அளவிடுவதற்கு உதவும் நாசாவின் லேசர் கருவியான “ரெட்ரோரிப்ளெக்டர்” கருவிகளைச் சுமந்து செல்லவுள்ளது.
- ரெட்ரோரிப்ளெக்டர் என்பது பூமியிலிருந்து அனுப்பும் லேசர் ஒளி சமிக்ஞைகளை பெற்று திருப்பி அனுப்பும் அதிநவீன ஆடியாகும்.
- நமது நாட்டின் செயற்கைகோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் வகையில் முழுவதும் இந்திய தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி விண்ணில் இருந்த செயற்கைகோளை இந்தியாவின் விண்கல ஆயுதமான “A-SAT” (Anti-Satellite) வெற்றிகரமாக தாக்கி அழித்துள்ளது.
- இதற்கு “மிஷன் சக்தி” எனப் பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு அடுத்ததாக இந்தியா இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
- குரோஷிய நாட்டின் உயரிய விருதான Grand order of the king of Tomislav என்ற விருதானது இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- 2020ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாக குறையும் என பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான பிட்ச் (Fitch) தெரிவித்துள்ளது.
- வங்கதேச விடுதலை நாள் – மார்ச் 26 (Independence day of Bangladesh)
- வங்கதேச நாடானது, 1971ம் ஆண்டு மார்ச் 25ம் தேதியின் இரவில் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை அடைந்ததை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 26 அன்று வங்கதேச விடுதலை நாள் அனுசரிக்கப்படுகிறது.
- சுதந்திர வங்க தேசத்தின் நிறுவனத் தந்தை ஷேக் முஜபர் ரஹ்மான் ஆவார்.
No comments:
Post a Comment