Thursday, 27 April 2017

Daily Current Affairs For Competitive Exam - 28th April

 உலகம் :

.நா. மனித உரிமைகள் ஆணைய பிரதிநிதிக்கு வட கொரியாவில் ஆய்வு நடத்த அனுமதி
வட கொரியாவில் உடல் ஊனமுற்றோர் உரிமைகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய .நா. மனித உரிமைகள் ஆணையத்தின் பிரதிநிதிக்கு அந்த நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.
.நா. மனித உரிமைகள் ஆணைய அதிகாரியொருவர் வட கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இது தொடர்பாக அந்த அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

வட கொரியாவில் உள்ள உடல் ஊனமுற்றோர் நலன் மற்றும் உரிமைகள் குறித்த நிலவரத்தை அறிய .நா. மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பில் சிறப்பு அதிகாரி கேத்தலீனா அகியார் அந்த நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். உடல் ஊனமுற்றோர் நிலை, அதிலும் குறிப்பாக, உடல் ஊனமுற்ற சிறுவர்கள் குறித்தும், அவர்களின் நலனுக்காக அந்நாட்டு அரசு இயற்றியுள்ள சட்டங்கள், எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நேரடியாக அறிய இந்தப் பயணம் உதவும். அவர் 6 நாள் பயணமாக அடுத்த புதன்கிழமை வட கொரியா செல்கிறார் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வரி விகிதங்களில் அதிரடி மாற்றம்
அமெரிக்க நிறுவனங்கள், தனி நபர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினருக்குமான வருமான வரி விகிதங்களைக் குறைத்து அதிரடி மாற்றங்களை டிரம்ப் அரசு அறிவித்தது.
அந்நாட்டு நிதி அமைச்சர் ஸ்டீவன் மெனூச்சின் இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தனி நபர்களுக்கு இதுவரை இருந்த 7 வகையான வருமான வரி விகிதம் 10,25,35% என்று 3 பிரிவுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
வரி விலக்கு வரம்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் பதிவு செய்துள்ள அமெரிக்க நிறுவனங்கள் ஒரே ஒரு முறை சிறப்பு வரி செலுத்தி தாய் நாட்டில் புதிய குறைந்த வரி விகிதத்தில் தொழில் தொடங்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தொழிலகங்களுக்கு 15% என்கிற ஒரே வரி விகிதம் விதிக்கப்படுகிறது.
முன்னாள் அதிபர் ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்காக அனைத்துப் பிரிவினரின் வருவாய்க்கும் விதிக்கப்பட்ட கூடுதல் 3.8% வரி ரத்து செய்யப்படும். புதிய வரி விகிதங்களால் வரி ஏய்ப்பு குறையும், அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என்றார் அவர்.
உள்நாட்டில் தயாரான விமானம் தாங்கிக் கப்பல்: அறிமுகப்படுத்தியது சீனா
முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பலை சீனா புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.
சீனாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பலான இது, வரும் 2020-ஆம் ஆண்டு சீனக் கடற்படையில் சேர்த்துக்கொள்ளப்படும என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே, உக்ரைனிடமிருந்து வாங்கியுள்ள விமானம் தாங்கிக் கப்பலை சீனா பயன்படுத்தி வரும் நிலையில், இந்தக் கப்பலுடன் சேர்ந்து சீன விமானம் தாங்கிக் கப்பல்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்கிறது.
கடந்த 2013-ஆம் ஆண்டு இந்தப் புதிய விமானம் தாங்கிக் கப்பலை சீனா உருவாக்கத் தொடங்கியது. அந்த நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள டாலிடான் கப்பல்கட்டுத் தளத்தில், இந்த விமானம் தாங்கிக் கப்பலுக்கான தளம் 2015-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
இந்த நிலையில், இந்தப் புதியக் கப்பல் கட்டுமான தளத்திலிருந்து புதன்கிழமை இழுத்து வரப்பட்டு, கடல் பகுதியில் விடப்பட்டது.
இந்தியா:
தில்லியில் மே 1 இல் ஸ்ரீராமானுஜர் நினைவு தபால் தலை வெளியீடு
ஸ்ரீராமானுஜரின் 1000-ஆவது அவதார திருநாளை முன்னிட்டு அவரது நினைவைப் போற்றும் வகையில் ஸ்ரீராமானுஜர் நினைவுத் தபால் தலை மே 1 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் கூறியதாவது:
ஸ்ரீராமானுஜரின் பிறந்தநாளான மே 1-ஆம் தேதி தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் ஸ்ரீராமானுஜர் நினைவுத் தபால்தலை வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் 'தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன், தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினராகிய நான், ஆர்.எம்.கே. கல்விக் குழுமத் தலைவர் ஆர்.முனிரத்தினம், தொழிலதிபர்கள் ஜெம் குமார், குமரேசன், தாம்பரம் இந்து மிஷன் அறக்கட்டளை செயலர் டி.கே.சீனிவாசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
ஏழைகளுக்கும் விமானச் சேவை: புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து பிரதமர் உரை
குறைந்த கட்டணத்தில் உள்நாட்டில் விமானப் பயணம் மேற்கொள்ளும் 'உடான்' திட்டத்தை ஹிமாசலப் பிரதேச மாநிலம், சிம்லாவில் வியாழக்கிழமை கொடி அசைத்துத் தொடங்கி வைக்கும் பிரதமர் நரேந்திர மோடி.
ஏழை எளிய மக்களும் விமானத்தில் பயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் விமானப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சிறு நகரங்களுக்கு விமானச் சேவையை நீட்டிப்பதற்கும், ஏழை எளியோர் குறைந்த கட்டணத்தில் விமானப் பயணம் மேற்கொள்வதற்கும் வழிவகுக்கும் 'உடான்' என்ற புதிய திட்டத்தின் கீழான முதல் விமானச் சேவையை, ஹிமாசலப் பிரதேசத் தலைநகர் சிம்லாவில் உள்ள ஜுப்பர்ஹட்டி விமான நிலையத்தில், பிரதமர் மோடி வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இத் திட்டத்தின்கீழ் சிம்லாவிலிருந்து தில்லிக்கு ரூ. 2,500 கட்டணத்தில், விமானத்தில் செல்லலாம்.
தமிழகம்:
1,953 காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியீடு: டி.என்.பி.எஸ்.சி.
குரூப் 2 பிரிவில் காலியாகவுள்ள 1,953 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இப்பதவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணைய வழியில் வரவேற்கப்படுகின்றன.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 26 ஆம் தேதி கடைசி நாளாகும். ஆகஸ்ட் 6 ஆம் தேதி தேர்வு நடைபெறும். விண்ணப்பங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளங்களின் வழியே பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
விளையாட்டு:
ஸ்டட்கார்ட் ஓபன்: முதல் சுற்றில் ஷரபோவா வெற்றி
ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஸ்டட்கார்ட் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் மரியா ஷரபோவா தனது முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் 15 மாதங்களுக்கு விளையாடத் தடை விதிக்கப்பட்டிருந்த ஷரபோவா, ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ் போட்டியின் மூலம் மீண்டும் களம் காண்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ஷரபோவா தனது முதல் சுற்றில் இத்தாலியின் ராபர்டா வின்சியை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் ஷரபோவா 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
அவர் தனது 2-ஆவது சுற்றில் சகநாட்டு வீராங்கனையான எகாடெரினா மகரோவாவை எதிர்கொள்கிறார்.
ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதியில் சிந்து
ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.
முன்னதாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில், ஜப்பானின் அயாவ்ஹோரியை சந்தித்தார் சிந்து. இருவருக்கும் இடையே 40 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் 21-14, 21-15 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றிபெற்றார்.
அடுத்து நடைபெறவுள்ள காலிறுதிச்சுற்றில் சீனாவின் ஹி பிங்ஜியாவுடன் மோதுகிறார் சிந்து. இதனிடையே, ஆடவர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்றிருந்த அஜய் ஜெயராம் தனது 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார். அந்தச் சுற்றில் சீன தைபேவின் சு ஜென் ஹாவுடன் மோதிய ஜெயராம், 19-21, 10-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார்.
வர்த்தகம் :
லக்ஷ்மி விலாஸ் வங்கி லாபம் 42% உயர்வு
தனியார் துறையைச் சேர்ந்த லக்ஷ்மி விலாஸ் வங்கியின் சென்ற நிதி ஆண்டு லாபம் 42.08 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
லக்ஷ்மி விலாஸ் வங்கி சென்ற நிதி ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் ரூ.864.99 கோடி வருவாய் ஈட்டியது. முந்தைய 2015-16 நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.758.84 கோடியாக இருந்தது.
நிகர லாபம் ரூ.49.07 கோடியிலிருந்து 6.29 சதவீதம் அதிகரித்து ரூ.52.16 கோடியாக காணப்பட்டது.
2016-17 முழு நிதி ஆண்டில் மொத்த வருவாய் ரூ.2,872.83 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.3,349.42 கோடியாகவும், நிகர லாபம் 42 சதவீதம் அதிகரித்து ரூ.256.07 கோடியாகவும் காணப்பட்டது.

 
 









 
 












No comments:

Post a Comment