Monday 22 April 2019

22nd April Current Affairs for TNPSC Exam

  • 2019ம் ஆண்டின் உலக பத்திரிக்கைச் சுதந்திரக் குறியீட்டில் மொத்தம் உள்ள 180 நாடுகளில் இந்தியா 140வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தக் குறியீட்டில் நார்வே முதலிடத்தில் உள்ளது. இந்த அறிக்கையானது எல்லைகளற்ற செய்தியாளர்கள் (Reporters without Borders) என்ற அமைப்பால் வெளியிடப்பட்டது.

  • பொருளாதார நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கானG-20 மாநாடானது 2020 ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்-தில் நடைபெற உள்ளது.
  • இந்த ஆண்டுக்கான (2019) G-20 மாநாடு ஜப்பானின் ஒசாகாவில் நடைபெறுகிறது.
  • 2018ல் G-20 மாநாடு அர்ஜென்டினாவின் ப்யூனஸ் அயர்ஸ்-ல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

  • இந்தியாவைச் சேர்ந்த “பஜ்ராங் புனியா” என்பவர் ஆண்களுக்கான 65 கிலோ கிராம் ப்ரீஸ்டைல் பிரிவுத் தரவரிசையில் உலகில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
  • இந்தத் தரவரிசையானது ஒருங்கிணைந்த மல்யுத்த அமைப்பால் வெளியிடப்பட்டது.

  • முதன்முறையாக விண்வெளியில் உள்ள நமது பேரண்டத்தில் மிகப் பழமையான ஹீலியம் ஹைட்ரைட் (HeH+) அயனியை அமெரிக்காவின் நாசா கண்டறிந்துள்ளது.
  • இளம் பிரபஞ்சத்தில் குறைந்து வரும் வெப்பநிலையானது, அயனியாக்கப்பட்ட ஹைட்ரஜன் மற்றும் நடுநிலையான ஹீலியம் அணுக்கள் வினைபுரிவதற்கு அனுமதிக்கிறது.

  • சனிக்கிரகத்தின் மிகப்பெரிய நிலவான டைட்டன் – ஐ ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட நாசாவின் காசினி விண்கலமானது டைட்டனில் மீத்தேன் ஏரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  • மொகாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற 4வது அப்துல் கலாம் புத்தாக்க மாநாட்டில் டாக்டர் A.K. சிங் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
  • டாக்டர். A.K.. சிங், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) உயிர் அறிவியல் துறை இயக்குநராக உள்ளார்.

  • லிபினோன் குடியரசிற்கான இந்திய தூதுவராக கயல் அஜீஸ்கான் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மேலும் தென் ஆப்பிரிக்க குடியரசிற்கான இந்திய உயர் ஆணையராக ஜெய்தீப் சர்கார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment