Tuesday, 21 August 2018

21 ஆகஸ்ட் முக்கிய நிகழ்வுகள்


விளையாட்டு

துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றார் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி


ஆசிய விளையாட்டில் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்றார்.
10 மீட்டர் ஏர் பிஸ்டலில் பிரிவில் சவுரப் தங்கம் வென்றார். அதே போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா வெண்கலம் வென்றார்.

50 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளி பதக்கம் வென்றார்.
ஆசிய விளையாட்டில், இதுவரை இந்தியாவுக்கு 3 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் கிடைத்துள்ளது.

உலகம்

மீண்டும் போட்டி: கனடா பிரதமர் அறிவிப்பு

கனடாவில் அடுத்தாண்டு நடக்கவுள்ள பிரதமர் தேர்தலில், மீண்டும் போட்டியிட உள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமராக இருப்பவர் லிபரல் கட்சி தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ, 46. இவர் 2015ல் முதன்முறையாக பிரதமரானார். கனடாவின் இரண்டாவது இளம் பிரதமர் என்ற பெருமைக்குரியவர்.அங்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரதமர் தேர்தல் நடக்கிறது. அடுத்தாண்டு நடக்க உள்ள தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக ஜஸ்டின் அறிவித்துள்ளார்.

கியூபெக் மாகாணத்தில் உள்ள பபிநியோ தொகுதியில் போட்டியிட உள்ளார். இத்தொகுதியிலிருந்து 2008, 2011, 2015 என தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். ''நாட்டில் ஏழை - பணக்காரர் இடைவெளியை குறைப்பதே எனது லட்சியம்'' என ஜஸ்டின் தெரிவித்துள்ளார்.இந்தியாவிற்கு சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் வந்த ட்ரூடோ, 10 நாட்களுக்கும் மேலாக ஆக்ரா உட்பட நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரத் தடைக்கு அமெரிக்கா அடிமையாகிவிட்டது: ஈரான்

பொருளாதாரத் தடைக்கு அமெரிக்கா அடிமையாகிவிட்டதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிஃப் தெரிவித்துள்ளார்.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் நடந்த நேர்காணலில் இதனை அவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, "ஈரான் மீது அமெரிக்கா விதிக்கும் பொருளாதாரத் தடைகளால் ஈரான் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என அந்நாடு இன்னும் பாடம் கற்பிக்கவில்லை

அணுசக்தி ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டியதில்லை. இந்த அணுசக்தி ஒப்பந்தத்தையே அமெரிக்க அமல்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். அமெரிக்கா பொருளாதாரத் தடைகளுக்கு அடிமையாகிவிட்டது.
அமெரிக்காவின் பொருளாதராத் தடைகள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மக்கள் உணவு, மருந்து வாங்க சிரமப்படுகிறார்கள்அமெரிக்காவுடனான நட்பு நாடுகளே அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை எதிர்க்கின்றனர்'' என்றார்.

வணிகம்


புதிய தொழில் கொள்கை குறித்து மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு ஆய்வு
விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் தொழில்துறைக்கு வகுக்கப்பட்டுள்ள புதிய கொள்கைகளை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ஆய்வு செய்தார்.


ஏற்றுமதியை அதிகரிப்பது தொடர்பாக வர்த்தக செயலாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்தியாவின் ஏற்று மதியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் வகையில் அரசு செயலாற்றிவருவதாகவும் அவர் கூறினார்.

100 ரூபாய் வருவாய் ஈட்ட 111ரூபாய் செலவிடும் ரயில்வே துறை: நிதியாண்டின் முதல் 4 மாதங்களில் திணறல்
இந்திய ரயில்வே துறையின் நடப்பு நிதியாண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதத்தில் 100 ரூபாய் ஈட்டுவதற்காக 111 ரூபாய் செலவு செய்து வருவது தெரியவந்துள்ளது.
ரயில்வே துறையின் இயக்கச் செலவு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்தது, 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்தியது, ஓய்வூதியச் செலவு போன்றவற்றால்,இந்த அளவுக்கு வரவுக்கு மீறிய செலவு உண்டாகக் காரணம் என்று கூறப்படுகிறது.
2018-19-ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதத்தில் ரயில்வேயின் இயக்கச் செலவு 111.51 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதாவது, ஒவ்வொரு 100 ரூபாயை ஈட்டுவதற்காகவும் 111 ரூபாயைச் செலவிடுகிறது.
ரயில்வே துறை தான் இயக்கும் ரயில்கள், விளம்பரங்கள் உள்ளிட்ட இதர வழிகள் மூலம் கிடைக்கம் வருவாயை எவ்வாறு திறன்மிக்க வகையில், முதலீட்டுச் செலவுக்கும், இயக்கச் செலவுக்கும் பிரித்துப் பயன்படுத்துகிறது என்பதைப் பொருத்து அதன் செயல்பாட்டை அறிய முடியும்.No comments:

Post a comment