Friday 28 April 2017

Daily Current Affairs For Competitive Exam - 29th April

உலகம் :
இந்தியா - சைப்ரஸ் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து
பிரதமர் நரேந்திர மோடி-சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனஸ்டாசியாட்ஸ் முன்னிலையில், இரு நாடுகளிடையே வெள்ளிக்கிழமை கையெழுத்தான ஒப்பந்தங்களை பரிமாறிக் கொள்ளும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்

இந்தியா - சைப்ரஸ் நாடுகளுக்கு இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் வெள்ளிக்கிழமை கையெழுத்தாகின.
தில்லி வந்துள்ள சைப்ரஸ் நாட்டு அதிபர் நிகோஸ் அனஸ்டாசியாட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, இரு தரப்பு உறவுகள் குறித்தும், பிராந்திய விவாகரங்கள் குறித்தும் இருவரும் விரிவாக விவாதித்தனர்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு, இந்தியா-சைப்ரஸ் இடையே விமானச் சேவை, கடல் வழி வர்த்தகம் ஆகியவற்றை ஊக்குவிப்பது உள்பட 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
'பர்தா' அணியத் தடை: ஜெர்மனி நாடாளுமன்றத்தில் தீர்மானம்
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக முகத்தை முழுவதுமாக மறைக்கும் வகையிலான பர்தா முகத்திரை அணிவதற்கு ஜெர்மனி தடை விதித்துள்ளது.
கிறிஸ்துமஸ் சந்தைத் தாக்குதல் உள்ளிட்ட பல பயங்கரவாதத் தாக்குதல்கள் அந்நாட்டில் நடைபெற்றதைத் தொடர்ந்து 'பர்தா' முகத்திரை தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தின்படி, பாதுகாப்பு காரணங்களுக்காக பொது இடங்களில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் அளவுக்கு திரை அணியத் தடை விதிக்கப்படுகிறது.
அதன்படி தேர்தல் அதிகாரிகள், நீதித்துறை அலுவலர்கள், ராணுவத்தினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அவர்களது பணியின் போது முகத்திரை அணிந்து சேவையாற்றுவதற்கு இந்த தடை பொருந்தும்.
இந்தியா:
நாடு முழுவதும் 95 நாள் சுற்றுப் பயணம்: இன்று தொடங்குகிறார் அமித் ஷா
நாடு முழுவதும் 95 நாள் சுற்றுப் பயணத்தை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா சனிக்கிழமை தொடங்குகிறார்.
வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலைக் குறிவைத்து அவர் இந்தப் பயணத்தைத் தொடங்குகிறார். குறிப்பாக, கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பாஜக தோல்வியடைந்த 120 தொகுதிகளில் கட்சியை வலுப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் தனது பயணத்தைத் தொடங்கும் அமித் ஷா, ஒவ்வொரு மாநிலத்திலும் 3 நாள்கள் வரை தங்குவதற்கு திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக, அவர், தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், ''பாஜகவின் வலிமை, கட்சியை விரிவுபடுத்துதல், வாக்கு விகிதம் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக நாடு தழுவிய பயணத்தை மேற்கொள்கிறேன்'' என்றார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் மேலாளர் வேலை
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரப்பப்பட உள்ள 45 மேலாளர்(பாதுகாப்பு) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Manager (Security)
காலியிடங்கள்: 45
சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950 + இதர சலுகைககள்.
வயதுவரம்பு: 01.01.2017- ஆம் தேதியின்படி 21 - 35க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.50ம், மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.300 செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Manager-Security’ by Speed/ Registered post to Chief Manager (Recruitment Section), HRM Division, Punjab National Bank, HO: 7, Bhikhaiji Cama Place, New Delhi-110607
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.05.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விளையாட்டு:
ஸ்டட்கார்ட் ஓபன் அரையிறுதியில் ஷரபோவா
ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஸ் டட்கார்ட் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மரியா ஷரபோவா அரையிறுதிக்கு முன்னேறினார்.
முன்னதாக நடைபெற்ற காலிறுதியில் எஸ்டோனியாவின் ஆனெட் கோன்டாவெய்ட்டை எதிர்கொண்ட ஷரபோவா, 6-3, 6-4 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்றார்.
ஷரபோவா, சனிக்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதியில் பிரான்ஸின் கிறிஸ்டினா மெலாடெனோவிக்கை எதிர்கொள்கிறார். முன்னதாக கிறிஸ்டினா தனது காலிறுதியில், ஸ்பெயினின் செளரஸ் நவாரோவை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தியிருந்தார்.
வர்த்தகம் :
எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் லாபம் ரூ.529 கோடி
எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நான்காம் காலாண்டில் ரூ.529.19 கோடியை லாபமாக ஈட்டியது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான வினய் ஷா கூறியதாவது:
எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.3,662 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த 2015-16 நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.3,274 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 12 சதவீதம் அதிகமாகும். நிகர வட்டி வருவாய் 27 சதவீதம் அதிகரித்து ரூ.1,040 கோடியாக காணப்பட்டது.
நிகர லாபம் ரூ.448.02 கோடியிலிருந்து 18 சதவீதம் அதிகரித்து ரூ.529.19 கோடியாக இருந்தது. வழங்கப்பட்ட மொத்த கடன் 15 சதவீதம் உயர்ந்து ரூ.15,192 கோடியாக காணப்பட்டது.
2017 மார்ச் மாத இறுதி நிலவரப்படி மொத்த வாராக் கடன் விகிதம் 0.45 சதவீதத்திலிருந்து குறைந்து 0.43 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 0.22 சதவீதத்திலிருந்து சரிந்து 0.14 சதவீதமாகவும் காணப்பட்டது.


No comments:

Post a Comment